Published:Updated:

``பிக்பாஸுக்குள்ள போகக்கூடாது... மீறி ஷிவானிக்கிட்ட போனால்?!''- அஸீம்க்கு மிரட்டல் விடுப்பது யார்?

அஸீம்-ஷிவானி
அஸீம்-ஷிவானி

''நீங்க 'பிக்பாஸ்' செட்டுக்குள்ள போகக்கூடாது. அப்படியே அங்கே போனாலும் ஷிவானியைத் தொந்தரவு செய்யாமல் இருக்கணும். அதுதான் உங்களுக்கு நல்லது.''

பிக்பாஸ் சீசன் 4-ல் அடுத்த என்ட்ரியாக 'பகல் நிலவு', 'கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட சீரியல்களில் ஷிவானியின் ஜோடியாக நடித்த அஸீம், அடுத்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கிறார். அவருக்கான க்வாரன்டீன் நாளை முதல் தொடங்குவதாகச் சொல்கிறார்கள்.

இதற்காக சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அவருக்கு அறை புக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே அஸீம் பிக்பாஸ் செல்வதை ஷிவானிக்கு மிக நெருக்கமானவர்கள் சிலர் விரும்பவில்லையாம்.

ஷிவானி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக சிலர் கணக்குத் தொடங்கி, அஸீமின் பிக்பாஸ் என்ட்ரிக்கு எதிராக‌ கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

அஸீம்
அஸீம்

''பாலா - ஷிவானி இடையே இப்ப லவ் ஓடிட்டிருக்கு. நீங்க பிக்பாஸ் போனா, நிச்சயம் ஷிவானிக்குக் கஷ்டம். அதனால நீங்க பிக்பாஸ் போகாதீங்க. ஏற்கெனவே உங்களுக்கிடையில லவ்னு ஓடிய பழைய வதந்திகளுக்கு மறுபடியும் தீணி போடணுமா? யோசிச்சுப் பாருங்க அஸீம்..." என்று சிலர் நாகரீகமாக எழுத, சிலர் எச்சரிக்கை விடுக்கிறார்களாம்.

''நீங்க பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகக்கூடாது. அப்படியே அங்கே போனாலும் ஷிவானியைத் தொந்தரவு செய்யாமல் இருக்கணும். அதுதான் உங்களுக்கு நல்லது" என எச்சரிக்கும் விதமாக சில போஸ்ட்கள் போடப்பட இதுகுறித்து அஸீம், ஷிவானி இருவரையும் அறிந்த சிலரிடம் பேசினேன்.

"அப்பாவை சீண்டினா சும்மா இருக்க மாட்டேன்!"-`கலக்கப்போவது யாரு'க்கு எதிராக கொந்தளித்த பிரபு!

''சீரியல்ல ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சப்ப, ஷிவானிதான் அஸீமை லவ் பண்ணாங்க. அவரு லவ்வுக்கு ஓகே சொன்னதா தெரியலை. பிறகு என்ன நடந்ததோ, நடிச்சிட்டிருந்த சீரியல்ல இருந்து ஷிவானி வெளியேறினாங்க. பிறகு ஃபோட்டோஷூட் பண்ணியே பிக்பாஸ் வீட்டுக்குள் வர்ற வாய்ப்பை உருவாக்கி உள்ளேயும் வந்துட்டாங்க. இப்ப என்னன்னா பாலா கூட லவ்ங்கிற மாதிரி காட்டப்படுது. உண்மையிலேயே அவங்களுக்கிடையில லவ் இருக்கா இல்லையானு வெளியில இருக்கிறவங்களுக்கு என்ன‌ தெரியும்?

பாலாவைப் பொறுத்தவரைக்கும் கேம்ல ஜெயிக்கணும்கிறதுலதான் குறிக்கோளா இருப்பார். வெளியிலயே அவருக்கு ப்ரண்ட்ஸ் நிறைய உண்டே தவிர லவ்வுல விழுந்ததே இல்லைனு அவருடைய நட்பு வட்டத்துல சொல்றாங்க.

ஆனா, அஸீம் பிக்பாஸ் போகப்போறார்ங்கிற செய்தி வெளியானது முதலே அவருக்கு எதிராகவும் ஷிவானிக்கு ஆதரவாகவும் இப்படிப்பட்ட கருத்துக்கள் வரத் தொடங்கிடுச்சு.

பாலா - ஷிவானி
பாலா - ஷிவானி

இப்படிக் கருத்துச் சொல்றவங்களோட கணக்கைப் பார்த்தாலே ஃபேக் ஐடி போலத்தான் தெரியுது. இதற்குப் பின்னணியில் ஷிவானி வீட்டுக்கு மிகவும் நெருங்கிய ஒருவர் இருப்பதாகச் சொல்கிறார்கள்" என்றார்கள்.

இன்னும் சிலரோ, "ஆரம்பத்தில் ஷிவானியுடன் அஸீமை இணைத்து டிவி ஏரியா கிசுகிசுத்தபோது ஷிவானியின் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை. ஷிவானி, அஸீம் இருவருமே பிக்பாஸ் போகப்போவதாகத் ததவல் வெளியானபோது அதை அவர் ரசிக்கவில்லை. முதல் நாள் ஷிவானி மட்டும் உள்ளே போனதும், 'அப்பாடா' என இருந்தார். ஆனால் எப்போது அஸீமின் என்ட்ரி உறுதி எனத் தெரிந்ததோ அந்த நிமிடத்திலிருந்தே அவர் அப்செட்" என்கிறார்கள்.

அஸீமின் வருகைக்கு எதிராகப் பேசி வருபவர்களின் பின்னணியில் ஷிவானியின் அம்மா இருக்கிறாரா அல்லது ஹெச்.ராஜா சொல்வாரே அதுபோல் யாராவது அட்மின்கள் இதைச் செய்கிறார்களா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.

அடுத்த கட்டுரைக்கு