Published:Updated:

பிக் பாஸ் சீக்ரெட்ஸ்: சீரியல் என்ட்ரி, கணவர் மரணம், சிம்புவின் சிபாரிசு - யார் இந்த பாவனி ரெட்டி?

பிக் பாஸ் பாவனி

ஆறு மாத காலம் மன அமைதிக்காக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தவரை மீண்டும் 'சின்னத்தம்பி'க்காக விஜய் டிவி அழைத்தது. கடந்த காலத்தை மறந்து மறுபடியும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

பிக் பாஸ் சீக்ரெட்ஸ்: சீரியல் என்ட்ரி, கணவர் மரணம், சிம்புவின் சிபாரிசு - யார் இந்த பாவனி ரெட்டி?

ஆறு மாத காலம் மன அமைதிக்காக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தவரை மீண்டும் 'சின்னத்தம்பி'க்காக விஜய் டிவி அழைத்தது. கடந்த காலத்தை மறந்து மறுபடியும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

Published:Updated:
பிக் பாஸ் பாவனி

விறுவிறுப்படையத் தொடங்கி இருக்கிறது பிக் பாஸ் சீசன் 5. முகம் தெரியாத போட்டியாளர்களால் ஆரம்பம் கொஞ்சம் டல் அடித்தபோது, ’தேமே’ என இருந்த நாடியா சாங்கை வெளியில் அனுப்பினார்கள்.

‘பரவால்ல’ப்பா என ரசிகர்கள் நிமிர்ந்த போது, கன்டென்ட் தந்து கொண்டிருந்த அபிஷேக் ராஜாவையும் அனுப்பினார்கள்.

"பிக் பாஸ் 'பிளான் பி'னு ஏதோ வச்சிருக்கார்" என உற்சாகம் இன்னும் கூடியிருக்கிறது.

சரி இருக்கும் போட்டியாளர்களில் யார் க்ளெவர், யாரை அடுத்து அனுப்பலாம் என்பதையெல்லாம் பிக் பாஸும் அவரது ரசிகர்களும் பார்த்துக் கொள்வார்கள்.

நாம் ’பிக் பாஸ் சீக்ரெட்ஸ்’க்காக பாவனி ரெட்டி பக்கம் கொஞ்சம் திரும்பலாம்.

பூர்வீகம் ஆந்திரா. தெலுங்கு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவரை 'ரெட்டை வால் குருவி’ சீரியலுக்காகக் கூட்டி வந்தது விஜய் டிவி. அந்த சீரியலுக்குப் பிறகு சன் டிவிக்கு வந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ஒருவரின் குடும்பத் தயாரிப்பான ‘பாசமலர்' சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் பாவனியுடன் நடித்தவர் பிரதீப்.

'சின்னத்தம்பி' சீரியலில் பிரஜின் - பாவனி
'சின்னத்தம்பி' சீரியலில் பிரஜின் - பாவனி

சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் இருவருக்கிடையிலும் காதல் வளர்த்தது. இரண்டாண்டு காதலுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு காதலர் தினத்தன்று பாவனி - பிரதீப் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் என்ன பிரச்னையோ அந்த இல்வாழ்க்கை ஓராண்டுக்குள் முடிவடைந்தது. பிரதீப் திடீரென தற்கொலை செய்துகொள்ள, பாவனி போலீஸ் ஸ்டேஷன்வரை போக வேண்டிவந்தது. பிரதீப்பின் குடும்பத்தினர்தான் பாவனி மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.

அடுத்த ஆறு மாத காலம் மன அமைதிக்காக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தவரை மீண்டும் 'சின்னத்தம்பி'க்காக விஜய் டிவி அழைத்தது. கடந்த காலத்தை மறந்து மறுபடியும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சீரியல்களுடன் தமிழ், தெலுங்கு, ஏன் சில இந்திப்படங்களிலும் கூட நடித்தார்.

இந்த நிலையில்தான் சில நாள் கழித்து 'பாசமலர்' சீரியலின் தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகமாகியிருந்த ஆனந்த ஜாய் என்பவரை மறுமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார்.

ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும் அந்தத் திருமணம் நடக்கவில்லை என்றார். ஆனந்த ஜாயுமே தங்களுக்குள் திருமணம் நடக்கவில்லை என்றே சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.

பாவனி – ஆனந்த் இருவருக்கும் நெருக்கமான நட்பு வட்டத்தில் பேசியபோது,

"இவர்கள் பழகியது உண்மை. ரெண்டு பேரும் சேர்ந்து போரூர் பக்கம் சொந்தமா ஃபிளாட் வாங்கி கிரஹப்பிரவேசம் செய்து அங்கதான் இருந்தாங்க. முறைப்படி திருமணம் செய்துகிட்டாங்களா, செய்திருந்தா அதை ஏன் மறைக்கிறாங்கனு எங்களுக்குத் தெரியலை" என்றவர்கள் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள்.

பிக் பாஸ் பாவனி
பிக் பாஸ் பாவனி
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய சில கோட்டாக்கள் இருக்கின்றன என்பது நாம் ஏற்கெனவே சொன்னதுதான். அந்த வகையில் நடிகர் சிம்பு சிபாரிசு செய்யும் சிலர் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்கள். மகத், யாஷிகா ஆனந்த் என கடந்த சீசன்களில் சிலரை உதாரணங்களாகச் சொல்லலாம். இது குறித்துதான் பாவனியின் நட்பு வட்டத்திலும் பேசியுள்ளார்கள்.

"ஆனந்த ஜாய், நடிகர் சிம்புவுக்கு ரொம்பவே நெருக்கம். அவர் சிம்புகிட்டப் பேசி, சிம்பு சிபாரிசுலதான் பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போனதாகவும் ஒரு தகவல் இருக்கு. இப்பவும் பாருங்க, திருமணம் குறித்தத் தகவலை இரண்டு பேருமே வெளியே சொல்லலனாலும் பாவனியைப் புகழ்ந்துதான் வெளியில பேசிட்டிருக்கார் ஆனந்த். சொல்லப்போனா வெளியில இருந்து பாவனிக்கு ஆதரவு திரட்டறதே அவர்தான்னும் சொல்லலாம்" என்பதுதான் அவர்கள் சொன்ன விஷயம்.