Published:Updated:

பிக் பாஸ் எவிக்‌ஷன்: 2வது வெளியூர் ஆட்டக்காரர் மதுமிதாவும் அவுட்! யாருக்கெல்லாம் குறைவான வாக்குகள்?

பிக் பாஸைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் ரீச் ஆகி டி.ஆர்.பி பெறுவதற்கென்றே வெளிநாட்டுப் போட்டியாளர்களைக் களம் இறக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் இந்த வார எவிக்‌ஷனில் எலிமினேட் ஆகி வெளியேறி இருக்கிறார் ஜெர்மன் நாட்டிலிருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுமிதா.

பிக் பாஸ் தமிழ் 5வது சீசன் 40 நாள்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. மொத்தம் கலந்து கொண்ட் 18 போட்டியாளர்களில் நமீதா மாரிமுத்து, நடியா சாங், அபிஷேக் ராஜா, சின்னப் பொண்ணு, ஸ்ருதி என இதுவரை ஐந்து பேர் வெளியேறிவிட்டார்கள். இவர்களில் நமீதா மாரிமுத்து தவிர மற்ற எல்லோருமே எலிமினேஷன் ஆகி வெளியேறினார்கள். நமீதா வெளியேறியதற்குத் தவிர்க்க முடியாத காரணம் எனச் சொல்லப்பட்டது.

மதுமிதா
மதுமிதா

இந்த நிலையில், கமல்ஹாசன் கலந்து கொள்ளும் எவிக்‌ஷனுக்கான வழக்கமான வார இறுதி எபிசோடின் ஷூட்டிங் இன்று (13/11/21) காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது. வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இந்த வாரம் மொத்தம் ஏழு பேர் இடம் பிடித்திருந்தார்கள்.

இந்த ஏழு பேரில் இமான் அண்ணாச்சி, பாவனி மற்றும் மதுமிதா ஆகிய மூவருமே மிகக் குறைவான ஓட்டுகள் பெற்றிருந்ததாகத் தெரிய வருகிறது. இவர்களில் மதுமிதா வெளியேறி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ் - 41: கழன்றுவிழுகிறதா ராஜூவின் முகமூடி? `செட் பிராப்பர்டி’க்கு பிரியங்கா ஆடிய மிகை நாடகம்!

முன்னதாக, நேற்றைய பிக் பாஸ் எபிசோடில், ‘தைரியம் இல்லாமல், தனித்தன்மையை இழந்து, அடுத்தவர்களை ஆதரித்து செயல்படும்’ இரண்டு நபர்களுக்கான வாக்கெடுப்பு டாஸ்க் நடந்தது. இதில் ஒருவர் தன்னையே நாமினேட் செய்து கொள்ளலாம் என்பது பிக் பாஸின் புதிய விதி. இதன்படி தன்னையே நாமினேட் செய்து கொண்டவர் மதுமிதா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மொத்தக் கணக்கெடுப்பின்படி, ராஜூவும், இமானும் இறுதியில் தேர்வாகினர்.

மதுமிதா ஜெர்மனில் வசிக்கும் மாடல் கம் ஃபேஷன் டிசைனர். இவரது மூதாதையர் இலங்கையை சேர்ந்தவர்களாம். பிக் பாஸ் வீட்டுக்குள் பெரிதாக கன்டென்ட் தரவில்லையென்றாலும் இவரது தமிழ் உச்சரிப்புக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தது எனலாம். ஒரு வாரம் வீட்டின் கேப்டனாகவும் செயல்பட்டவர், தன்னுடைய தலைமையை யாரும் மதிக்கவில்லை என்று சண்டையும் போட்டுள்ளார்.

பிக் பாஸ் மதுமிதா
பிக் பாஸ் மதுமிதா

பிக் பாஸைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் ரீச் ஆகி டி.ஆர்.பி பெறுவதற்கென்றே வெளிநாட்டுப் போட்டியாளர்களைக் களம் இறக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். முகேன், லாஸ்லியா என் முந்தைய சீசன்களில் இதற்கு உதாரணம் சொல்லலாம். கடந்த சீசனில் கொரோனா காரணமாக வெளிநாட்டுப் போட்டியாளர் இடம் பெறவில்லை.

இந்த சீசனில் மலேஷியாவைச் சேர்ந்த நடியா சாங், ஜெர்மனைச் சேர்ந்த மதுமிதா என இருவர் கலந்து கொண்டனர். நடியா சாங் எவிக்ஷனில் முதல் ஆளாக வெளியேறிய நிலையில் நிகழ்ச்சிக்குள் இரண்டாவது வெளியூர் ஆட்டக்காரராக இருந்து வந்த மதுமிதாவும் தற்போது வெளியேறி இருக்கிறார்.

மதுமிதா வெளியேறிய எபிசோடு நாளை 14/11/21 ஒளிபரப்பாக உள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு