Published:Updated:

"பிக் பாஸ் சம்பளத்தைவிட அதுக்கு நாங்க செலவு செய்தது அதிகம்!"- நாடியா எவிக்ஷனுக்கு கணவர் அதிருப்தி!

பிக் பாஸ் - 15

"மலேஷியத் தமிழர்கள்லாம் அவங்களுக்கு ஆதரவா ஓட்டுப் போடலாம்னா டெக்னிக்கலா அதுல நிறைய சிக்கல் இருந்துருக்கு. நானே அவங்களுக்கு ஆதரவா ஓட்டுப்போட இந்தியாவுல இருக்கிற ஒரு மொபைல் நம்பரைப் பயன்படுத்தி லாக் இன் பன்ணித்தான் போட முடிஞ்சது."

"பிக் பாஸ் சம்பளத்தைவிட அதுக்கு நாங்க செலவு செய்தது அதிகம்!"- நாடியா எவிக்ஷனுக்கு கணவர் அதிருப்தி!

"மலேஷியத் தமிழர்கள்லாம் அவங்களுக்கு ஆதரவா ஓட்டுப் போடலாம்னா டெக்னிக்கலா அதுல நிறைய சிக்கல் இருந்துருக்கு. நானே அவங்களுக்கு ஆதரவா ஓட்டுப்போட இந்தியாவுல இருக்கிற ஒரு மொபைல் நம்பரைப் பயன்படுத்தி லாக் இன் பன்ணித்தான் போட முடிஞ்சது."

Published:Updated:
பிக் பாஸ் - 15
நேற்று முன்தினம் (17/10/21) நிகழ்ந்த பிக் பாஸ் சீசன் 5ல் முதல் எலிமினேஷனில் மலேஷியாவிலிருந்து கலந்து கொண்டிருந்த நாடியா சாங் வெளியேறியுள்ளார்.

"நான் 'முன்னாடி வாங்க'னு அடிக்கடிச் சொன்னேன். நீங்க அதைக் கவனிக்கலை போல, அதான் 'காணாமல் போனவர்கள்' (எதையாவது செய்து தங்கள் இருப்பைத் தெரிவித்துக் கொண்டே இருக்காமல் போனவர்கள், இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நிகழ்ச்சிக்குக் கன்டென்ட் தராதவர்கள்) பட்டியலில் இடம் பிடித்து இப்ப நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறி இருக்கிறீர்கள்" எனக் கமல் சொன்னதும், "நான் காணாமப் போயிட்டதாச் சொல்றாங்கன்னா, என்னைக் கவனிச்சிட்டே இருந்தாங்கனுதானே அர்த்தம்" என அதை நாடியா சமாளித்த விதம் அழகு.

இந்நிலையில், முதல் ஆளாக ஷோவிலிருந்து நாடியா வெளியேறியதில் அவருடைய குடும்பத்தினர் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார்கள் எனத் தகவல் வர, அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

நாடியா
நாடியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"உலகெங்கும் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கணும்னு நினைச்சுதான் வெளிநாடுகள்ல வசிக்கிற தமிழர்களையும் நிகழ்ச்சிக்கு அழைக்கிறாங்க. போன சீசன்ல முகேன் கலந்துகிட்ட போதெல்லாம் மலேஷியத் தமிழர்கள் மத்தியில் இந்த ஷோவுக்கு நல்ல ஆதரவு.

இந்த வருஷம் என் சகோதரியை அந்த நிகழ்ச்சிக்குக் கேட்டபோது நாங்கெல்லாம் சந்தோஷப் பட்டோம். தமிழர்கள் மத்தியில் ரொம்பவே பேசப்படற ஒரு ஷோவுல கலந்துக்கிடறது மூலமா நல்ல ரீச் கிடைக்கும்னு நம்பினோம்.

ஆனா, ரெண்டே வாரத்துல வெளியில அனுப்பிட்டாங்க. ஷோவுல சேனல் எதிர்பார்த்த பர்ஃபார்மன்ஸ் பண்ணலைனு சொல்றாங்க. எந்தவொரு விஷயத்துலயும் தேவையில்லாம தலையிடறதை விரும்ப மாட்டாங்க நாடியா. ஒரு நடிகைதான்னாலும் கேமராவுக்காக ஓவரா நடிக்கிறதும் அவங்களுக்குப் பிடிக்காது. இதனாலேயே அந்த வீட்டுக்குள் அவங்கபாட்டுக்கு இருக்காங்க. அப்படி இருக்கறதுதான் தப்புனு இப்ப புரியுது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எங்களுக்கு என்ன ஆதங்கம்னா இன்னும் சில நாள்கள் அவங்களுக்கு அவகாசம் தந்திருக்கலாம். மலேஷியாவுல இருந்து கூட்டிட்டு வந்து சட்டுனு அனுப்பினதை எங்களால ஜீரணிக்க முடியலை.

இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டதுக்கு சம்பளம்னு ஏதோவொரு தொகை கிடைக்குதுதான். ஆனா இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்ட வகையில போக்குவரத்து, தங்கினதுங்கிற கணக்குல நாங்க இதுவரை செலவு செய்த பணமே அந்தத் தொகையைவிட அதிகம். எல்லாம் சொந்தப் பணத்துல செலவு செய்தோம்.

அப்படி இருக்கிற சூழல்ல, கூடுதலா சில நாள்கள் நிகழ்ச்சியில இருந்தா கொஞ்சம் புகழ் வெளிச்சமாவது படும். அதுக்கும் வழி இல்லைனு ஆனதை நினைக்கிறப்பதான் வருத்தமா இருக்கு'' என்கிறார் நாடியாவின் சகோதரரும் மலேஷியாவில் பிரபல மனநல ஆலோசகராகவும் இருக்கும் ஏஜே.

நாடியா சாங் குடும்பம்
நாடியா சாங் குடும்பம்

"நாடியாவுக்கு மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுக் கிடைச்சதால வெளியேறினதாச் சொல்றாங்க. மலேஷியாவுல இருக்கிற அவங்களைத் தமிழ்நாட்டுல எல்லாருக்கும் தெரியாது. மலேஷியாவுல நாடியாவை பரவலாத் தெரியும். சீரியல், மாடலிங், ஷார்ட் ஃபிலிம்னு அங்க நிறையப் பண்ணியிருக்காங்க. அங்க அவங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க‌. மலேஷியத் தமிழர்கள்லாம் அவங்களுக்கு ஆதரவா ஓட்டுப் போடலாம்னா டெக்னிக்கலா அதுல நிறைய சிக்கல் இருந்துருக்கு. நானே அவங்களுக்கு ஆதரவா ஓட்டுப்போட இந்தியாவுல இருக்கிற ஒரு மொபைல் நம்பரைப் பயன்படுத்தி லாக் இன் பன்ணித்தான் போட முடிஞ்சது. ஓட்டுப் போடறதுல உள்ள இந்தப் பிரச்னையையும் சேனல் தரப்பு சரி செய்யணும்" என்கிறார் நாடியாவின் கணவர் சாங்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism