Published:Updated:

பிக்பாஸ் வீட்டின் நெக்ஸ்ட் கெஸ்ட் இவர் தான்!

எம்.குணா

பிக்பாஸ் மூன்றாம் சீசனின் அடுத்த பிரபலம்

பிக்பாஸ்
பிக்பாஸ்

பிக்பாஸ் -3 சீசன் ஜூன் இரண்டாவது வாரம் துவங்கப் போவதாகச் சொல்கிறார்கள். முதல் சீசனில் பிரபலமாகப் பேசப்பட்டவர் ஓவியா, இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா, யாஷிகா பரபரப்பாகப் பேசப்பட்டனர். அடுத்து மூன்றாவது சீசன் ஆரம்பிக்கக் கமலுக்காக காத்திருந்தனர். 'இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டால் பிக்பாஸ் ஷோவில் எப்படி கலந்துகொள்வார் என்று குழப்பநிலை நீடித்து வந்தது.

கமல்
கமல்

ஷங்கர் படத்தின் ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை என்று தெளிவான முடிவுக்கு விஜய் டிவி வந்து விட்டதால் பிக்பாஸ் -3 நிகழ்ச்சிக்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. பிக்பாஸில் பங்குபெறுபவர்கள் வெவ்வேறு விதமான தளங்களில் பயணிக்கும் பிரபலங்களாக இருந்தால் நல்லது என்று திட்டமிட்டு தேர்வுசெய்து வருகின்றனர்.

இந்தமுறை பிக்பாஸ் வீட்டில் தேமே என்று இருக்கும் சாஃப்ட் இயல்பு கொண்ட வி.ஐ.பி-க்களை தேர்வு செய்வதை தவிர்த்து சினிமாவில், தொலைக்காட்சியில், சோஷியல் மீடியாக்களில் வைரலான சண்டைக் கோழிகளை செலக்ட் செய்தால் டிஆர்பி ரேட் எகிறும் என்று கணக்கு போட்டு வருகின்றனர்.

மதுமிதா
மதுமிதா

' ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்த ' ஜாங்கிரி' மதுமிதாவை செலக்ட் செய்துள்ளனர்.

இப்போது டோலிவுட், கோலிவுட் சினிமாவை அதர பதற வைத்து, தமிழ் சினிமா பிரபலங்கள் சிலர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய ஶ்ரீரெட்டி தான் பிக் பாஸ் வீட்டின் அடுத்த கெஸ்ட்.

ஶ்ரீ ரெட்டி
ஶ்ரீ ரெட்டி

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான சம்பளம், நிபந்தனைகள் இத்யாதி, இத்யாதி என்று அனைத்தையும் ஶ்ரீ ரெட்டியிடம் பேசிவருகிறதாம், விஜய்டிவி. .

எம்.குணா