Published:Updated:

Bigg Boss சீசன் 6: சன் டிவி முகம், கானா பாடகர், பிரபல நடிகையின் சகோதரர் - களைகட்டும் பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ்

நிகழ்ச்சி தொடங்க சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவருமே இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அநேகமாக இன்று அல்லது நாளையிலிருந்து அவர்களுக்கான க்வாரன்டீன் தொடங்கும் என்கிறார்கள்.

Bigg Boss சீசன் 6: சன் டிவி முகம், கானா பாடகர், பிரபல நடிகையின் சகோதரர் - களைகட்டும் பிக் பாஸ் வீடு!

நிகழ்ச்சி தொடங்க சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவருமே இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அநேகமாக இன்று அல்லது நாளையிலிருந்து அவர்களுக்கான க்வாரன்டீன் தொடங்கும் என்கிறார்கள்.

Published:Updated:
பிக் பாஸ்

வரும் 9ம் தேதியிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 6. இந்தாண்டு போட்டியாளர்களின் எண்ணிக்கை வழக்கமானதை விட அதிகம். மக்கள் போட்டியாளர்கள் என 6 சாமானியர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவிருக்கிறார்கள். மேலும் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் 24 மணி நேரமும் நிகழ்ச்சியைப் பார்க்க வழி செய்திருக்கிறார்கள்.

போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக் பாஸ் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்க சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவருமே இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அநேகமாக இன்று அல்லது நாளையிலிருந்து அவர்களுக்கான க்வாரன்டீன் தொடங்கும் என்கிறார்கள்.

பிக் பாஸ் கமல்ஹாசன்
பிக் பாஸ் கமல்ஹாசன்

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் முதல்கட்டப் பட்டியலை நாமும் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அது குறித்த விவரங்களை கீழேயிருக்கும் இணைப்புகளில் பார்க்கலாம்.

தற்போது கிடைத்த மேலும் சில போட்டியாளர் குறித்த விவரங்கள் இங்கே...

VJ கதிரவன்

VJ கதிரவன்
VJ கதிரவன்

சென்ற முறை அனிதா சம்பத் என்றால் இந்த முறை சன் டிவி அடையாளம் கொண்ட கதிரவனை இழுத்துள்ளார் பிக் பாஸ். எம்.பி.எ. முடித்து விட்டு மீடியா பக்கம் வந்திருக்கும் கதிரவன் சன் டிவியில் ’நட்புக்காக’, ’வணக்கம் தமிழகம்’ முதலான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவரது அப்பா அரசுப் பணியில் இருப்பதாகச் சொல்கிறார். அம்மா ஆசிரியையாம்.

இவருக்குத் திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறார். ஆனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு போய்க் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மணிகண்டன்

மணிகண்டன், ஐஸ்வர்யா ராஜேஷ்
மணிகண்டன், ஐஸ்வர்யா ராஜேஷ்

இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர். சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான். மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இவரைப் பார்த்திருப்பீர்கள். மனைவி சோபியாவுடன் கலந்து கொண்டிருந்தார். பிக் பாஸ் 6-ல் இவரும் ஒரு போட்டியாளராகச் செல்லவுள்ளார்.

வசந்த்

`Asal Kolaar'
`Asal Kolaar'

வேல்முருகன், இசைவாணி எனக் கடந்த சீசன்களில் இசை தொடர்பான ஆட்கள் கலந்து கொண்டது நினைவிருக்கலாம். அந்த வரிசையில் இந்த சீசனில் வடசென்னையில் கானா பாடகரான வசந்த் கலந்துகொள்கிறார். இவர் `Asal Kolaar' என்ற பெயரில் பாடல்கள் இயற்றிவருகிறார். இவரின் பாடல்கள் கானா உலகில், திரையுலகில் பலத்த வரவேற்பைப் பெற்றவை என்பதால் பிக் பாஸ் வீட்டுக்குள் இந்தாண்டு கானா கச்சேரி களைகட்டுமென எதிர்பார்க்கலாம்.

ராம்சந்தர்

இவர் ஒரு மாடல் என்கிறார்கள்.

‘மெட்டி ஒலி’ சாந்தி

‘மெட்டி ஒலி’ சாந்தி
‘மெட்டி ஒலி’ சாந்தி

‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ பாடலை நினைவிருக்கிறதா? சீரியல் பிரியர்களின் ஃபேவரைட் பாடலான 'மெட்டி ஒலி' டைட்டில் சாங். இந்தப் பாட்டுக்கு நடனமாடிய சாந்தியும் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்கிறார். இவரது நடனத்துக்காகவே மெட்டி ஒலி சீரியலைப் பார்த்தவர்கள் உண்டு என்பதால் இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் இவரது கிறங்க வைக்கும் நடனத்தையும் நாம் கண்டு ரசிக்க வாய்ப்பு உள்ளது.

இவர்கள் தவிர மாடல்கள் இருவர், மற்றும் திருநங்கை ஒருவரும் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் குறித்த தகவல்கள் விரைவில்...