Published:Updated:

பிக் பாஸ் அல்டிமேட் எக்ஸ்க்ளூசிவ்: போட்டியாளர்கள் யார்? உறுதி செய்யப்பட்ட முதல் 6 பேர் கொண்ட லிஸ்ட்!

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்: வழக்கம் போல் விகடனுக்குக் கிடைத்திருக்கிறது இறுதி செய்யப்பட்ட முதல் பாதி லிஸ்ட். ஆறு பேர் கொண்ட அந்தப் பட்டியல் இங்கே.

பிக் பாஸ் அல்டிமேட் எக்ஸ்க்ளூசிவ்: போட்டியாளர்கள் யார்? உறுதி செய்யப்பட்ட முதல் 6 பேர் கொண்ட லிஸ்ட்!

பிக் பாஸ் அல்டிமேட்: வழக்கம் போல் விகடனுக்குக் கிடைத்திருக்கிறது இறுதி செய்யப்பட்ட முதல் பாதி லிஸ்ட். ஆறு பேர் கொண்ட அந்தப் பட்டியல் இங்கே.

Published:Updated:
பிக் பாஸ் அல்டிமேட்
விஜய் டிவியில் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்த சூட்டோடு தொடங்க இருக்கிறது ஒடிடி பிக் பாஸ். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வரும் ஜனவரி 30 முதல் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட்டில் பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து 4 வது சீசன் வரை கலந்து கொண்ட போட்டியாளர்களில் தனக்கென தனி முத்திரை பதித்த சிலரைத் தேடிப்பிடித்துக் கூட்டி வந்திருக்கிறார்கள்.

விஜய் டிவியில் பிக் பாஸ் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த பிக் பாஸ் அல்டிமேட்டையும் தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓடிடி பிக் பாஸ் என்பதால் அதற்கேற்றபடி நிகழ்ச்சியில் சில புதுமைகள் புகுத்தப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள். முக்கியமாக ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர ஒளிபரப்பு. இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் நாள் முழுக்க என்ன நடக்கிறது என்பதை ரசிகர்கள் கண்டு கொள்ள முடியும் என்கிறார்கள். இது தவிர தினசரி 45 நிமிட தனி செக்மெண்டும் உண்டாம்.

சரி, 12 போட்டியாளர்கள், 60 நாள்கள் என அமர்க்களமாகத் தயாராகி வரும் பிக் பாஸ் அல்டிமேட்டின் போட்டியாளரகள் யார் யார்?

வழக்கம் போல் விகடனுக்குக் கிடைத்திருக்கிறது இறுதி செய்யப்பட்ட முதல் பாதி லிஸ்ட். ஆறு பேர் கொண்ட அந்தப் பட்டியல் இங்கே.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓவியா

ஓவியா
ஓவியா

பிக் பாஸ் முதல் சீசன் தொடங்குவதற்கு முன்பு வரை ‘களவாணி’ பட நடிகை என்பதே இவரின் அடையாளம். ஆனால் பிக் பாஸ் ஒளிபரப்பாகத் தொடங்கியதுதான் தாமதம், எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியாது, அவ்வளவு பேர் ஆர்மியாகத் திரண்டனர். தேர்தல் பிரசார மேடையில் ‘ஓவியாவுக்குப் போட்ட ஒன்றரைக் கோடி ஓட்டை எனக்குப் போட்டிருந்தா நான் மாற்றம் முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருப்பேன்’ என அன்புமணி ராமதாஸே அங்கலாய்த்தார் என்றால் ஓவியாவின் புகழைப் பார்த்துக் கொள்ளலாம்.

ஜூலி

ஜூலி
ஜூலி

ஜல்லிக்கட்டு கேட்டு நடந்த மெரினா போராட்டம் மூலம் பிரபலமானவர், ‘வீரத் தமிழச்சி’ என பிக் பாஸ் வீட்டுக்குள் போகும் போது கொண்டாடப் பட்டவர், நிகழ்ச்சியின் சூட்சமங்களைப் புரிந்து கொள்ளவில்லையா தெரியவில்லை, வெளியில் வரும் போது அவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள். இவரைப் போன்ற ஒருவர் இருந்தால் கன்டென்ட் நிச்சயம் என்பதால பிக் பாஸ் அல்டிமேட் இவரையும் விடவில்லை.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்
படம்: ப.பிரியங்கா / விகடன்

பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளர். அந்த சீசனில்... ஜெயிப்பது இருக்கட்டும்... இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைக்கூட இவர் பிடிக்கவில்லை. ஆனாலும் அந்த சீசனில் நிறைய கன்டென்ட் கிடைக்கக் காரணமாக இருந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்ல பொது வெளியிலுமே தன்னை கவனத்தின் மையப் புள்ளியாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறவர். லட்சுமி ராமகிருஷ்ணனுடன் லைவில் சண்டை, ரம்யா கிருஷ்ணனுடன் முறைத்துக் கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது என ஏக சர்ச்சைகளில் சிக்கியவர். பிக் பாஸ் அல்டிமேட்டில் என்ன பண்ணக் காத்திருக்கிறாரோ?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிநேகன்

சிநேகன்
சிநேகன்

பிக் பாஸ் முதல் சீசனில் இரண்டாமிடம் பிடித்தவர். தொடர்ந்து கமலின் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். சமீபத்தில் கமல் தலைமையில் இவரது திருமணமும் நடந்தது நினைவிருக்கலாம். கவிதையாகப் பேசி ரசிகர்கள் ஆதரவுடன் முதல் சீசனில் வலம் வந்தார். இப்போது வலிமையான போட்டியாளராக கோதாவில் குதித்திருக்கிறார்.

அபிராமி வெங்கடாசலம்

அபிராமி
அபிராமி

திரைப்பட நடிகை. பிக் பாஸ் 3ல் கலந்து கொண்டவர். முகேனுடனான காதல் சர்ச்சையில் சிக்கி வைரலானவர். இப்போது மீண்டும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறார்.

சுரேஷ் சக்ரவர்த்தி

சுரேஷ் சக்ரவர்த்தி
சுரேஷ் சக்ரவர்த்தி

பிக் பாஸ் 4வது சீசனில் கலந்து கொண்டவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கிய அனுபவம் கொண்டவர். சில படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த சீசனின் தொடக்கத்தில் இவரின் ஸ்ட்ராட்டஜி பாராட்டுக்களைப் பெற்றது. அதே வேகத்துடன் இப்போதும் ஆடினால், பிக் பாஸ் வீடு களைகட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism