Published:Updated:

`ஒரே ஒரு குண்டுதான்... டோட்டல் பிக்பாஸ் வீடே க்ளோஸ்..!' - பிக்பாஸின் அடுத்த டாஸ்க் #Masala

தார்மிக் லீ

பிக் பாஸ் மிட்நைட் மற்றும் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது?

`ஒரே ஒரு குண்டுதான்... டோட்டல் பிக்பாஸ் வீடே க்ளோஸ்..!' - பிக்பாஸின் அடுத்த டாஸ்க் #Masala
`ஒரே ஒரு குண்டுதான்... டோட்டல் பிக்பாஸ் வீடே க்ளோஸ்..!' - பிக்பாஸின் அடுத்த டாஸ்க் #Masala

ஹத்துக்கு வெளியே மகத்தான வரவேற்பு (!) கிடைத்து வருகிறது. டாஸ்க் என்ற பெயரில் இவர் செய்யும் லூட்டிகள் எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த பிக்பாஸ் சீசனிலாவது வாய் வார்த்தைகளில்தான் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், இந்த சீசனில் பல படிகள் மேலே சென்று, அடிதடி சண்டையில் இறங்கியுள்ளனர். கமல், கண்டிப்பாக இதை ஸ்ட்ரிக்ட்டாக கேட்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். உத்தமர்களும் வில்லன்களும் போட்ட சண்டையைத் தொடர்ந்து, மிட்நைட் மற்றும் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது?

* `உத்தம வில்லன்கள்' டாஸ்க் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது போல் பிக்பாஸ் வைக்கும் சில டாஸ்க்குகளை, `டாஸ்க்' என்று சொல்வதைவிட `கொளுத்திப் போடுதல்' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அவ்வாறு பிக்பாஸ் கொளுத்திப்போடுவது, குபுகுபுவென பற்றியெரிந்து வீடே கொழுந்துவிட்டு எரிகிறது. நேற்று, சூப்பர் ஹீரோக்களில் ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரத்துக்கேற்ற கெட்அப்களில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் கறுப்பு நிற ஆடையும், சூப்பர் வில்லன்கள் அனைவரும் வெள்ளை நிற ஆடையும் அணிந்து சுற்றிக்கொண்டிருந்தார்கள். டேனியலும், பாலாஜியும் ஒருபக்கம் டாஸ்க்கில் நடக்கும் அக்கிரமங்களையும், உத்திகளையும் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, ஜனனியும், ரித்விகாவும் ஹீரோக்கள் ஒளித்து வைத்த சாவியைத் தேடிக்கொண்டிருந்தனர். 

* `முனி' படத்தில் ராஜ்கிரணுக்குப் படையல் போட்டிருப்பதுபோல், டைனிங் டேபிலில் 10 கிலோ மட்டன் கறியும், மூன்று சட்டி சோறும் வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து இரண்டு வாய் சாப்பிட்ட ரித்விகாவும் ஜனனியும், சாவியை அதற்குள்ளே ஒளித்து வைத்திருக்கிறார்களா எனக் கிண்டிப் பார்த்தனர். நேற்று டாக்டர் ஹெலனா என்ற பொம்மையைச் சிறைக்குள்ளே அடைத்து வெளியே சில மின்சாரக் காந்தங்கள் பொருத்தி சிறைக்குள் இருந்த ஹெலனாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதுபோல் டாஸ்க்கைக் கொடுத்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து இன்று, டைம் பாம்ப் போல் ஒன்று செட் செய்து, ஒரு சின்ன அறையையும் ஒதுக்கி அதே இடத்தில் வைத்திருந்தார்கள். `ஒரே ஒரு குண்டு டோட்டல் பிக்பாஸ் வீடே க்ளோஸ்' என்று நினைத்து வைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. 

* `பொறுமை... பொறுமை... பொறுமையோ... பொறுமை' என்ற ரேஞ்சில்தான் மும்தாஜ் கடந்த இரண்டு நாள்களாகப் பொறுமை காத்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்றாயனுடன் சற்று நேரம் மனம்விட்டுப் பேசியவர், `நீங்க வெளில வாங்க அண்ணா உங்களுக்கு சூப்பரா ஒரு வொயிட் ஷர்ட் வாங்கித் தர்றேன்' என்று பாசத்தைப் பொழிந்துகொண்டிருந்தார், மும்தாஜ். இவர் சொல்லச் சொல்ல உற்சாகமடைந்த சென்றாயன், `சரி மேடம், தேங்க்ஸ். நானும் உங்களுக்கு ஒரு சூப்பர் ட்ரெஸ் வாங்கித் தர்றேன்' என்று நெகிழ்ச்சியோடு புன்னகைத்துக்கொண்டிருந்தார்.  

* மஹத் வாயிலிருந்து வரும் ஓர் எழுத்துகூட கன்டென்ட்தான் போல. அவர் பேச வாயைத் திறப்பதற்குள் கேமரா அங்கிருந்து கட் ஆகி, வேறு பக்கம் சென்றுவிடுகிறது. மஹத் கொட்டாவி விட்டால்கூட, பிக்பாஸ் அதை கன்டென்ட்டாகத்தான் பார்க்கிறது. தொடர்ந்து, இவர் இதேபோல் செய்து வருவதைப் பார்க்கும்போது, ஒருபக்கம் ஆச்சர்யமாக இருந்தாலும், மறுபக்கம், `இதுதான் அவரது உக்தியாக இருக்கக்கூடும்' என்றும் யோசிக்க வைக்கிறது. ஏனென்றால் மக்களின் ஓட்டுப்படி எவரும் எவிக்ட் ஆகவில்லை என்பது நமக்கே புரிந்திருக்கும். யாரிடமிருந்து கன்டென்ட் வரவில்லையோ அவர்களைத்தான் எலிமினேட் செய்துள்ளார்கள். அதனால்தான் மஹத் எந்நேரமும் நம்மைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று இப்படிச் செய்கிறாரா என்பது சந்தேகமே! 

இந்தக் கலவரத்துக்கு நடுவே `சென்னை 28' படத்தில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி வேறு புது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நுழைந்திருக்கிறார். இன்னும் என்னவெல்லாம் நடக்கக் காத்திருக்கிறது எனத் தெரியவில்லை. தொடர்ந்து பார்ப்போம்!