Election bannerElection banner
Published:Updated:

வெளியேறிய ஷிவானி... பரபர பிக்பாஸ் எவிக்‌ஷன்!

பிக்பாஸ் ஷிவானி
பிக்பாஸ் ஷிவானி

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது மற்ற போட்டியாளர்களுக்கு எவ்வளவு நாள் முன்கூட்டியே தெரிந்ததெனத் தெரியவில்லை. ஆனால் ஷிவானிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டதாகத் தகவல்.

இறுதிக்கட்டத்துக்குள் நுழைந்துவிட்டது பிக்பாஸ் சீசன்-4. இந்த வார எவிக்‌ஷனுக்குத் தற்போது அந்த வீட்டுக்குள் இருக்கும் எல்லோருமே நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆரி, பாலா, சோம், ரியோ, கேபி, ரம்யா, ஷிவானி ஆகிய ஏழு பேரில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் மிகவும் குறைவாக வாங்கிய ஷிவானி பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேறியிருக்கிறார்.

ஷிவானி எவிக்‌ஷன் ஆன எபிசோடின் ஷூட்டிங் இன்று நடந்தது. நாளை டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஷிவானி
ஷிவானி

ஷிவானி பிக்பாஸுக்குப் போவதற்கு முன் நடந்தது என்ன?

விஜய் டிவி சீரியல் ’பகல் நிலவு’ மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் ஷிவானி. இரண்டு சீரியல்களில் நடித்தப் பிறகு விஜய் டிவியுடன் பிரச்னையாகி ஜீ தமிழ் சேனல் பக்கம் போனார்.

ஆனால், பிக்பாஸ் மூலம் அவரை மறுபடியும் தன் சேனலுக்குள் கொண்டுவந்துவிட்டது விஜய் டிவி.

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது மற்ற போட்டியாளர்களுக்கு எவ்வளவு நாள் முன்கூட்டியே தெரிந்ததெனத் தெரியவில்லை. ஆனால் ஷிவானிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டதாகத் தகவல்.

தினமும் ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களால் இன்ஸ்டா பக்கங்களைத் திக்குமுக்காடச் செய்தாரே எதற்காக? ஆர்மி அமைத்து ஓட்டு வாங்குவதற்கான செயல்திட்டம்தான் அது.

பிக்பாஸ் ஷிவானி
பிக்பாஸ் ஷிவானி

போட்டோஷூட் நடத்தியே பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்ற ஷிவானிக்கு மற்ற போட்டியாளர்களுக்குக் கிடைக்காத இன்னொரு சலுகையும் கிடைத்தது. அது, எல்லோரும் க்வாரன்டீனில் தனியாக இருந்தபோது, இவர் மட்டும் தன் அம்மா மற்றும் தன் செல்ல நாய்க்குடியான ’டைமண்ட்’டையும் உடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அந்த தனியார் ஓட்டலில் ஷிவானி அவரது அம்மா அகிலா மற்றும் டைமண்ட் மூன்று பேரும் இரண்டு வார க்வாரன்டீனில் இருந்தார்கள்.

சரி, பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதும் அங்கு என்ன செய்தார்? 90 நாட்களைக் கடந்தும் இன்று வரை எல்லோரும் கேட்டுக் கொண்டே இருக்கிற கேள்வி இது.

வெளியே வந்த பிறகு ஷிவானியிடமே கேட்கலாம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு