Published:Updated:

பிக் பாஸ் சீக்ரெட்ஸ்: சஞ்சீவின் வெற்றிக்காக வாழ்த்திய விஜய்; ஈகோ இல்லாமல் பழகும் நண்பர்களின் கதை!

'பிக் பாஸ்' சஞ்சீவ் - விஜய் மற்றும் நண்பர்களுடன்

வெள்ளித்திரை, சின்னத்திரை என பரிச்சயமான முகத்துக்கு சொந்தக்காரர், சஞ்சீவ். தற்போது பிக் பாஸ் சீசன் 5 தமிழில் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிய குட்டி பயோ இதோ!

பிக் பாஸ் சீக்ரெட்ஸ்: சஞ்சீவின் வெற்றிக்காக வாழ்த்திய விஜய்; ஈகோ இல்லாமல் பழகும் நண்பர்களின் கதை!

வெள்ளித்திரை, சின்னத்திரை என பரிச்சயமான முகத்துக்கு சொந்தக்காரர், சஞ்சீவ். தற்போது பிக் பாஸ் சீசன் 5 தமிழில் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிய குட்டி பயோ இதோ!

Published:Updated:
'பிக் பாஸ்' சஞ்சீவ் - விஜய் மற்றும் நண்பர்களுடன்
வெள்ளித்திரை, சின்னத்திரை எனப் பரிச்சயமான முகத்துக்கு சொந்தக்காரர், சஞ்சீவ். தற்போது பிக் பாஸ் சீசன் 5 தமிழில் வைல்டு கார்டு போட்டியாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிய குட்டி பயோ இதோ!
'பிக் பாஸ்' சஞ்சீவ்
'பிக் பாஸ்' சஞ்சீவ்

'பொன்மனச் செல்வன்' படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்குள் என்ட்ரியானவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய அக்கா சிந்துவும் நடிகர் என்பதால் அக்கா, தம்பி இருவருக்கும் பல வாய்ப்புகள் வந்திருக்கின்றன. தன் நண்பரான விஜய்யுடன் 'சந்திரலேகா', 'நிலாவே வா', 'பத்ரி', 'புதிய கீதை' உள்ளிட்டப் படங்களில் நடித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் 'மெட்டி ஒலி' தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். 2007-ல் விகடன் தயாரிப்பில் இவர் நடித்த 'திருமதி செல்வம்' தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தத் தொடருக்கு பிறகு சீரியலில் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்கிற இடத்தைப் பிடித்தார் சஞ்சீவ்.

'பிக் பாஸ்' சஞ்சீவ் - விஜய் 'மாஸ்டர்' படப்பிடிப்பில்...
'பிக் பாஸ்' சஞ்சீவ் - விஜய் 'மாஸ்டர்' படப்பிடிப்பில்...

சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான 'சித்தி 2' தொடரில் நடித்தார். 'மாஸ்டர்' படத்திலும் சஞ்சீவை சில காட்சிகளில் பார்த்தோம். இயக்குநர் ஹரியின் 'யானை' படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து, சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு வர, பல கட்ட யோசனைக்குப் பிறகு அதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இவருடைய நண்பர்கள் குழுவில் நடிகர் விஜய்யும் ஒருவர்... பள்ளி, கல்லூரி நண்பர்கள் குழுக்களான இவர்கள் தற்போது வெவ்வேறு துறையில் இருந்தாலும் எந்த ஈகோவும் இல்லாமல் அதே நட்புடன் இன்றுவரை பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் இவருக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள். சஞ்சீவ், பிக் பாஸிற்குள் செல்வதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூகவலைதள பக்கங்களில் வைரலானது. அந்த வீடியோவை எடுத்தவர் 'தமிழும் சரஸ்வதியும்' தொடரில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் தீபக்தான்! அவருடன் நடிகர் வெங்கட்டும் அதில் இருப்பார்.

'பிக் பாஸ்' சஞ்சீவ் - விஜய்யுடன்...
'பிக் பாஸ்' சஞ்சீவ் - விஜய்யுடன்...

'திருமதி செல்வம்' சீரியலைப் பார்த்துவிட்டு விஜய்யின் மனைவி சங்கீதா தினமும் கமென்ட்ஸ் சொல்வதாக விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சஞ்சீவ் தெரிவித்திருந்தார்.

அதேபோல், "விஜய் வீட்டுக்குப் போனா அங்கே யார் இருக்காங்க, இல்லைன்னுலாம் பார்க்காம நேரா டைனிங் டேபிளில் சாப்பாட்டை எடுத்து வெச்சு சாப்பிட ஆரம்பிச்சிடுவேன். பொதுவா, நல்லா சாப்பிடுற குழந்தைங்களை அம்மாக்களுக்குப் பிடிக்கும்ல அதேபோல ஷோபா ஆன்ட்டிக்கு என்னை ரொம்ப பிடிக்கும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

'பிக் பாஸ்' சீசன் 5-ல் வைல்டு கார்டு போட்டியாளராக அவர் நுழைந்த உடனேயே சிபி இந்தக் கேள்வியை சஞ்சீவிடம் கேட்பார். "விஜய் சார் பிக் பாஸ் பார்க்கிறாங்களா?" அதற்கு ஆம் என சஞ்சீவ் பதிலளிப்பார். சமீபத்தில், சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தபோது, "விஜய் உட்பட நண்பர்கள் அனைவரும் உங்கள் வெற்றிக்காக வாழ்த்தினார்கள்” என்று சொன்னவுடன் "விஜய்யுமா..." என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார் சஞ்சீவ். அதேபோல், நேற்றைய எபிசோடில் ஒரு போட்டியின்போது, விஜய்க்கு மட்டன் பிரியாணி என்றால் பிடிக்கும் என்றும், நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

'பிக் பாஸ்' சஞ்சீவ் - விஜய் மற்றும் நண்பர்களுடன்,,,
'பிக் பாஸ்' சஞ்சீவ் - விஜய் மற்றும் நண்பர்களுடன்,,,

சஞ்சீவ் கொஞ்சம் கோபக்காரர் தானாம்... இன்றைய பிக் பாஸ் புரொமோவில் தாமரைச் செல்வியிடம், சஞ்சீவ் கோபத்துடன் பேசியிருக்கிறார். அவர் அநாவசியமாக பிக் பாஸ் வீட்டினுள் கோபப்பட்டு இதுவரையில் நாம் பார்த்ததில்லை. மாறாக, அவருடைய எமோஷனல் குணம் வெளிப்படையாகத் தெரிந்தது.

மனதில் பட்டதைத் தவறு எனத் தோன்றினால் சற்றும் தயங்காமல் முகத்துக்கு நேராகச் சொல்வது சஞ்சீவின் பழக்கமாம். அந்தப் பழக்கத்தை பிக் பாஸ் வீட்டிலும் பார்க்க முடிந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரையில், நேர்மையாக விளையாட்டை விளையாடி பலரது பாராட்டையும் பெற்று வரும் சஞ்சீவ், வைல்ட் கார்டு என்ட்ரிதான் என்றாலும் இந்தப் போட்டியில் இறுதிக்கட்டம் வரையில் நிச்சயம் வருவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்!