Published:Updated:

கடைசி நேரத்தில் `பிக் பாஸ் அல்டிமேட்’டிலிருந்து விலகிய நடிகை... காரணம் இதுதான்!

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பெரிய அளவில் பெயர் வாங்கிய அந்த நடிகையும் 'பிக் பாஸ் அல்டிமேட்' செல்வதாக இருந்தார். அவரின் வருகையைத்தான் பிக் பாஸ் ரசிகர்களும் அவரின் ஆர்மியும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

கடைசி நேரத்தில் `பிக் பாஸ் அல்டிமேட்’டிலிருந்து விலகிய நடிகை... காரணம் இதுதான்!

பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பெரிய அளவில் பெயர் வாங்கிய அந்த நடிகையும் 'பிக் பாஸ் அல்டிமேட்' செல்வதாக இருந்தார். அவரின் வருகையைத்தான் பிக் பாஸ் ரசிகர்களும் அவரின் ஆர்மியும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

Published:Updated:
பிக் பாஸ் அல்டிமேட்
வரும் ஞாயிறு (30/1/22) முதல் தமிழில் முதல் முறையாக ஒ.டி.டி.யில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் அல்டிமேட்.

விஜய் டிவியில் 2017 முதல் ஒளிபரப்பான ஐந்து பிக் பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரே ’பிக் பாஸ் அல்டிமேட்’டிலும் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இதுவரை சிநேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், அபிராமி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய போட்டியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பெரிய அளவில் பெயர் வாங்கிய அந்த நடிகையும் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தார். அவரின் வருகையைத்தான் பிக் பாஸ் ரசிகர்களும் அவரின் ஆர்மியும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போட்டியாளர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக அறிவித்து வரும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அவரது பெயரை இன்றோ அல்லது நாளையோ வெளியிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நேற்று அவருக்கு கோவிட் பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டதாம்.

எனவே தற்போது அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் அவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறதாம்.

அவருக்குப் பதிலாக இரண்டாம் சீசனில் தோழிகளாக வலம் வந்த இருவரில் ஒருவரை அழைக்கப் பேசி வருகிறார்களாம். அதில் இரண்டாமிடம் பிடித்தவருக்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism