Published:Updated:

பிக் பாஸ் வீட்டின் அடுத்த கெஸ்ட் - ஒரு திருநங்கை!

அய்யனார் ராஜன்

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் திருநங்கை ஒருவர் கலந்து கொள்ளலாம் எனத் தெரிகிறது

பிக் பாஸ் வீட்டின் அடுத்த கெஸ்ட் - ஒரு திருநங்கை!
பிக் பாஸ் வீட்டின் அடுத்த கெஸ்ட் - ஒரு திருநங்கை!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிற நிலையில், அதில் கலந்துகொள்ள இருக்கிற போட்டியாளர்களை இறுதி செய்கிற வேலையில் மும்முரமாக இருக்கிறது சேனல்.

செலிபிரிட்டிகள் பலரிடமும் இதற்காகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். (காமெடி நடிகை மதுமிதா கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.)

பிக் பாஸில் கலந்து கொள்ளும் மதுமிதா
பிக் பாஸில் கலந்து கொள்ளும் மதுமிதா

ஷங்கர் படத்தின் ஷூட்டிங் போல இந்த ஏற்பாடுகள் படு சீக்ரெட்டாக நடந்து வந்தாலும், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் ரிலீஸ் செய்கிற க்ளிப்பிங்ஸ் போல நமக்கும் தகவல்கள் ஏதாவது வந்து விடுகின்றன. அந்த வகையில், இந்த வாரம் பிக் பாஸ் 3 குறித்து கிடைத்த ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட மூன்று தகவல்கள் உங்களுக்காக இங்கே..

முதலாவது, பிக் பாஸ் சீஸன் மூன்றில் நிச்சயம் ஒரு திருநங்கை கலந்து கொள்கிறார். முதல், இரண்டாவது சீசனிலேயே திருநங்கை ஒருவரை கலந்துகொள்ள வைக்க சேனல் முயற்சி செய்து, அது தோல்வியில் முடிய, இந்த சீசனில் அது சாத்தியப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

apsara
apsara

இதற்காக மீடியா வெளிச்சம் பட்ட திருநங்கைகள் சிலரிடம் பேசியிருக்கிறார்கள். யார் என்பது அடுத்த சில தினங்களில் தெரிந்து விடும்.

இரண்டாவது, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்துகொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

மூன்றாவது பண்பலை ரேடியோவின் ஜாக்கி ஒருவர் கலந்துகொள்கிறார்.

அய்யனார் ராஜன்