Published:Updated:

BIGG BOSS சீசன் 6 Exclusive: மக்கள் போட்டியாளர், 24 மணி நேர ஒளிபரப்பு; இன்னும் என்னவெல்லாம் ஸ்பெஷல்?

பிக் பாஸ் கமல்ஹாசன்

இந்த முறை போட்டியாளர்கள் விஷயத்தில் சேனல் தரப்பு கூடுதல் கவனம் செலுத்தவிருப்ப‌தாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, தற்போது மற்றொரு ஹைலைட்டான தகவலும் நமக்குக் கிடைத்துள்ளது.

BIGG BOSS சீசன் 6 Exclusive: மக்கள் போட்டியாளர், 24 மணி நேர ஒளிபரப்பு; இன்னும் என்னவெல்லாம் ஸ்பெஷல்?

இந்த முறை போட்டியாளர்கள் விஷயத்தில் சேனல் தரப்பு கூடுதல் கவனம் செலுத்தவிருப்ப‌தாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, தற்போது மற்றொரு ஹைலைட்டான தகவலும் நமக்குக் கிடைத்துள்ளது.

Published:Updated:
பிக் பாஸ் கமல்ஹாசன்
பிக் பாஸ் - சர்வதேச ஃபார்மேட்டைப் பின்பற்றி, இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி முதலில் இந்தியில் ஒளிபரப்பானது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி இதைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய‌து.

தமிழ்த் தொலைக்காட்சி உலகத்துக்கு இது புதிய ஃபார்மேட் என்பதால் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 6வது சீசனுக்கான வேலைகள் நடந்துவருகின்றன. முதல் ஐந்து சீசன்களையும் கமல் தொகுத்து வழங்கிய நிலையில், ஓ.டி.டி.யில் ஒளிபரப்பான `பிக் பாஸ் அல்டிமேட்'-டையும் அவரே முதலில் தொடங்கி வைத்தார். பின்னர் அவரின் பட ஷூட்டிங் கமிட்மென்ட் காரணமாக, சிம்பு அந்த நிகழ்ச்சிக்குள் வந்தார். இந்த நிலையில், 'பிக் பாஸ் 6-ஐ தொகுத்து வழங்கப் போவது யார்?' என்கிற ஒரு கேள்வி ஆரம்பத்தில் இருந்தது.

பிக் பாஸ் கமல், சிம்பு
பிக் பாஸ் கமல், சிம்பு

ஆனால், சில மாதங்களுக்கு முன் சேனல் தரப்பிலிருந்து கமலிடம் 6வது சீசனைத் தொகுத்து வழங்குவது குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்க, அவரே தொகுத்து வழங்குவது என முடிவானது. இந்தச் செய்தியும் விகடன் தளத்தில் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் அதை உறுதிசெய்யும் வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6-க்கான புரோமோக்கள் கமலை வைத்து வெளியாகத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து அடுத்த எக்ஸ்க்ளூசிவ் தகவலாக பிக் பாஸ் சீசன் 6 தொடங்கும் தேதியையும் (அக்டோபர் 2) வெளியிட்டிருந்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனிடையே இந்த சீசனுக்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக் கட்டத்தை எட்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். கூடுதல் சிறப்பாக, இந்த சீசனில் ஒன்று அல்லது இரண்டு இடங்களுக்கு மக்களிலிருந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான புரோமோக்களும் முந்தைய சீசன் டைட்டில் வின்னரான ராஜுவை வைத்து ஏற்கெனவே ஒளிபரப்பட்டன.

அதேபோல, 'மொத்தம் ஒளிபரப்பான ஐந்து சீசன்களிலும் ஐந்தாவது சீசனே வரவேற்பு குறைந்த சீசன்; காரணம் அந்த சீசனின் போட்டியாளர்கள்தான்' என சேனல் தரப்பு நினைப்பதாகவும் அதனால் இந்த முறை போட்டியாளர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்ப‌தாகவும் சொல்லப்படுகிறது.

Bigg Boss Tamil Kamal Haasan
Bigg Boss Tamil Kamal Haasan
இவற்றை எல்லாம் தாண்டி, தற்போது மற்றொரு ஹைலைட்டான தகவலும் நமக்குக் கிடைத்துள்ளது.

அது, 'எந்த வருடமும் இல்லாதவாறு வரும் 'பிக் பாஸ் சீசன் 6' ஒரே நேரத்தில் டிவியிலும் ஓ.டி.டி.யிலும் ஒளிபரப்பாகப் போகிற‌து' என்பதுதான். தினமும் டிவியில் ஒரு மணி நேர ஸ்லாட் வழக்கம்போல இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். அதேவேளையில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேர ஒளிபரப்பும் இருக்கிறதாம். பிக் பாஸ் அல்டிமேட்டைப் போலவே போட்டியாளர்கள் ஒருநாள் முழுக்க என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் பார்த்துக்கொள்ளலாம்.

ஆக, வரும் அக்டோபர் முதல் தேதி போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டினுள் செல்ல, 2ம் தேதி முதல் எபிசோடை நீங்கள் சேனலில் பார்க்கலாம்.