Published:Updated:

Exclusive: இனி கமலுக்குப் பதில் எஸ்.டி.ஆர்! பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு சிம்பு வந்ததன் பின்னணி என்ன?

கமல்ஹாசன், சிம்பு

பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து கமல் விலகியதுமே அந்த இடத்துக்கு நடிகர் சிம்பு பெயரைத்தான் பரிசீலித்ததாகச் சொல்கிறார்கள்.

Exclusive: இனி கமலுக்குப் பதில் எஸ்.டி.ஆர்! பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு சிம்பு வந்ததன் பின்னணி என்ன?

பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து கமல் விலகியதுமே அந்த இடத்துக்கு நடிகர் சிம்பு பெயரைத்தான் பரிசீலித்ததாகச் சொல்கிறார்கள்.

Published:Updated:
கமல்ஹாசன், சிம்பு
பிக் பாஸ் அல்டிமேட்டின் புதிய தொகுப்பாளராக நடிகர் சிம்பு கமிட் ஆகியுள்ளார். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக் கேட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்த நிலையில் தற்போது சிம்பு, பிக் பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் முதன் முறையாக 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கியது. டிவியில் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே ஒடிடி-யிலும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். ஆனால் நிகழ்ச்சி தொடங்கி சுமார் 20 நாள்கள் தாண்டிவிட்ட சூழலில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாகச் சொல்லிவிட்டார் கமல்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ச்சியான சினிமா ஷூட்டிங் காரணமாக நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்ததாலேயே இந்த முடிவு என கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்ட கமல், "இது தற்காலிக இடைவெளிதான். விரைவில் விஜய் டிவியில் தொடங்கவிருக்கும் 'பிக் பாஸ் சிசன் 6'-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படியானால் பிக் பாஸ் அல்டிமேட்டின் அடுத்த ஆங்கர் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எட்டிப் பார்த்தது. இதற்காக முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் பெயர் அடிபட்டது. பிக் பாஸ் சீசன் 5 சமயத்தில், கமலுக்கு கொரோனா வந்தபோது சில எபிசோடுகளை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியதால் இந்தப் பேச்சுகள் எழுந்திருக்கலாம். ஆனால், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், கமல் விலகியதுமே அந்த இடத்துக்கு நடிகர் சிம்பு பெயரைத்தான் பரிசீலித்ததாகச் சொல்கிறார்கள்.

சிம்பு
சிம்பு

இந்த விவகாரம் குறித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவி தொடர்புடைய சிலரிடம் பேசிய போது, "டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது தலைமைப் பொறுப்பில் இருக்கும் விஜய் டிவியின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான பிரதீப் மில்ராய் பீட்டருக்கும் நடிகர் சிம்புவுக்கும் இடையிலான நட்பு மிக நீண்டது. விஜய் டிவியில் பிக் பாஸ் ஒளிபரப்பான போது ஒவ்வொரு சீசனிலுமே சிம்பு சிபாரிசு செய்கிற நபர்கள் போட்டியாளர்களாக அனுமதிக்கப்பட்டார்கள். அந்த நட்பின் அடிப்படையிலேயே தற்போது பிரதீப் மில்ராய் கேட்டுக் கொண்டதன் பேரில் பிக் பாஸ் அல்டிமேட்டைத் தொகுத்து வழங்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார் சிம்பு" என்கிறார்கள்.

பிக் பாஸின் வார இறுதி பஞ்சாயத்துகளைச் சிம்பு எப்படிக் கையாள்வார் என்ற ஆர்வம் இப்போதே பிக் பாஸ் ரசிகர்களுக்கு எட்டிப் பார்க்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட்டின் தொகுப்பாளராகச் சிம்பு கலக்குவாரா? உங்கள் கமென்ட் என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism