Published:Updated:

மஹத் - யாஷிகா... கோயிங் ஸ்டெடி! மிட்நைட் மசாலா சஸ்பென்ஸ்

தார்மிக் லீ

பிக் பாஸ் மார்னிங் மசாலா, மிட்நைட் மசாலா

மஹத் - யாஷிகா... கோயிங் ஸ்டெடி! மிட்நைட் மசாலா சஸ்பென்ஸ்
மஹத் - யாஷிகா... கோயிங் ஸ்டெடி! மிட்நைட் மசாலா சஸ்பென்ஸ்

நேற்றைய எபிசோடில் மஹத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நாமினேஷன் பட்டியலில் சில புதுப் பெயர்களும் அடிபட்டன. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இரண்டு, மூன்று அணிகளாகப் பிரிந்து சில கிசுகிசுக்களைப் பேச ஆரம்பித்ததைத் தொடர்ந்து, நிகழ்ச்சி சூடு பிடிப்பதை நம்மால் அறிய முடிந்தது. நேற்றைய மெயின் எபிசோடு முடிந்த பின், மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? 

* இரவோடு இரவாக பிக் பாஸ் அனைவருக்கும் டாஸ்க் கொடுத்துவிட்டார் போல!. எல்லோரும் பால்ய காலத்துக்குச் சென்றுவிட்டார்கள் என்பது அவர்கள் அணிந்திருந்த உடையிலேயே தெரிந்தது. வைஷ்ணவி, ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியல், சென்றாயன் என அனைவரும் பள்ளிச் சீருடையில் வீட்டுக்குள் உலா வந்துகொண்டிருந்தனர். அப்போதும் அவரவர் கூட்டத்தோடு இணைந்து, மற்ற கேங் ஆள்களைப் பற்றி புறணி பேசிக்கொண்டிருந்தனர். `கெடக்குறது கெடக்கட்டும், நான் காக்காவுக்குச் சோறு வைப்பேன்' என்றபடி மும்தாஜ் நள்ளிரவு 11.30 மணிக்கு காக்காவுக்கு சின்சியராகச் சோறு வைத்துக்கொண்டிருந்தார். என்ன ஒரு மனிதாபிமானம்!.   

* சென்றாயன் பரீட்சை அட்டையோடு  வீடு முழுக்கச் சுற்றிக்கொண்டிருந்தார். பெட்ரூமுக்கு வந்த அவரிடம், டேனியலும் மஹத்தும் ஏதோ தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர். இதற்கு நடுவில் ரம்யா, `மக்களெல்லாம் ஏன் நாம நடிக்கிறோம்னு நினைக்கிறாங்க?' என மும்தாஜிடம் டவுட் கேட்டுக்கொண்டிருந்தார். `அது ஏண்டா என்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்ட?' என்பதுபோல் லுக் விட்ட மும்தாஜ், `சிலபேர் இங்கே உண்மையிலேயே நடிக்கிறாங்க. அதனாலதான் மக்கள் அப்படி நினைக்கிறாங்க!' என்று ரைமிங்காகப் பேசியதோடு, அந்தப் பக்கம் இருந்த டேனியலை ஓரக் கண்ணால் பார்த்தார். பொடி வெச்சுப் பேசுறாங்களாம்! 

* ஆக, நாளை பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு பெரிய கூத்தே காத்திருக்கிறது. `கைவீசம்மா கைவீசு' ரைம்ஸைப் பாடி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த டேனியல், `அய்யயோ... நான் இன்னும் ஹோம் வொர்க் பண்ணலையே!' என யாஷிகாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார். சென்றாயனும், யாஷிகாவும் திருக்குறளை மனப்பாடம் செய்துகொண்டிருந்தனர். `சின்ன வயசுல இதெல்லாம் பண்ணது. மறுபடியும் இப்போதான் ஞாபகம் வருது' என சென்றாயனிடம் ஏக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தார், டேனியல். `எங்க மாமா... எனக்கு அதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லாமப் போயிடுச்சு' என்று ஃபீல் பண்ணிக்கொண்டிருந்தார், சென்றாயன். எல்லாத்தையும் பிராக்டீஸ் பண்ணிட்டு இன்னைக்கு நைட்டு, கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்னு சொல்லாம இருந்தா சரி!.

* பாத்ரூம் ஏரியாவில் மஹத்தைக் கடந்து சென்ற யாஷிகா, `ஈர்க்கும் விசையினை அவளிடம் கண்டேனே...' என ரொமான்ஸாகப் பாடிக்கொண்டே ஒரு லுக் விட்டார். வெளியே சென்ற மஹத் யாரையோ பார்த்ததும், `அய்யயோ இவன் வேற உட்கார்ந்திருக்கானே' என்று பதுங்கி பாத்ரூமில் இருந்த சேரிலேயே உட்கார்ந்து, யாஷிகாவிடம் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தார். `யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாதுனே தெரியலை' என்று புலம்ப, `யாரையுமேவா நம்பமாட்ட?' என்று யாஷிகா ஏக்கமாக மஹத்தைப் பார்க்க, ஏதேதோ அட்வைஸ் மழையை மஹத் பொழிய, இவர் யாஷிகாவின் கையைப் பிடிக்க, இதையடுத்து யாஷிகா மஹத்துக்குச் சில அறிவுரைகள் கொடுக்க... எனக்கும், `என்னடா நடக்குது இங்கே' என்று கேட்க ஆசைதான். என்ன செய்வது? 

* மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா, டேனியலுக்கு இடையேயான நட்பு, `தான் யாரை நாமினேட் செய்திருக்கிறேன்' என்று ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டது. ஆனால், விதிமுறைப்படி இதையெல்லாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளக் கூடாது. `ஆமா, உள்ளே நடக்கிறதெல்லாம் விதிமுறைப்படிதான் நடக்குது பாரு...' இதுதானே உங்க மைண்டு வாய்ஸ்? ரைட்டு விடுங்க!. ஆக மொத்தம், வீட்டுக்குள் பெரும் பிளவே ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அவ்வப்போது புறம் பேசிக்கொண்டிருந்தவர்கள், முழுநேரமாக அதையே செய்துகொண்டிருப்பதை மிட்நைட் மசாலாவில் நன்றாக உணரமுடிகிறது.  

* நாலாபுறமும் இப்படியாகவே இருக்க, கிச்சன் ஏரியாவில் சில ஜாலி மொமன்ட்ஸும் நிகழ்ந்தன. `இருக்கிறதுலேயே உங்களுக்கு கிரேஸி ரசிகன்னா, யாரு?' என வைஷ்ணவி மும்தாஜிடம் கேட்க, `நான் பீக்ல இருந்தப்போ எனக்கு ரசிகர் மன்றம் எல்லாம்கூட வெச்சிருந்தாங்க. என்னைப் பார்க்க வாரவாரம் கூட்டம் கூட்டமா டிரக் பிடிச்சு, கல்யாண ஊர்வலம் மாதிரி கூடி வந்து பார்ப்பாங்க, ரசிகர்கள். ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதம்கூட சமயத்துல வரும். இன்னொரு பக்கம் எனக்குக் கோயில் கட்டுறதுக்குச் சில பஞ்சாயத்துகளும் போய்க்கொண்டிருந்தது...' எனச் சொல்லிவிட்டு, `என் கெரகம்... இங்கே வந்து சப்பாத்திக்கு மாவு உருட்டிக்கிட்டிருகேன்!' என்றார், மும்தாஜ்.

இன்னும் என்னென்ன நடக்குமோ... பார்ப்போம்!