Published:Updated:

பிக் பாஸ் சீசன் 6 வீட்டுக்குள் புது மாப்பிள்ளை ரவீந்தர் - களைகட்டுமா தலைத் தீபாவளிக் கொண்டாட்டம்?!

ரவீந்தர் - மகாலட்சுமி

சமீபத்தில் பேசுபொருளான ரவீந்தர் - மகாலட்சுமி திருமண செய்தியும் செம கன்டென்ட்டாக இருக்கும் என நினைக்கிறதாம் சேனல் தரப்பு.

பிக் பாஸ் சீசன் 6 வீட்டுக்குள் புது மாப்பிள்ளை ரவீந்தர் - களைகட்டுமா தலைத் தீபாவளிக் கொண்டாட்டம்?!

சமீபத்தில் பேசுபொருளான ரவீந்தர் - மகாலட்சுமி திருமண செய்தியும் செம கன்டென்ட்டாக இருக்கும் என நினைக்கிறதாம் சேனல் தரப்பு.

Published:Updated:
ரவீந்தர் - மகாலட்சுமி
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் முதல் வாரம் தொடங்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதில் கலந்துகொள்ளும் முதற்கட்ட போட்டியாளர்களின் லிஸ்ட்டை நேற்று விகடன் தளத்தில் வெளியிட்டிருந்தோம்.
பிக் பாஸ்
பிக் பாஸ்

டான்ஸ் மாஸ்டரும், வனிதாவின் முன்னாள் கணவருமான ராபர்ட், 'சரவணன் மீனாட்சி' புகழ் ரச்சிதா மற்றும் சினிமா மற்றும் சீரியல் நடிகை விசித்ரா ஆகியோர் அதில் இடம்பெற்றிருந்தனர். இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

அவர் வேறு யாருமல்ல, சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்து வைரல் ஆனவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கவனித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தவருமான திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் யூடியூபர் ரவீந்தர்தான்.

ரவீந்தர் ஏற்கெனவே பிக் பாஸ் குறித்தும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் செய்திருக்கும் நிலையில் இவரே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அது நிகழ்ச்சியின் பரபரப்புக்கு உதவும் என நினைத்தே இவரை இந்த சீசனுக்குள் அனுப்புவதாகச் சொல்கிறார்கள். போதாக்குறைக்குச் சமீபத்தில் பேசுபொருளான இவரது திருமண செய்தியும் செம கன்டென்ட்டாக இருக்கும் என நினைக்கிறதாம் சேனல் தரப்பு.

ரவீந்தர் - மகாலட்சுமி
ரவீந்தர் - மகாலட்சுமி

அதேநேரம் ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடிக்கு வரும் தீபாவளி தலைத் தீபாவளி என்பதால் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால், எப்படி அதைக் கொண்டாடுவார்கள் என்கிற ஒரு கேள்வியும் இருக்கிறது. அதற்கும் பதில் சொல்கிறார்கள் இந்தத் தகவல் தெரிந்தவர்கள்.

ஒன்று தீபாவளிக்குள் ரவீந்தர் எலிமினேட்டாகி வெளியில் வந்துவிடலாம். அல்லது மகாலட்சுமியைத் தீபாவளிக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பினாலும் அனுப்பலாம். பிக் பாஸ் அதற்கும் ஏதாவது புது ஐடியா வைத்திருப்பார் என்கிறார்கள்.