Published:Updated:

5 லட்சத்துடன் வெளியேறிய கேபி... பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது?

பிக்பாஸ் வீட்டில் இருந்து 'கவின்' பாணியைப் பின்பற்றி வெளியேறியிருக்கிறார் கேபி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் - 4 இந்த வாரத்தோடு நிறைவடைய இருக்கிறது.

பிக்பாஸ் இறுதிப்போட்டியில் இப்போது ஆரி, பாலாஜி, ரம்யா, ரியோ, கேபி, சோம் என 6 பேர் இருக்கிறார்கள். இறுதிப்போட்டி பரபர டாஸ்க் தொடங்கயிருக்கும் நிலையில், கடந்த ஆண்டைப்போலவே 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு வெளியேறுபவர்கள், வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் கேபி
பிக்பாஸ் கேபி

6 போட்டியாளர்களில் கேபி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 5 லட்சம் ரூபாயோடு வெளியேறியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக கேப்ரியெல்லா, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தில் நடித்தவர். ஜோடி நம்பர் 1 சீசன் 7-ன் டைட்டில் வின்னர் கேபி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்திலேயே வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேபி, பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்கள் தாக்குப்பிடித்து விளையாடியிருக்கிறார்.

கேபி வெளியேறிய எபிசோடு இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு