Published:Updated:

"இசைவாணி அக்கா அப்பாவைத் தப்பாப் புரிஞ்சிக்கிறாங்க!" - `பிக் பாஸ்' இமானின் மகள் ஜெஃபி ஷைனி

இமான், ஜெஃபி ஷைனி

"பதினாறு வருஷமா அப்பாகூடதான் பிறந்தநாள் கொண்டாடியிருக்கேன். இந்தமுறை அப்பாவை ரொம்பவே மிஸ் பண்றேன். பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்தாலும் என் பிறந்தநாளை ஞாபகம் வச்சு கண்டிப்பா எனக்கு விஷ் பண்ணுவாருன்னு எதிர்பார்க்கிறேன்!"

"இசைவாணி அக்கா அப்பாவைத் தப்பாப் புரிஞ்சிக்கிறாங்க!" - `பிக் பாஸ்' இமானின் மகள் ஜெஃபி ஷைனி

"பதினாறு வருஷமா அப்பாகூடதான் பிறந்தநாள் கொண்டாடியிருக்கேன். இந்தமுறை அப்பாவை ரொம்பவே மிஸ் பண்றேன். பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்தாலும் என் பிறந்தநாளை ஞாபகம் வச்சு கண்டிப்பா எனக்கு விஷ் பண்ணுவாருன்னு எதிர்பார்க்கிறேன்!"

Published:Updated:
இமான், ஜெஃபி ஷைனி

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக தன் கருத்தை நேர்மையாகப் பதிவு செய்பவர்களில் இமானும் ஒருவர்! வெளிப்படையாக பேசும் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கவே செய்கிறது. இந்நிலையில், அவருடைய மகள் ஜெஃபி ஷைனி தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். அவரை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்தோம்.

பிக் பாஸில் இமான்
பிக் பாஸில் இமான்

”அப்பாவைத் தொடர்ந்து நாலு சீசனா கூப்பிடுறாங்க. அப்பா இந்த சீசன் போறேன்னு சொன்னதுமே எனக்கு ஜாலியாகிடுச்சு. பிக் பாஸ் பார்த்திருக்கோம். அதனால அந்த வீட்ல அப்பாவைப் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்பா எப்பவும் கோபமே பட மாட்டாங்க. ரொம்ப கூலா எல்லாரையும் சிரிக்க வச்சிட்டே இருப்பார். அவர் கேரக்டர் அங்க போயும் மாறவேயில்ல. வீட்ல எப்படி இருப்பாங்களோ அப்படித்தான் அங்கேயும் இருக்காங்க. பலரும் அவர் தப்பா பேசுறதா சொல்றாங்க... அவங்க நல்லதுக்காகத்தான் சொல்றாருன்னு யாருமே புரிஞ்சிக்கலை. அவர் எப்பவுமே எந்த விஷயத்துக்கும் எமோஷனல் ஆக மாட்டாங்க. ஸ்மைலிங் பேஸோடவே இருப்பாங்க. அப்பா பயங்கர ஃப்ரெண்ட்லியாதான் என்கிட்ட பழகுவாங்க. ஆனா, நான் பொய் சொன்னா அப்பாவுக்குப் பிடிக்காது. திட்டுவாங்க... அதனால சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ அப்பாகிட்ட மறைக்காமச் சொல்லிடுவேன்.

பிக் பாஸில் இமான்
பிக் பாஸில் இமான்

எப்பவும் அப்பாவுக்கு மக்கள் சப்போர்ட் இருக்கும்னு நாங்க நம்புறோம். அவருக்கு மனசுல பட்ட விஷயங்களை வெளிப்படையா மூஞ்சிக்கு நேரா சொல்லிடுவாரு. அவங்களுக்குப் பின்னாடி பேசுறதெல்லாம் அப்பாவுக்குப் பிடிக்காது. எப்பவும் காமெடி பண்ணி எல்லாரையும் சிரிக்க வச்சிட்டே இருப்பார்” என்றவரிடம், கடந்து வந்த பாதை, டாஸ்க்கில் சொன்ன விஷயங்கள் குறித்துக் கேட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

”அப்பா எங்கேயும் அம்மாவை விட்டுக்கொடுக்க மாட்டார். எனக்காக நகையைக் கழட்டிக் கொடுத்தான்னு அம்மாவைப் பற்றிப் பெருமையாவே சொந்தக்காரங்ககிட்ட சொல்லுவார். அந்த விஷயத்தை அப்பா சொல்லுவாருன்னு நாங்க யாருமே எதிர்பார்க்கலை. அந்த மொமண்ட் அம்மா கண்கலங்கிட்டாங்க. என்னனாலும் சரி, எப்பவும் நான் உங்க கூடவே இருக்கேன்னு அப்பாகிட்ட அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அவங்க முன்னாடி இதைச் சொல்றப்பகூட அம்மா எமோஷனல் ஆனதில்லை. இப்ப அப்பா இங்க வீட்ல இல்லை. அதனால அவங்க பேசினதைக் கேட்டு ரொம்பவே எமோஷனல் ஆகிட்டாங்க.

ஜெஃபி ஷைனி குடும்பத்தினருடன்...
ஜெஃபி ஷைனி குடும்பத்தினருடன்...

இசைவாணி அக்காகிட்ட அப்பா நல்லதுக்காக ஒரு விஷயம் சொல்றாங்க. ஆனா, அதை அவங்க தப்பாப் புரிஞ்சிக்கிறாங்க. அதனாலதான் அவங்களுக்குள்ள நிறைய தடவை முரண்பாடு வருது. ராஜூ அண்ணாவும் மத்தவங்களை ஹர்ட் பண்ணாம சிரிக்க வைக்கிறாங்கங்கிறதனால அவருக்கும், அப்பாவுக்கும் ஜெல் ஆகிடுச்சி. கடைசி வரைக்கும் அப்பாவுக்கும், ராஜூ அண்ணாவுக்கும் இடையில் நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கும்னு நினைக்கிறேன்.

அப்பா பிசிக்கலி ரொம்பவே ஸ்ட்ராங்கான பர்சன். பிசிக்கல் டாஸ்க் வர்றப்ப எல்லாரும் அதைப் புரிஞ்சிப்பாங்க. அடுத்த வாரம் எனக்குப் பிறந்தநாள். பதினாறு வருஷமா அப்பாகூடதான் பிறந்தநாள் கொண்டாடியிருக்கேன். இந்தமுறை அப்பாவை ரொம்பவே மிஸ் பண்றேன். பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்தாலும் என் பிறந்தநாளை ஞாபகம் வச்சு கண்டிப்பா எனக்கு விஷ் பண்ணுவாருன்னு எதிர்பார்க்கிறேன்” என்றவரிடம், வீட்டுக்குள்ள போறப்ப என்ன சொல்லிட்டுப் போனார் என்று கேட்டோம்.

பிக் பாஸ் ராஜூ, இமான்
பிக் பாஸ் ராஜூ, இமான்

”பாப்பா, உடம்பு குறையணும்னுதான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போறேன்... வெளியே வர்றப்ப அப்பா ஃபிட்டா வருவேன் பாருன்னு சொல்லிட்டுப் போனார்.”

இந்தப் பேட்டியை வீடியோ வடிவில் காண...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism