Published:Updated:

BIGG BOSS Exclusive: பிக் பாஸ் சீசன் 6; சர்ச்சை பிரபலங்களுக்கு வாய்ப்பா? தொடங்கும் தேதி இதுதான்!

பிக் பாஸ் கமல்ஹாசன்

ஐந்து சீசன்களிலும் ஐந்தாவது சீசனே வரவேற்பு குறைந்த சீசன்; காரணம் அந்த சீசனின் போட்டியாளகள்தான் என சேனல் நினைப்பதாகவும் அதனால் இந்த முறை போட்டியாளர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

BIGG BOSS Exclusive: பிக் பாஸ் சீசன் 6; சர்ச்சை பிரபலங்களுக்கு வாய்ப்பா? தொடங்கும் தேதி இதுதான்!

ஐந்து சீசன்களிலும் ஐந்தாவது சீசனே வரவேற்பு குறைந்த சீசன்; காரணம் அந்த சீசனின் போட்டியாளகள்தான் என சேனல் நினைப்பதாகவும் அதனால் இந்த முறை போட்டியாளர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Published:Updated:
பிக் பாஸ் கமல்ஹாசன்
பிக் பாஸ் - இன்டர்நேஷனல் ஃபார்மட்டான இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி முதலில் இந்தியில் ஒளிபரப்பானது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி இதைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய‌து.

தமிழ்த் தொலைக்காட்சி உலகத்துக்குப் புதிய ஃபார்மட் என்பதால் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 6-வது சீசனுக்கான வேலைகள் நடந்துவருகிறது. முதல் ஐந்து சீசன்களையும் கமல் தொகுத்து வழங்கிய நிலையில், ஒ.டி.டி.யில் தொடங்கப் பட்ட `பிக் பாஸ் அல்டிமேட்' -ஐ சிம்பு தொகுத்து வழங்கினார். `பிக் பாஸ் 6'ஐ தொகுத்து வழங்கப் போவது யார்? என்கிற ஒரு கேள்வி ஆரம்பத்தில் இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், சில மாதங்களுக்கு முன் சேனல் கமலிடம் 6வது சீசனைத் தொகுத்து வழங்குவது குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்க, கமல் தொகுத்து வழங்குவது கன்ஃபார்ம் ஆனது. இந்தச் செய்தியும் விகடன் தளத்தில் வெளியாகி இருந்தது. தற்போது அடுத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அது, பிக் பாஸ் சீசன் 6 தொடங்கும் நாள் குறித்த செய்தி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆம், பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்ட நிலையில், அடுத்த சில தினங்களில் கமல் புரொமோ ஷூட்டுக்குக் கிளம்புவார் என்கிறார்கள். அப்போது சீசன் 6 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சேனலில் இருந்து வெளியாகலாம் எனத் தெரிய வருகிறது. ஐந்து சீசன்களிலும் ஐந்தாவது சீசனே வரவேற்பு குறைந்த சீசன்; காரணம் அந்த சீசனின் போட்டியாளகள்தான் என சேனல் நினைப்பதாகவும் அதனால் இந்த முறை போட்டியாளர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் | கமல்ஹாசன்
பிக்பாஸ் | கமல்ஹாசன்

அதாவது சர்ச்சைக்குப் பெயர் போனவர்கள் அதிகப்படியான அளவில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படலாம் என்கிறார்கள். போட்டியாளர்கள் என ஏற்கெனவே சமூக வலைதளங்களில் சில பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் சிம்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்புக் கிளப்பிய நடிகை ஶ்ரீநிதி பெயரும் அடிபடத் தொடங்கி இருக்கிறது என்கின்றனர். விரைவில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.