Published:Updated:

பிக் பாஸ்: சீசனின் முதல் எதிர்பாராத எவிக்‌ஷன்; இந்த வாரம் வெளியேறியவர் இவர்தான்!

பிக் பாஸ் கமல்

நாமினேஷன் பட்டியலில் அசிம், விக்ரமன், தனலட்சுமி, ஆயிஷா, மகேஸ்வரி, ராம், ஏ.டி.கே. ஆகிய 7 பேர் இருந்தனர். அசிம், விக்ரமன் `சேவ்' ஆனதை கமல் நேற்றைய எபிசோடில் அறிவித்தார்.

பிக் பாஸ்: சீசனின் முதல் எதிர்பாராத எவிக்‌ஷன்; இந்த வாரம் வெளியேறியவர் இவர்தான்!

நாமினேஷன் பட்டியலில் அசிம், விக்ரமன், தனலட்சுமி, ஆயிஷா, மகேஸ்வரி, ராம், ஏ.டி.கே. ஆகிய 7 பேர் இருந்தனர். அசிம், விக்ரமன் `சேவ்' ஆனதை கமல் நேற்றைய எபிசோடில் அறிவித்தார்.

Published:Updated:
பிக் பாஸ் கமல்

21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் வெளியேறியதாகச் சொல்லப்பட்டது. தொடர்ந்து முதல் வார எவிக்‌ஷனில் சாந்தி வெளியேற அடுத்தடுத்த வாரங்களில் அசல் கோலார், ஷெரினா உள்ளிட்டோர் வெளியேறினர்.

நான்காவது வார எவிக்‌ஷன் எபிசோடுக்கான ஷூட்டிங் பிக் பாஸ் செட்டில் நேற்று காலை தொடங்கி நடந்தது.

வெள்யேற்றத்துக்கான நாமினேஷன் பட்டியலில் அசிம், விக்ரமன், தனலட்சுமி, ஆயிஷா, மகேஸ்வரி, ராம், ஏ.டி.கே. ஆகிய 7 பேர் இருந்தனர். அசிம், விக்ரமன் சேவ் ஆனதை கமல் நேற்றைய எபிசோடில் அறிவித்தார்.

மகேஸ்வரி
மகேஸ்வரி

இந்நிலையில், அவர்களில் குறைந்த ஓட்டுகள் பெற்ற மகேஸ்வரி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். மாலை 7 மணிக்குப் பிறகு மகேஸ்வரி கமலைச் சந்தித்த எபிசோடுக்கான ஷூட்டிங் நிறைவடைய பிக் பாஸ் செட்டிலிருந்து மகேஸ்வரி வெளியேறினார் என்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பெண் போட்டியாளர்களிலேயே வலுவான ஒரு போட்டியாளராகப் பார்க்கப் பட்டவர் மகேஸ்வரி.

அந்த வீட்டில் அவரது நடவடிக்கைகளுமே அதை நிரூபிக்கும் வகையில்தான் அமைந்திருந்தன. எனவே கண்டெண்ட் தருபவராக இருக்கும் இவர் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியில் வர மாட்டார் என நம்பினார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.

முந்தைய ஒரு எபிசோடிலேயே எவிஷனில் இருந்து கடைசி நிமிடத்தில் தப்பித்தது குறித்து இவர் ரொம்பவே வருத்தப்பட்டதையும் பார்த்திருப்பீர்கள்.