Published:Updated:

பிக் பாஸ் - 7 | நமீதா வெளியேறியது ஏன்… ஓட்டு போடும் மக்களிடம் உண்மைகள் சொல்வார்களா?

பிக் பாஸ் - 7

எந்தப் போட்டியாளராவது கமல் சொல்ல முயலும் தலைப்பைத் தாண்டி சொந்தமாக எதையாவது பேச முயலும்போது அவர்களை லாகவமாக தடுத்து நிறுத்தி தன் ஸ்கிரிப்ட்டை தொடர்ந்து பேசும் கமலின் பாணி சுவாரஸ்யமானது.

பிக் பாஸ் - 7 | நமீதா வெளியேறியது ஏன்… ஓட்டு போடும் மக்களிடம் உண்மைகள் சொல்வார்களா?

எந்தப் போட்டியாளராவது கமல் சொல்ல முயலும் தலைப்பைத் தாண்டி சொந்தமாக எதையாவது பேச முயலும்போது அவர்களை லாகவமாக தடுத்து நிறுத்தி தன் ஸ்கிரிப்ட்டை தொடர்ந்து பேசும் கமலின் பாணி சுவாரஸ்யமானது.

Published:Updated:
பிக் பாஸ் - 7
‘’நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்’’ என்கிற பிக் பாஸ் அறிவிப்புடன் நிகழ்ச்சி தொடங்கியது. அது என்ன ‘தவிர்க்க முடியாத காரணங்கள்?’ வாக்களிப்பதின் மூலம் பார்வையாளர்களும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என்கிற வகையில் அவர்களுக்கு இதை அறிய உரிமையுண்டு. ‘மருத்துவக் காரணங்களுக்காக நமீதா வெளியேறியிருக்கிறார்’ என்று சொல்லப்படுகிறது. அவர் விரைவில் மீண்டு வர வேண்டுவோம்.

‘இங்கு இருக்கப் போகும் நூறு நாளும் எங்களின் உரிமைகள் தொடர்பாக இந்தச் சமூகத்தை கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பேன்’ என்று தனது உரையில் முழங்கிய நமீதா, ஒரு வாரத்திலேயே வெளியேறியது துரதிஷ்டம்.

சீசன் 5-ல் கமல் வருகை தரும் முதல் பஞ்சாயத்து நாள் இதுதான். சந்தன நிற கோட் சூட்டில் பாந்தமாக வந்தார் கமல். இவருடைய ஆடையில் இருக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளை கவனிப்பது எப்போதுமே சுவாரஸ்யமானது. அந்த வகையில் இன்று அவருடைய டையில் இருந்த தைல டப்பா எதற்காக என்று தெரியவில்லை. (ஆடை வடிவமைப்பாளர்கள் மன்னிக்க!).

பிக் பாஸ் - 7
பிக் பாஸ் - 7

நமீதா தொடர்பாக பிக் பாஸ் சொன்ன அதே அறிவிப்பை தானும் வழிமொழிந்த கமல், “உங்களைப் போலவே அவரது பேச்சில் நானும் மனதைப் பறி கொடுத்துவிட்டேன்” என்று தன் உரையை ஆரம்பித்தார். இன்று கமலின் பேச்சில் அவரது வழக்கமான வார்த்தை விளையாட்டுகள், அரசியல் நையாண்டிகள், அவசிய உபதேசங்கள் இருந்தன. ஆனால் சில இடங்களில் ‘போதும் ஐயா... லென்த்தா போகுது’ என்கிற சலிப்பும் வராமல் இல்லை.

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், திரையில் தெரிந்தவர்களைப் பார்த்து, “உங்களை ஸ்கிரீன் வழியா பார்க்கும் போது புதுசா வந்திருக்கிற ஆன்லைன் கிளாஸ் கலாசாரம் மாதிரி இருக்கு. ஆனா இந்த ஆன்லைன் கிளாஸை நான் ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு” என்றார். (அப்ப கமல்தான் இதிலும் முன்னோடியா?!) “ஆனால் நான் கற்றுக் கொடுக்க வரவில்லை. கற்றுக் கொள்ளும் மாணவனாகத்தான் வந்திருக்கிறேன்” என்றார் பின்குறிப்பாக. (‘அடடே! இந்தப் பணிவுதான் உங்களை எங்கயோ கொண்டு போகப் போகுது!).

அடுத்து கமலின் வார்த்தை சிலம்பின் குறும்பு ஆரம்பமாகியது. ஒவ்வொரு போட்டியாளரையும் பிக் பாஸ் வீட்டில் அவர்கள் இயங்கியதை வைத்து குறிப்பிட ஆரம்பித்தார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை நிரூபித்த நிரூப்’ என்றவர், சமையல் அறை வழியாக ‘சுடச்சுட’ செய்தி சொன்னவர் என்று பிரியங்காவை சொன்னபோது கிரேஸி மோகன் நினைவு வந்தது. “வெளில எனக்கு மேஜிக் காண்பிச்சுட்டு வந்தீங்க. உள்ளேயும் ஏதாவது மேஜிக் காட்டுங்க” என்று வருணைக் குறிப்பிட்டபோது ‘ஆமாம்ல... இவரும் இந்தப் போட்டில இருக்காருல’ என்கிற நினைவு அப்போதுதான் நமக்கு வந்தது. (நாடியா போன்றவர்களையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம்).

அடுத்து சொன்னதுதான் அட்டகாசமான அரசியல் குறும்பு. “சிபி... நீங்க டீ போட கத்துக்கிட்டீங்க போல... டீ போடறது சாதாரண விஷயமில்லை. அது உங்களை எங்கயோ கொண்டு சேர்க்கும்” என்று சிபியை வைத்து ‘கபி... கபி...’ பாடினார் கமல். சின்னத்திரையில் பாவனி முதன்முறையாக சொந்தக் குரலில் பேசியிருக்காராம் “ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் அண்ணாச்சி நெல்லைத் தமிழை மறந்துவிடாமல் இருந்தால் சரி” என்று இமானை ஜாலியாக இடித்துரைத்தார் கமல்.

பிக் பாஸ் - 7
பிக் பாஸ் - 7

“சொந்த வீடு வாங்க வாழ்த்துகள்” என்று இசைவாணியின் பக்கம் வண்டியைத் திருப்பிய கமல், “சின்னப்பொண்ணுவின் குறட்டை சத்தம் தாமரைக்கு தொந்தரவு. ஆனால் இனிமேல்தான் அரட்டை சத்தம் அதிகமாகப் போகுது. அப்போது சிம்ம சொப்பனமாக இருக்கும்” என்றெல்லாம் கமல் பேசிய போது முன்பே திட்டமிட்டு எழுதாமல் இப்படி டைமிங்காக பேச முடியாது என்று தோன்றியது. (ஸ்கிரிப்ட் ரைட்டர் ராஜூவின் கவனத்திற்கு).

“குழல் இனிது. யாழ் இனிது என்பர்... யாழ்ப்பாணத் தமிழ் கேளாதோர்’ என்று மதுமிதாவின் மொழி இனிமையைப் பற்றி சொன்னபோது அம்மணியின் முகத்தில் அப்படியொரு பளீர் புன்னகை. “எல்லாக் கதையிலும் திரைக்கதை தேடும் ராஜூ” என்றதும் சபையே சிரிக்க ராஜூ மட்டும் மெளனச் சங்கடத்துடன் இருந்தார்.

“'கதை சொல்லட்டுமா' டாஸ்க்கில் நமீதாவின் பேச்சைப் போலவே இசைவாணியின் கதையும் என்னைக் கவர்ந்தது. வாய்ப்புகள் மறுக்கப்பட்டதைப் பற்றிச் சொன்னீர்கள். உங்கள் திறமையை நன்றாக வளர்த்துக் கொண்டால் யாரும் உங்களை மறுக்கவே முடியாது” என்ற கமல் “நமீதா பேசி முடித்த பிறகு இங்குள்ள அனைவருமே தங்களின் இதயங்களை பறிகொடுத்தீர்கள். உங்களின் அன்பை அடையாளமாக வைத்தீர்கள். அந்த மாற்றம் சமூகத்திலும் பிரதிபலிக்க வேண்டும் வேண்டும்” என்றது சிறப்பு. மாற்றுப் பாலினத்தவர் குறித்த பொதுசமூகத்தின் பார்வையில் நமீதாவின் பேச்சு துளியாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் அதுவே பெரிய வெற்றி.

“இன்னமும் யார் யாரெல்லாம் கதை சொல்லல?” என்று கமல் கேட்டதும் கையைத் தூக்கியவர்களை நோக்கி ‘’எப்படிச் சொல்லப் போறீங்க?” என்று விசாரிக்க ஆரம்பித்தார். “கிளைமாக்ஸ் வொர்க் பண்ணிட்டு இருக்கேன்” என்று சொல்லி திகிலூட்டினார் ராஜூ. “வருத்தம் இல்லாம சொல்ல முயற்சி பண்ணப் போறேன்” என்று நிரூப் சொன்னதும், “இமான் அதைத்தான் பண்ணாரு. தன் சோகத்தின் மேலே சிரிப்பு பெயிண்ட் அடிச்சிட்டாரு (நிப்பான் பெயின்ட்டோ?!). பொதுவாக நகைச்சுவையாளர்களுக்கு இன்னொரு பக்கம் பயங்கரமான சமூகக் கோபம் இருக்கும்” என்று கமல் சொன்னது உண்மை.

பிக் பாஸ் - 7
பிக் பாஸ் - 7

“நான் எப்படியோ சொல்லப் போறேன்.. நீங்க எப்படியோ புரிஞ்சுக்கங்க” என்று உப்பு சப்பில்லாமல் விட்டேற்றியாக பதில் அளித்தார் வருண். “என் வாழ்க்கை பல அத்தியாயங்களைக் கொண்டது. அதை சமூகத்திற்கு பாகம் பாகமாக சமர்ப்பிக்கப் போகிறேன். யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்கங்க” என்று அபிநய் சொன்னபோது இப்போதே கலவரமாகத்தான் இருந்தது.

“உங்க கதை சுவாரஸ்யமாக இருக்கறதை விட உண்மையா இருக்கணும். அதுதான் முக்கியம்” என்ற கமல் அடுத்தபடி பிரியங்காவிடம் வந்தபோது அவர் தன்னுடைய பிரத்யேக ரிங்டோன் சிரிப்பை ஒலிக்கவிட்டார். “Work until you no longer have to introduce yourself” என்பதை பிரியங்கா தமிழில் சொல்ல முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் போது ‘அண்ணாச்சி... ஹெல்ப் பண்ணுங்க” என்று கமல் அடித்த டைமிங் கமென்ட்டில் ஜெர்க் ஆகிவிட்டார் இமான்.

ஓர் இடைவேளைக்குப் பின்பு திரும்பிய கமல் "பால்ய விவாகம் ஏன் வேண்டாம்?” என்பதை சுருதியின் கதையை முன்னிறுத்தி வலியுறுத்தியது சிறப்பு. அவரின் குடும்பத்தார் எடுத்த தவறான முடிவால் ‘இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள்’ என்று சுருதியையும் அவரது அம்மாவையும் குறிப்பிட்டார் கமல். “நோ சொல்லத் தெரியணும்னு நீங்க சொன்னதும் முக்கியமான செய்தி. உங்க தாத்தாவிற்கு அதைச் சொல்லத் தெரியல. நோ சொல்றதும் அவ்ளோ ஈஸி இல்ல. கல்யாணச் சாப்பாட்டில் நோ சொன்னாக் கூட சாம்பாரை கை மேல ஊத்திட்டுப் போயிடுவாங்க. அதைப் போல கல்யாணத்துக்கு நோ சொல்றதும் ஈஸி இல்ல. ஆனா சொல்லியாகணும்” என்றார் கமல் (கல்யாணம் – கல்யாணச் சாப்பாடு. லிங்க் எப்படி?!).

எந்தப் போட்டியாளராவது கமல் சொல்ல முயலும் தலைப்பைத் தாண்டி சொந்தமாக எதையாவது பேச முயலும்போது அவர்களை லாகவமாக தடுத்து நிறுத்தி தன் ஸ்கிரிப்ட்டை தொடர்ந்து பேசும் கமலின் பாணி சுவாரஸ்யமானது.

“பாவனியின் கதை துயரமானது. இருந்து அனுபவிக்கறவங்களுக்குத்தான் அது தெரியும். ஆனால் அதிர்ஷ்டவசமாக பாவனியின் மாமியார் புரிந்துகொண்டு ஆதரவாக இருந்தது சிறப்பு. இல்லைன்னா பாவனியை வில்லனாக்கறது ரொம்ப சுலபம்” என்று கமல் சொன்னதை ஆத்மார்த்தமாக ஆமோதித்தார் பாவனி.

பிக் பாஸ் - 7
பிக் பாஸ் - 7
பாவனியின் கணவர் தற்கொலை செய்து கொண்டதையொட்டி ‘தற்கொலை’ என்னும் விஷயத்தை ஆட்சேபித்து கமல் பேசியதை அவரின் பொழிப்புரையில் இருந்த ஹைலைட்களில் ஒன்றாகச் சொல்லலாம். இதற்காக அவர் நாஜிகளின் வதை முகாம்களை மேற்கோள் காட்டியது அருமை.

உலக வரலாற்றில் மனித குலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளுள் ஒன்று, யூதர்கள் மீது நாஜிகள் நடத்திய வன்முறை வெறியாட்டம். ஆனால் அத்தனை கொடுமைகளையும் மீறி உயிர்வாழும் வேட்கையை யூதர்கள் கொண்டிருந்ததை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். ‘‘மனித தோலை வெச்ச லேம்ப் ஷேட் செஞ்சிருக்காங்க. பட்டன் செஞ்சாங்க” என்ற கமல் ‘இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ’ என்று சித்தர் பாடலை இங்கு கனெக்ட் விதம் அருமை.

“அடுத்த ஜென்மம்னு ஒண்ணு கிடையாது. இதுதான் நமக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு. மதுமிதா சொன்ன மாதிரி துயரம் இருந்தா வெளில பேசிடுங்க... எனக்கு கூட 16, 17 வயசுல தற்கொலை உணர்வு வந்தது. அதையெல்லாம் தாண்டியதால்தான் இத்தனை பெரிய அனுபவம் எனக்கு கிடைத்தது. விருதுகள் வந்தன” என்று கமல் ஆற்றிய உரை தற்கொலைக்கு எதிரான சிறந்த பதிவு. இதைப் போலவே தேர்வுத் தோல்வி காரணமாக நிகழும் தற்கொலைகளை ‘ரொமான்ட்டிசைஸ்’ செய்யாமல் கண்டித்து பேசியதும் நல்ல விஷயம்.

அடுத்ததாக திரைக்கதையாசிரியர் ராஜூ பக்கம் வந்தார் கமல். “சின்னப்பொண்ணு சொன்ன கதைக்கு நீங்க ஏன் டிஸ்லைக் போட்டீங்க?" என்று விசாரிக்க “ஒரு கோர்வையா இல்ல” என்று ராஜூ பதில் அளிக்க "அதுதான் காரணமா... ஏன் உங்க வயது கூட ஒரு காரணமா இருக்கலாம்” என்று ராஜூவின் பக்குவமின்மையை கமல் நாசூக்காக சுட்டிக் காட்டியது சிறப்பு. ரைட்டரின் முகம் வெளிறிப் போனது.

பிக் பாஸ் - 7
பிக் பாஸ் - 7

சிலருடைய வலியை, அழுகையை, துயரத்தைக் கேட்கும்போது அது நமக்கு பாவனையாக, எரிச்சலாக கூட தோன்றலாம். ஆனால் அதே துயரத்தை நாமும் அனுபவித்திருந்தால்தான் அந்த வலி புரியும். உதாரணமாக ஒருவர் ‘சார்... ரெண்டு நாளா சாப்பிடலை” என்று சொல்லி அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதே பசியை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் பின்னுள்ள அவஸ்தை புரியும். மாறாக தன் வாழ்நாளில் பசியை அத்தனை அறியாதவர்களுக்கு அவர் செய்வது நடிப்பாகத் தெரியலாம். “உலகத்தில் உள்ள அத்தனை துயரங்களையும் நான் அனுபவிக்க ஆசைப்படுகிறேன். அப்போதுதான் ஒருவர் அனுபவிக்கும் வலியை என்னால் நெருக்கமாக உணர முடியும்” என்று மகாவீரர் வேண்டியதும் இந்தக் காரணத்திற்காகத்தான்.

ராஜூவின் டிஸ்லைக்கைக் குறை சொல்ல விரும்பாத சின்னப் பொண்ணு “நான் என் கதையை சரியாகச் சொல்லாமல் இருந்திருக்கலாம்” என்கிற குறிப்புடன் இளமைப்பருவத்தின் வறுமை, காதல் திருமணத்தின் மூலம் வந்த கணவர் தந்து கொண்டிருக்கும் மகத்தான ஆதரவு, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு செய்யும் உதவி போன்றவற்றை விவரிக்கும் போது “பார்த்தீங்களா... ஆடியன்ஸ்ல ஒருத்தர் கூட தன்னை விட்டுடக்கூடாதுன்னு இவ்ளோ மெனக்கெடறாங்க. இதுதான் கலைஞனின் உணர்வு” என்று கமல் சொன்னது நல்ல பொழிப்புரை.

சபையில் சின்னப்பொண்ணு தன் பேச்சை உணர்வுப்பூர்வமாக சொல்லிக் கொண்டிருந்த போது "ஏன்த்தா... அழுவுற” என்று தாமரை அவரின் கையைப் பிடித்து இழுக்க யாரோ அவரைத் தடுத்தார்கள். கேமராவின் முன்னால் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடிப்படை பயிற்சி கூட தாமரைக்கு இன்னமும் வரவில்லை. அவர் அப்படியே இருப்பதுதான் ஒருவகையில் அழகும் கூட.

“கூத்து ஆடும்போது எங்களுக்கு அன்பளிப்பா கிடைக்கும் பத்து ரூவாதான் பெரிய விஷயமா தெரியும். அதை பத்திரமா எடுத்து வெச்சுக்வேன்” என்று தாமரை சொன்னது முக்கியமானது. இது தொடர்பாக கமலின் வாழ்க்கையிலிருந்தே ஒரு சம்பவத்தை சொல்லலாம். (ஆக்சுவலி இதை கமலே சொல்லுவார் என்று நினைத்தேன்).

பிக் பாஸ் - 7
பிக் பாஸ் - 7

சுப சங்கல்பம் என்றொரு தெலுங்கு திரைப்படம் 1995-ல் வெளிவந்தது. (தமிழ் டப்பிங் டைட்டில் – பாசவலை). இது வெளியான போது அடையாளம் தெரியாத வகையில் தன்னை மாற்றிக் கொண்டு ஆந்திராவில் உள்ள ஒரு சின்ன திரையரங்கிற்கு சென்றாராம் கமல். அப்போது ஓர் உணர்ச்சிகரமான காட்சியில் கமலின் அற்புதமான நடிப்பைப் பார்த்துவிட்டு ஒரு ரசிகர் “என்னமா நடிச்சிருக்கான்ப்பா...” என்று தன் கையில் உள்ள சில்லறைக் காசுகளை திரையின் மீது வீசினாராம். காட்சி முடிந்த பிறகு அந்தக் காசுகளை தனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக கருதி எடுத்து வந்தாராம் கமல்.

“நான் போட்ட டிஸ்லைக்னாலதான் உங்க கதையை இன்னமும் சிறப்பா சொல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சது” என்று சிறப்பாகச் சமாளித்தார் ரைட்டர் ராஜூ. “எதைச் செஞ்சாலும் Passion உடன் செய்யணும்” என்று ஐக்கியின் தமிழ் ஆர்வத்தை முன்னிட்டு பாராட்டிய கமல், “புலம்பெயர் தமிழர்களின் பெற்றோர்களுக்கு உள்ள மொழியார்வம், இங்குள்ள பெற்றோர்களுக்கும் இருந்தால் ‘தமிழ் வாழ்க’ என்று தனியாக கோஷம் போட வேண்டிய அவசியம் இருக்காது” என்று சொன்னது நல்ல விமர்சனம். “நான் அரசியல் பேசல. மொழிப்பற்றுதான் இதற்குக் காரணம்” என்கிற டிஸ்கிளைய்மரையும் ஜாக்கிரதையாக இணைத்துக் கொண்டார் கமல்.

‘தமிழ் உங்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தாலும் நீங்கள் தமிழர்தான்” என்று ஐக்கியைப் பாராட்டிய கமல், சீன வானொலியில் தமிழ் நிகழ்ச்சி நடத்தி வரும் கலையரசி என்பவரையும் மறக்காமல் குறிப்பிட்டார். “தமிழ் மொழியின் பின்னால் உள்ள கலைப்பொக்கிஷங்களை அறிந்துகொள்ள ஓர் ஆயுள் பத்தாது. உள்ளே போய் பாருங்க. அவ்வளவு விஷயம் இருக்கிறது. தாய்மொழியில் கல்வி கற்றால்தான் அது ஆழமாகச் சென்று சேரும் என்பதை ஜப்பானியர்களும் ஜெர்மானியர்களும் ஏற்கெனவே நிரூபித்து விட்டனர்” என்று உணர்ச்சிகரமாக பேசிவிட்டு விடைபெற்றார் கமல்.

பிக் பாஸ் - 7
பிக் பாஸ் - 7

இருக்கிற பசியில் பூண்டு குழம்பு உள்ளிட்டவைகளை சாப்பிடுவது போல் கற்பனை செய்து கொண்டிருந்தார் பிரியங்கா. விதம் விதமான உணவு வகைகள் வந்தன. “இன்னிக்கு ஞாயித்துக்கிழமை” என்று பிரியங்கா சொன்னால் கூட ‘கெக்கே. பிக்கே’ என்று சிரித்துத் தள்ளும் கொலைவெறி ரசிகராக நிரூப் மாறியிருக்கிறார். ஆனால் நம்மால்தான் இந்த இரண்டு பேரையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு மொக்கை போடுகிறார் பிரியங்கா. பின்குறிப்பாக வரும் சிரிப்புச் சத்த ரிங்டோன் இன்னமும் மோசம்.

“சாப்பிட்ட பின்பு அதன் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுங்கள். சிங்க்கில் போடாதீர்கள்” என்பதை உரத்த குரலில் ஐம்பதாவது முறையாகச் சொல்லிக் கொண்டிருந்தார் சுருதி.

இந்த எல்கேஜி சமாச்சாரத்தை வளர்ந்தவர்கள் கூட பிக் பாஸில் இன்னமும் பின்பற்ற மறுக்கிறார்கள். முதல் சீஸனில் இருந்தே இந்தக் கொடுமை தொடர்கிறது. நிலைமை இப்படி இருக்கும் போது ‘தமிழ் மூத்த குடி’ என்று பெருமை பேசுவதில் என்ன உபயோகம் இருக்கிறது?!