Published:Updated:

`குக்கு வித் கோமாளி' கனி டு சரவணன் மீனாட்சி ரச்சிதா… பிக்பாஸ் சீசன் - 5 போட்டியாளர்கள் யார், யார்?!

பிக்பாஸ்

சின்னத்திரையின் சக்சஸ்புல் நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் 5-வது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்குகிறது. இந்த சீசனில் என்ன ஸ்பெஷல்?!

`குக்கு வித் கோமாளி' கனி டு சரவணன் மீனாட்சி ரச்சிதா… பிக்பாஸ் சீசன் - 5 போட்டியாளர்கள் யார், யார்?!

சின்னத்திரையின் சக்சஸ்புல் நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் 5-வது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்குகிறது. இந்த சீசனில் என்ன ஸ்பெஷல்?!

Published:Updated:
பிக்பாஸ்
செப்டம்பர் இறுதி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறது விஜய் டிவி. அதற்கு மேல் தாமதமாக வாய்ப்பில்லை என்கிறார்கள்.

சென்ற சீசனில் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இரண்டு வாரம் க்வாரன்டீனில் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது. இந்தமுறை கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசிகளும் போட்டிருக்கவேண்டும் என்பதை கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

சர்வைவர் - அர்ஜுன்
சர்வைவர் - அர்ஜுன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்ற நான்கு சீசன்களைப் போல இந்த சீசனை நினைக்க வேண்டாம் என சேனல் மேலிடம் பிக்பாஸ் டீமிடம் அறிவுறுத்தியிருக்கிறது. காரணம் சென்ற ஆண்டுகளில் மாஸ்டர் செஃப், சர்வைவர் போல போட்டி நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. அதனால் இந்தமுறை போட்டியாளர்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறபோது சில கோட்டாக்களைக் கடந்த சீசன்களில் பின்பற்றி வந்திருக்கிறார்கள். அதில் முதலாவது விஜய் டிவி கோட்டா.

நிலையக் கலைஞர்கள்!

விஜய் டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் இருப்பவர்கள் பிக்பாஸில் கலந்து கொள்வது வழக்கம். கவின், அறந்தாங்கி நிஷா, ரியோ என கடந்த சீசன்களில் உதாரணம் சொல்லலாம். இந்த சீசனில் குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட கனி, திரு, புகழ், ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் நடிகை ரச்சிதா உள்ளிட்ட சிலரிடம் பேசியிருப்பதாகத் தெரிகிறது. இவர்களில் யாராவது ஓரிருவர் நிகழ்ச்சிக்குள் செல்லலாம்.

ரச்சிதா
ரச்சிதா

மீனாட்சி இருந்தா சரவணனையும் கேட்கலாமே!

இன்னொரு கோட்டா ஜோடி கோட்டா. முதல் சீசனில் ஆரவ் - ஓவியா ஜோடி பேசப்பட்டு விட, அடுத்து ரியல் தம்பதிகளான பாலாஜி - நித்யாவை இறக்கினார்கள். தொடர்ந்து சென்ற சீசனில் ரீல் ஜோடியான அஸீம் - ஷிவானியைக் களம் இறக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இந்த சீசனில் ரச்சிதா உள்ளே போனால், அவருடன் ஜோடியாக நடித்த இர்ஃபானை (சரவணன்) கேட்கலாமே என அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் இன்னும் முடிவை சொல்லவில்லையாம். ‘சர்வைவர்' நிகழ்ச்சிக்கு அழைத்தும் இர்ஃபான் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாலா நண்பருக்கு அழைப்பாம்!

’பிரபலமானவராக இல்லாவிட்டாலும் நாம பிரபலமாக்குவோம்’ என மாடல்கள் ஏரியாவிலிருந்து ஒருவரைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சீசனில் ரன்னராகத் தேர்வான பாலாவின் நண்பர் ஒருவரை டிக் செய்து வைத்திருக்கிறார்களாம்.

சாந்தினி
சாந்தினி

போட்டி சேனல் கோட்டா!

மற்ற முன்னணி சேனல்களில் பிரபலமாக இருக்கும் யாரையாவது கூட்டி வந்துவிடுவதை கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அர்ச்சனா, அனிதா சம்பத் போல இந்தாண்டு அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் கண்மணியின் பெயர் மற்றும் ஜீ தமிழ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சாந்தினியின் பெயரும் அடிபடுகிறது. சாந்தினி நடித்து வரும் இரட்டை ரோஜா சீரியல் இதனாலேயே கிளைமாக்ஸ் நோக்கி விரைவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

சிம்பு கோட்டா!

நடிகர் சிம்பு சிபாரிசில் யாராவது செல்லாமல் இருந்தால் அது பிக்பாஸே இல்லை. மஹத் பிக்பாஸ் போனதெல்லாம் இந்த கேட்டின் வழியேதான். இந்தாண்டும் சிம்புவை மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். யாருக்கு சீட் கிடைக்கப் போகிறதென்கிற சீக்ரெட் சிம்புவுக்கு மட்டுமே தெரியும்.

நடிகை ஷகிலாவின் மகள்
நடிகை ஷகிலாவின் மகள்

சமூக வலைதளப் பட்டியல் நீளம்!

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ’பிக் பாஸ் போறாங்க பாஸ்’ என வெளியாகி வருகிற பட்டியல் ரொம்பவே நீளமானது.. ஜி.பி முத்து, ரம்யா கிருஷ்ணன், ‘மைனா’ நந்தினி, ‘மைனா’ சூசன், வடிவுக்கரசி, ரமேஷ் கண்ணா, நடிகை ஷகிலாவின் மகள், லட்சுமி ராமகிருஷ்ணன் என நீள்கிறது இந்தப் பட்டியல்.