Published:Updated:

பிக் பாஸ்: `படமெடுக்கலாம் வா!' ஆசை காட்டிய நடிகர்; கடனாளியான ராபர்ட் மாஸ்டர்; பின்னணி இதுதான்!

ராபர்ட்

ரச்சிதாவையே சுற்றி வந்த ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கைகள் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் வெளியிலும் கலவையான பேச்சுக்களை உண்டாக்கியது

பிக் பாஸ்: `படமெடுக்கலாம் வா!' ஆசை காட்டிய நடிகர்; கடனாளியான ராபர்ட் மாஸ்டர்; பின்னணி இதுதான்!

ரச்சிதாவையே சுற்றி வந்த ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கைகள் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் வெளியிலும் கலவையான பேச்சுக்களை உண்டாக்கியது

Published:Updated:
ராபர்ட்
கன்டென்டும் கலவரமுமாக நாளுக்கு நாள் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய ஷோவிலிருந்து முதலில் ஜி.பி.முத்து வெளியேறினார். இவர் தானாகவே வெளியேற விரும்புவதாகச் சொல்லி வெளியில் வந்தார்.

தொடர்ந்து எவிக்‌ஷனில் சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேற, தற்போது 15 போட்டியாளர்கள் அந்த வீட்டில் தங்கள் விளையாட்டை ஆடி வருகின்றனர். ஒவ்வொரு சீசனுக்கும் அந்த வீட்டின் உள்ளே ஒரு காதல் கன்டென்ட் கிளம்புவது வாடிக்கைதான். இந்த சீசனில் அது மிஸ் ஆவது போல் தெரிந்த நிலையில்தான் ரச்சிதா மீது தனக்கு ஒரு க்ரஷ் இருப்பதாகக் கூறி பிக் பாஸ் ரசிகர்களைத் தன் பக்கம் திருப்பினார் ராபர்ட் மாஸ்டர். தொடர்ந்து அந்த வீட்டுக்குள் ரச்சிதாவையே சுற்றி வந்த ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கைகள் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் வெளியிலும் கலவையான பேச்சுக்களை உண்டாக்க, பிக் பாஸும் தன் பங்குக்கு இருவருக்கும் ராஜா ராணி வேடம் தந்து டி.ஆர்.பி.க்கு உதவினார். ராபர்ட் ரச்சிதாவின் கையைப் பிடித்து இழுத்து முத்தம் கேட்டதெல்லாம் வெளியில் அவருக்கு ரெட் கார்டு தரப் படவேண்டும் என்கிற வரை  கோஷம் எழுப்ப வைத்தது.

ராபர்ட்  - ரச்சிதா
ராபர்ட் - ரச்சிதா

இந்தப் பின்னணியில்தான் ராபர்ட் குறித்து அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் பேசினோம். ``அவர் வெகுளியான ஆளுங்க, நடனத்தில் தனக்குக் கீழ் பணி புரிந்தவங்களை வேலை வாங்கறப்பெல்லாம் கடிந்து பேசாத ஒரு மாஸ்டர். அதிகம் படிக்காததால், ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு விருந்தினரா கூப்பிட்டாகூட ரொம்பவே தயக்கம் காட்டுவார். அதேநேரம் தொழில்ல பக்தியா இருந்ததால் சினிமாவில் வளர்ந்தார். சிம்புவின் நட்பு வட்டத்தில் ஒருவரானார். ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்கள் சிலரே அவரை ஏமாத்தினதும் நடந்தது. இவரும் சீரியல் நடிகர் ஒருவரு் சேர்ந்து சினிமா எடுக்கப் போறதா பெரிய ஆபீஸ் போட்டாங்க. அந்தப் படம் எடுக்கன்னு சொல்லி வங்கியில பெரிய தொகை கடன் வாங்கினாங்க.

ராபர்ட்
ராபர்ட்

படத்துக்குப் பேரெல்லாம் வச்சாங்க. ஆனா என்ன நடந்ததுன்னு தெரியலை, படம் பாதியிலேயே நின்னுடுச்சு. ரெண்டு பேர் கையில இருந்த துட்டெல்லாம் காலியாக ராபர்ட்டின் நண்பரான அந்த நடிகர் வெளிநாட்டுக்குப் பறந்துட்டார். கடன் தந்த வங்கியும் மத்தவங்களும் ராபர்ட்டை பிடிச்சிக்கிட்டாங்க. அந்தக் கடனை அடைக்க வேண்டிய பொறுப்பு இப்ப வரை ராபர்ட் கிட்டத்தான் இருக்குனு சொல்றாங்க. இந்த நிலையிலதான் பிக் பாஸ் மாதிரியான நிகழ்ச்சிக்குப் போனா நல்ல ஒரு சம்பளம் வரும்; கடனை அடைக்க அது உதவும்னு நடிகையும் அவருடைய தோழியுமான வனிதா விஜய்குமார் மூலமா இந்த நிகழ்ச்சிக்குள் வந்திருக்கிறார்" என்கிறார் ராபர்ட்டின் நெருங்கிய நடன சகா ஒருவர்.

``மேலும், பிக் பாஸ் வாய்ப்பு உறுதியானதுமே முன்பு அந்த நிகழ்ச்சிகுப் போய் வந்த சிலரிடம் பேசியிருக்கிறார் ராபர்ட். மாஸ்டர் நீங்க கப் வாங்குறீங்களோ, இல்லையோ, அந்த வீட்டுக்குள் இருக்கிற ஒவ்வொரு நாளும் சம்பளம் கூடிட்டே இருக்கும். தொடர்ந்து அந்த வீட்டுக்குள் இருக்கணும்னா ஒரே வழிதான், அது யாருடனாவது லவ்வுனு வெளியில பேச்சு வரணும்' என கொஞ்சம சீரியசாகவே உசுப்பேற்றி விட்டிருக்கிறார்கள் சில குறும்பு நண்பர்கள். சரி, நிகழ்ச்சியில் மகள் குறித்தெல்லாம் பேசிய ராபர்ட்டின் பர்சனல் லைஃப் குறித்தும் அந்த நண்பர்களிடமே கேட்டோம். ஆண்டனி மாஸ்டர்னு ஒருவர் இருந்தார். அவருடைய மகள் விஜயராணி என்பவரைத்தான் முதலில் திருமணம் செய்தார் ராபர்ட்.

ராபர்ட் - வனிதா
ராபர்ட் - வனிதா

இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. விஜயராணி ராபர்ட்டிடம் உதவியாளராக இருந்தவர். என்ன பிரச்னையோ, இந்த ஜோடிக்கு இடையில் கருத்து வேறுபாடு உண்டாக, ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. சமீபத்துலதான் விஜய ராணி ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவரை மறுமணம் செய்துக்கிட்டாங்க. இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து சில காலம் வாழ்ந்தார். அந்த வாழ்க்கையும் சரியாக அமையல. வனிதா தயாரிப்பில் ராபர்ட் மாஸ்டர் ஒரு படத்தை இயக்கினார். பிறகு வனிதாவும் அவரும் சேர்ந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகின.அதை வனிதா மறுத்தார். வனிதா - ராபர்ட் இடையே இப்போது வரை நட்பு இருக்கிறது" என்கிறார்கள்.