Published:Updated:

பிக் பாஸ் வைல்டு கார்ட் : ரீ-என்ட்ரி கொடுக்கும் அபிஷேக் ராஜா?! பரிசீலனையில் உள்ள மற்றொரு பிரபலம்!

``ஏற்கெனவே, பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் போட்டியாளராகக் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்டு வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்!"

'பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராகக் களமிறங்கிய அபிஷேக் ராஜா மூன்றாவது வாரத்திலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது, அவரை வைல்டு கார்டு என்ட்ரியாக மறுபடியும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப இருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.

அபிஷேக் ராஜா
அபிஷேக் ராஜா

தற்போது, பிக்பாஸ் வீட்டினுள் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது என்பதால் கன்டென்ட்டிற்காக அபிஷேக்கை மறுபடியும் வீட்டினுள் அனுப்புவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே, பிக்பாஸ் தமிழ் சீசன் 3-ல் போட்டியாளராகக் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்டு மறுபடி வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் மறுபடி என்ட்ரியானதும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் அதிகரித்தது. மக்களுக்கும் அது பிடித்திருந்தது.

பிக்பாஸ் 44 : ‘கலக்கப்போவது யாரு?’ டாஸ்க்; தலைவரான பிரியங்கா; மீண்டும் வெடித்த இசை-தாமரை பஞ்சாயத்து
அபிஷேக் ராஜா
அபிஷேக் ராஜா

அதே போன்று, இந்த முறையும் விளையாட்டை சுவாரஸ்யமாக்குவதற்காக அபிஷேக்கை வீட்டுக்குள் அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள் என்கின்றனர். மறுபடி வீட்டிற்குள் நுழைந்தால் நிச்சயம் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என குழு நினைக்கிறது. பிரியங்கா, நிரூப், அபிஷேக் நட்பு கூட்டணி அபிஷேக் வெளிவந்ததும் களைந்துவிட்டது. தற்போது வெளிப்படையாகவே நிரூப் - பிரியங்கா இருவருக்குள்ளேயும் கருத்து மோதல்கள் அதிகரித்து வருகிற நிலையில் அபிஷேக் உள்ளே நுழைந்தால் நிச்சயம் அந்த கருத்து மோதல் பூதாகரமாக வெடிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'திருமதி செல்வம்' சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகர் சஞ்சீவ், வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், உண்மையில் சேனலில் இருந்து அவரிடம் பேசியிருக்கிறார்கள். அதற்கு சஞ்சீவ் எந்த பதிலும் சொல்லவில்லையாம். அதனால், சஞ்சீவ் போட்டியாளராக பங்கேற்பாரா என்பது இன்னமும் சந்தேகத்தில்தான் உள்ளது.

சஞ்சீவ்
சஞ்சீவ்

இந்நிலையில், வீட்டிற்குள் செல்வதற்காக அபிஷேக் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் என்ன மாதிரியான சம்பவங்கள் எல்லாம் நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

'எதிர்பாராததை எதிர்பாருங்கள்!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு