Published:Updated:

அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளால் அதிரும் பிக்பாஸ் எவிக்‌ஷன்... அப்ப அன்பு தோத்துடுமா பாஸ்?

அர்ச்சனா
அர்ச்சனா

அடுத்த வார நாமினேஷன் லிஸ்ட்டிலிருந்து தப்பித்த அர்ச்சனாவை இந்த வாரமே அனுப்ப இருக்கிறார்களா..? அன்பு தோத்துடுமா பாஸ்?

'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' எனக் கமல் சொன்னதிலிருந்தே ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் அரங்கேறுகிறது எவிக்‌ஷன். முதலில் சம்யுக்தா, அடுத்து சனம் என அதிக வாக்குகள் வாங்கியிருந்தவர்களையும் அதிரடியாக வெளியேற்றினார்கள். இதில் சனம் வெளியேற்றதுக்கு ஏகப்பட்ட எதிர்வினைகள்.

தொடர்ந்து அந்த வீட்டில் 'ஜித்தன்' ரமேஷுடைய வேலைகளையெல்லாம் நிஷா எடுத்துச் செய்ய, இருவரையும் ஒரே எவிக்ஷனில் வெளியேற்றினார்கள்.

இதோ இப்போது அடுத்த வார நாமினேஷன் லிஸ்ட்டிலிருந்து தப்பித்த அர்ச்சனாவை இந்த வாரமே அனுப்பவிருக்கிறார்கள்.

இந்த வாரத்துக்கான எவிக்‌ஷன் ஷூட்டிங் தற்போது பிக் பாஸ் அரங்கில் நடந்து வருகிற சூழலில், அர்ச்சனா வெளியேற்றம் குறித்து சிலரிடம் பேசினோம்.

"நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர நகர நிறைய திருப்பங்கள், அதிரடிகள் அரங்கேறிட்டிருக்கு. வரும் பொங்கல் பண்டிகையுடன் ஷோ முடிவடைய இருக்கு. அந்த வீட்டுக்குள் இருக்கிற ஆட்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கிறதால 'டபுள் எவிக்ஷன்' இருக்கும்னு எதிர்பார்த்தோம். ஆனா கடந்த வாரம் ரெண்டு பேரை வெளியேத்தினவங்க இந்த வாரம் ஏன்னு தெரியலை சிங்கிள் எவிக்ஷனுடன் நிறுத்திட்டாங்க'' என்றார்கள்.

இந்த வார எவிக்ஷன் பட்டியலில் அனிதா சம்பத், ஆஜித், அர்ச்சனா உள்ளிட்டோர் இருந்த நிலையில் அர்ச்சனாவுக்கு வாக்குகள் குறைவாக கிடைத்தாகத் தெரிகிறது. எனவே ஷோவில் இருந்து அவர் வெளியேறி சுமார் இரண்டு மாத பிக் பாஸ் அனுபவத்துக்கு விடை கொடுக்க இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் எந்நேரமும் 'அன்பை' விதைத்தவர் வெளியேறலாமா? உங்கள் கருத்து என்ன?

Bigg boss tamil Som, Archana, Anitha
Bigg boss tamil Som, Archana, Anitha

சின்னத்திரையில் செகண்டு இன்னிங்க்ஸாகக் கிடைத்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ஜீ தமிழ் சேனலில் பரபரப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவரை எப்படியோ பேசி இழுத்து வந்தது விஜய் டிவி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அவருக்குப் பேசப்பட்ட சம்பளமும் அதிகம் என்றார்கள். ஆனால் அந்த வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியில் சென்றவருக்கு ஷோ எதிர்பார்த்த பலனைத் தரவில்லையோ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அதிகம் பேசுவது, குரூப்பிசம், எல்லோரையும் டாமினேட் செய்ய நினைப்பது முதலான காரணங்களால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்படுபவராக இருக்கிறார் அர்ச்சனா.

மேலும் யார் வெளியேறினாலும் வெளியேறும் போது இவர் அழுவதை கேலியும் கிண்டலும்தான் செய்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்து வரும் பிக் பாஸ் ரசிகர் ஒருவரிடம் பேசிய போது,

''கடந்த வாரம் பிக் பாஸ் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங்கை முடிச்சுட்டுத் தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பினார் கமல். அவருடைய பிரசாரத்துல ஊடுருவிய பிக் பாஸ் ரசிகர்கள் கூட 'அர்ச்சனாவை எப்ப வெளியேத்துவ தலைவா'னுதான் கேட்டிருக்காங்க. வேடிக்கைக்காகச் இதைச் சொல்லல. அவங்க டிவியில இத்தனை வருஷம் வாங்கி வச்சிருந்த பெயரை இந்த ஒரேயொரு ஷோ மூலமா கெடுத்துக்கிட்டாங்க' என்றார் அவர்.

பிக் பாஸ் ப்ளஸ்ஸா மைனசா என அரச்சனா வெளியே வந்ததும் அவரிடமே கேட்கலாம்.

அர்ச்சனா வெளியேறிய எபிசோடு நாளை (20/12/20) ஒளிபரப்பாக உள்ளது‌

அடுத்த கட்டுரைக்கு