Published:Updated:

பிக் பாஸ் எக்ஸ்க்ளூசிவ்: சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ... இரண்டாமிடம் பிரியங்காவா, பாவனியா?

பிக் பாஸ் ராஜூ

கமல் கலந்து கொண்ட இன்றைய ஷூட்டிங்கில் கடைசி நேரத் திருப்பமாக ஒரு அதிரடி நிகழ்ந்தது. அதாவது இறுதிச் சுற்றிலிருந்த ஐந்து பேரில் நீருப் மற்றும் அமீர் இருவரும் வெளியேற்றப்பட்டார்கள்.

பிக் பாஸ் எக்ஸ்க்ளூசிவ்: சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ... இரண்டாமிடம் பிரியங்காவா, பாவனியா?

கமல் கலந்து கொண்ட இன்றைய ஷூட்டிங்கில் கடைசி நேரத் திருப்பமாக ஒரு அதிரடி நிகழ்ந்தது. அதாவது இறுதிச் சுற்றிலிருந்த ஐந்து பேரில் நீருப் மற்றும் அமீர் இருவரும் வெளியேற்றப்பட்டார்கள்.

Published:Updated:
பிக் பாஸ் ராஜூ

விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 100 நாள்களைக் கடந்து தற்போது முடிவடைந்திருக்கிறது. நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் இன்று (15/1/22) காலை தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. நாளை (16/1/22) இரவு ஒளிபரப்பாகிற கிராண்ட் பைனல்தான் நிகழ்ச்சியின் கடைசி எபிசோடு.

பதினெட்டுப் போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு அமீர், சஞ்சீவ் என இருவர் வைல்டு கார்டு வழியாக இணைந்தார்கள். அடுத்தடுத்த வாரங்களில் நடந்த எவிக்‌ஷனில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற, நிறைவாக அமீர், நிரூப், ராஜூ, பிரியங்கா, பாவனி ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றில் டைட்டில் வெல்லும் ரேஸில் இருக்கிறார்கள்.

பாவனி
பாவனி

கமல் கலந்து கொண்ட இன்றைய ஷூட்டிங்கில் கடைசி நேரத் திருப்பமாக ஒரு அதிரடி நிகழ்ந்தது. அதாவது இறுதிச் சுற்றிலிருந்த ஐந்து பேரில் நீருப் மற்றும் அமீர் இருவரும் வெளியேற்றப்பட்டார்கள். நான்கு பேர் இறுதிக்கட்டத்துக்குத் தேர்வாவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மூன்று பேர் இறுதியில் மிஞ்சி இருக்கிறார்கள். இவர்கள் வெளியேறிய எபிசோடு இன்று இரவே ஒளிபரப்பாகும்.

அதனைத் தொடர்ந்து இறுதியிலிருந்த மூன்று பேரில் முதலிடத்தைப் பிடித்து பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டில் வின்னராகி இருக்கிறார் ராஜூ. இவருக்கு முன்னர் இருந்தே மக்களின் ஆதரவு இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக எவிக்ஷனில் ராஜூ வரும்போதெல்லாம், மக்கள் வாக்கெடுப்பின் மூலம் காப்பாற்றப்பட்ட முதல் நபராகவே பெரும்பாலும் இருந்துவந்தார்.

பிக் பாஸ் பிரியங்கா
பிக் பாஸ் பிரியங்கா

இரண்டாவது இடம் விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கரான பிரியங்காவுக்குக் கிடைத்திருக்கிறது. உடல்நலக் குறைவால் வெளியே சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய பிரியங்கா, இறுதிப் போட்டிக்கான ஷூட்டிங்கில் பங்கேற்று இருக்கிறார்.

மூன்றாவது இடம் இளைஞர் பட்டாளத்தைப் பெரிதும் கவர்ந்த பாவனிக்குக் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் நூறு நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 இனிதே நிறைவடைந்திருக்கிறது.