Published:Updated:

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் அமீர் யார்?

"மூன்றாவது புரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதியதாக ஒருவர் இருக்கிறார்.!"

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. 'கனா காணும் காலங்கள்' என்கிற பெயரில் டாஸ்க் ஒன்று நடக்கிறது. ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் என இரு குழுவினராக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மூன்றாவது புரொமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதியதாக ஒருவர் இருக்கிறார். அவர் யார் எனத் தேடினால் நடன கோரியோகிராபர் அமீர் எனத் தெரிந்தது.

அமீர்
அமீர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி', 'டான்ஸ் Vs டான்ஸ்', 'டான்ஸ் ஜோடி டான்ஸ்', 'கிங்ஸ் ஆஃப் டான்ஸ்' என்கிற நடன நிகழ்ச்சியில் இவர் கோரியோகிராபராக பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடைசியாய் ஒளிபரப்பான 'பிக்பாஸ் ஜோடிகள்' வரை இவர் கோரியோகிராபராக பணியாற்றியிருக்கிறார். மேலும், பல்வேறு திரைப்படங்களுக்கும் இவர் கோரியோ செய்திருக்கிறார்.

இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், வைல்டு கார்டு போட்டியாளராக அபிஷேக் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் அதே வாரத்தில் இன்னொரு போட்டியாளரும் களம் இறக்கப்பட்டிருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

அமீர்
அமீர்

கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கும் நிலையில் வருகிற வீக் எண்ட் எபிசோடை யார் தொகுத்து வழங்குவார் என்கிற கேள்வி எழுந்து வரும் நிலையில் கூடுதல் போட்டியாளர் ஒருவர் களம் இறங்கியிருக்கிறாரா என்கிற எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு