Published:Updated:

வனிதாவின் முன்னாள் கணவர் முதல் ரச்சிதா வரை - பிக் பாஸ் சீசன் 6 முதற்கட்ட போட்டியாளர் லிஸ்ட்!

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் குறித்தும் நமக்குக் கிடைத்த நம்பகமான சோர்ஸ் அடிப்படையில் முதற்கட்டமாகச் சிலரது பெயர்கள் கிடைத்துள்ளன.

வனிதாவின் முன்னாள் கணவர் முதல் ரச்சிதா வரை - பிக் பாஸ் சீசன் 6 முதற்கட்ட போட்டியாளர் லிஸ்ட்!

பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் குறித்தும் நமக்குக் கிடைத்த நம்பகமான சோர்ஸ் அடிப்படையில் முதற்கட்டமாகச் சிலரது பெயர்கள் கிடைத்துள்ளன.

Published:Updated:
பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. போட்டியாளர்களை இறுதி செய்யும் பணிகள் முழுவீச்சுடன் நடந்து வருகின்றன. போட்டியாளர்களுக்கான நிபந்தனைகள், அவர்களுக்கான சம்பள விஷயங்கள் தொடர்பாக ஒவ்வொருவருடனும் நிகழ்ச்சித் தயாரிப்புத் தரப்பிலிருந்து தனித்தனியே பேசி வருகின்றனர்.

முந்தைய சீசன்களில் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் முன் கூட்டியே ஊடகங்கள் வழியே வெளியில் கசிந்தது போல் இந்த முறை நடக்காது என்கிறார்கள். காரணம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வளவு கடுமையான கெடுபிடியாம்.

இருந்தும், நாமும் முந்தைய சீசன்களைப் போலவே எக்ஸ்க்ளூசிவ் வேட்டையை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்.

`பிக் பாஸ்’
`பிக் பாஸ்’
`பிக் பாஸ் தொடங்கும் தேதி' மற்றும் `இந்தாண்டு தினசரி ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர எபிசோடு தாண்டி ஓ.டி.டி.யில் 24 மணிநேரமும் நிகழ்ச்சியைக் காணலாம்' போன்ற செய்திகளை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம்.

அந்த வகையில் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் குறித்தும் நமக்குக் கிடைத்த நம்பகமான சோர்ஸ் அடிப்படையில் முதற்கட்டமாகச் சிலரது பெயர்கள் கிடைத்துள்ளன.

இந்த நிமிடம் வரை இந்தப் பட்டியல் உறுதியானது என்றாலும் கடைசி நேர மாறுதலில் எதுவும் நடக்கலாம். இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் யார், யார்?

ராபர்ட்

நடன இயக்குநர். பரபரப்புக்குப் பெயர் போன நடிகை வனிதா விஜய்குமாரைத் திருமணம் செய்து கொண்டு சில காலம் அவருடன் வாழ்ந்தவர். இருவரும் சேர்ந்து 'எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல்' என்கிற படத்தை எடுத்தனர். பிறகு என்ன காரணமோ இருவரும் பிரிந்துவிட்டனர்.

ராபர்ட்
ராபர்ட்

பிக் பாஸ் வீட்டுக்குள் ராபர்ட் நுழைகிற பட்சத்தில் முந்தைய சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜய்குமார் குறித்து அவரிடம் சக போட்டியாளர்கள் யாராவது ஏதாவது பேசினால் அது நிகழ்ச்சிக்கு கன்டென்ட்டாக அமையும் என நினைக்கிறதாம் சேனல்.

ரச்சிதா

விஜய் டிவி முகம். விஜய் டிவியின் 'பிரிவோம் சந்திப்போம்' தொடர் மூலம்தான் தமிழ் சீரியலுக்கு அறிமுகமானார். பிறகு 'சரவணன் மீனாட்சி' தொடர் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரிலும் நடித்தார். பிறகு விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழ் பக்கம் போனார். அங்குக் கணவர் தினேஷுடன் ஜோடி சேர்ந்து 'நாச்சியார் புரம்' சீரியலில் நடித்தார். கோவிட் காரணமாக அந்தத் தொடரும் நிறுத்தப்பட, கடைசியில் கலர்ஸ் தமிழ் சேனலில் 'சொல்ல மறந்த கதை' தொடரில் நடிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் கணவர் தினேஷுடன் கருத்து வேறுபாடு உண்டாக, தற்சமயம் அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

rachitha
rachitha

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் 'சொல்ல மறந்த கதை' தொடரைச் சட்டென முடித்து விட்டது கலர்ஸ் தமிழ். அதுகுறித்து தனது அதிருப்தியையும் ஓப்பனாகப் பேசியிருந்தார் ரச்சிதா. இந்த நிலையில்தான் விஜய் டிவி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள‌ இவரை சம்மதிக்க வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ரச்சிதா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிற போது, அங்கு அவரது பர்சனல் லைஃப் குறித்த பேச்சுகள் எழுந்தால் அது நிகழ்ச்சியின் ரேட்டிங்குக்கு நிச்சயம் உதவலாம்.

விசித்ரா

பத்தாவது படிக்கும் போதே தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். நடித்து ரிலீசான முதல் படம் 'ஜாதி மல்லி'. தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தவரை இயக்குநர் பிரதாப் போத்தன் 'ஆத்மா' படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாட வைத்தார். அதைத் தொடர்ந்து கிளாமர் முத்திரை இவரின் மேல் விழுந்தது. ரஜினி நடித்த 'முத்து', 'வீரா' ஆகிய படங்களிலும் நடித்தவர் பிறகு, தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு மைசூரில் செட்டில் ஆனார்.

விசித்ரா
விசித்ரா

சமீபத்தில் மீண்டும் நடிக்க வந்து சீரியல் பக்கம் வந்தார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 6 போட்டியாளர் இறுதி லிஸ்டில் இவரது பெயரும் இருப்பதாகத் தெரிகிறது.

சினிமாவில் நடித்த போது இவருக்கென இருந்த ரசிகர் கூட்டம் இவரது பிக் பாஸ் வருகையை ரொம்பவே விரும்புவார்கள் என நம்பலாம்.

இப்போதைக்கு நமக்குக் கிடைத்த முதல் பட்டியல் இதுதான். மீதிப் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில்...