Published:Updated:

பிக் பாஸ் `வைல்டு கார்டு' போட்டியாளராகக் களம் இறங்குகிறாரா தயாரிப்பாளர் ரவீந்தர்?

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், பிக் பாஸ் வீட்டிற்குள் `வைல்டு கார்டு' போட்டியாளராகச் செல்வதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே ஏதோ ஒரு காரணத்திற்காக பிக் பாஸ் வீட்டிலிருந்து திருநங்கை நமீதா மாரிமுத்து வெளியேறினார். பிறகு, அடுத்த வாரத்திற்கான எலிமினிஷேனில் நாடியா வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் சீசன் 5
பிக்பாஸ் சீசன் 5

அங்கிருக்கும் போட்டியாளர்கள் பெரும்பாலும் கன்டென்ட் கொடுக்கவில்லை என்பதும் சேனல் தரப்பு எதிர்பார்த்த அளவிற்கு நிகழ்ச்சி இன்னமும் சூடு பிடிக்கவில்லை என்பதும் சமூக வலைதளங்களின் விமர்சனங்களாக இருக்கின்றன. அதனால், சீக்கிரமே வைல்டு கார்டு என்ட்ரியை ஆரம்பித்தவிடலாம் என சேனல் தரப்பு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

"பிக் பாஸ் சம்பளத்தைவிட அதுக்கு நாங்க செலவு செய்தது அதிகம்!"- நாடியா எவிக்ஷனுக்கு கணவர் அதிருப்தி!

அந்த வரிசையில், வெளியிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து அது குறித்து பேசிவரும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்தரின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.

"ரவீந்தர் ஏற்கெனவே பிக் பாஸ் குறித்து விமர்சித்து வருபவர். அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் நிச்சயம் சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது.

ரவீந்தர்
ரவீந்தர்

அபிஷேக் போன்று கன்டென்ட்டிற்காக இதை செய்றேன்னு ஓப்பனா சொல்லாமலே அதற்கான வேலையை பக்காவாக செய்வார் என்பதால் சேனல் தரப்பு அவரை அணுகியிருக்கிறார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகத் தெரிகிறது. ரவீந்தர் சில கண்டிஷன்கள் சொல்லியிருக்கிறார். அதுகுறித்து சேனல் தரப்பில் விவாதித்து வருகிறார்கள்" என்றனர்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக பங்கேற்பது தொடர்பான உங்களுடைய கருத்துகளை மறக்காமல் கமென்ட் செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு