Published:Updated:

பிக் பாஸ் எவிக்ஷன்: வெளியேறினார் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்... பிக் பாஸின் அடுத்தடுத்த திட்டம் என்ன?

பிக் பாஸ் சஞ்சீவ்
News
பிக் பாஸ் சஞ்சீவ்

அடுத்தடுத்த நாள்களில் மேலும் ஒருவர் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல் பணப்பெட்டி கொடுத்து, அதை எடுப்பவர்கள் வெளியேறலாம் என்ற சலுகை இந்த முறையும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் இந்த வார எவிக்‌ஷனில் எலிமினேட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார் விஜய்யின் நண்பர் சஞ்சீவ். சஞ்சீவ் வெளியேறிய எபிசோடின் ஷூட்டிங் இன்று காலை தொடங்கி பிக் பாஸ் செட்டில் நடந்து வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிறைவு பெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. பதினெட்டுப் போட்டியாளர்களுடன் முதலில் தொடங்கியது நிகழ்ச்சி. பிறகு நடிகர் சஞ்சீவ், டான்சர் அமீர் இருவரும் வைல்டு கார்டு மூலம் உள்ளே நுழைந்தார்கள்.

பிக் பாஸ் சஞ்சீவ்
பிக் பாஸ் சஞ்சீவ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்னொருபுறம் எவிக்‌ஷனில் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். இருந்த போதும் அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்த நிலையில், கடந்த வாரம் முதன் முதலாக இரட்டை எவிக்‌ஷன் நடந்து வருண், அக்‌ஷரா இருவரும் வெளியேறினர். இந்நிலையில் இந்த வார வெளியேற்றத்துக்கான ஷூட்டிங் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

முன்னதாக வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் நிரூப், தாமரை, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், ராஜு, சிபி, பாவனி என நிகழ்ச்சியில் இருக்கும் எல்லோருமே இருந்தனர்.

இவர்களில் அடுத்தடுத்த சவால்களைச் சிறப்பாக முடிக்கும் ஒருவர் நேரடியாக பைனலுக்குள் செல்லலாம் என ’டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதில் அமீர் சிறப்பாக எல்லா டாஸ்குகளையும் முடித்து பைனலுக்கு முதல் ஆளாகத் தகுதி பெற்றுவிட்டார். இவருக்குச் சவாலாக இறுதிவரை சிபி களத்திலிருந்தார். மற்ற போட்டியாளர்களில் குறைந்த ஓட்டுகள் வாங்கியிருந்த சஞ்சீவ், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

பிக் பாஸ் சஞ்சீவ்
பிக் பாஸ் சஞ்சீவ்

இதற்கு முன்னர் வைல்டு கார்டில் வந்தவர்கள் பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆனதே இல்லை. முந்தைய சீசனில் வைல்ட் கார்டில் உள்ளே வந்த விஜயலட்சுமி டாப் 3 வரைக்கும் வந்தார். எனவே, அமீர் ஒருவேளை டைட்டில் வின்னரானால் அது ஒரு புதிய சாதனையாக இருக்கும்.

இந்நிலையில், அடுத்தடுத்த நாள்களில் மேலும் ஒருவர் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல் பணப்பெட்டி கொடுத்து, அதை எடுப்பவர்கள் வெளியேறலாம் என்ற சலுகை இந்த முறையும் எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டில் வின்னராக யார் வருவார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.