Published:Updated:

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா! மருத்துவமனையில் அனுமதி... நடந்தது என்ன?

தமிழ் பிக் பாஸ் மற்றும் தமிழ் சின்னத்திரை வரலாற்றில் முதல்முறையாக ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் ஒரு திருநங்கையாக ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த திருநங்கை நமீதா, ஒரு போட்டியாளராகக் களமிறங்கினார்.

கடந்த சில வருடங்களாகவே சின்னத்திரை ஏரியாவில் வைரல் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ்தான். இந்த ஆண்டும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 விஜய் டிவியில் கடந்த 3-ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது.

முந்தைய சீசன்களைப் போல இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் தமிழ் பிக் பாஸ் மற்றும் தமிழ் சின்னத்திரை வரலாற்றில் முதல்முறையாக ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் ஒரு திருநங்கையாக ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த திருநங்கை நமீதா, ஒரு போட்டியாளராகக் களமிறங்கினார்.

இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறி விட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் நமீதா
பிக்பாஸ் நமீதா

இன்று மதியம் முதலே சமூக வலைதளங்களில் இத்தகவல் வைரலாகி வரும் நிலையில், நமீதாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருப்பதாகவே நம்மிடம் தெரிவிக்கிறார்கள். உடல்நலனில் ஏற்பட்ட திடீர் பிரச்னை காரணமாகவே வெளியேறிய நமீதா, அருகிலிருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். அதேநேரம் சேனல் அவரை வெளியேற்றவில்லையாம். நமீதா அவருடைய விருப்பத்தின் பெயரில்தான் வெளியேறி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

திருநங்கை ஒருவருக்கு நிகழ்ச்சியில் வாய்ப்பளிக்க வேண்டும் என நினைத்து சேனல் அவரை உள்ளே அனுப்பிய நிலையில் அவரது திடீர் வெளியேற்றத்துக்கான காரணம் உடல் நலன் பிரச்னை மட்டும்தானா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்பது போகப் போகத்தான் தெரியவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு