Published:Updated:

இனி அனல் பறக்கும்... பிக்பாஸ் வீட்டுக்குள் விரைவில் சுசித்ரா?!

பிக்பாஸ்
பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்த போட்டியாளராக இன்னும் சில தினங்களில் செல்ல இருக்கிறார் பாடகி சுசித்ரா!

பிக்பாஸ் சீசன் 4 பிக் அப் ஆகத் தொடங்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் வழக்கம் போல் 16 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகத் தொடங்கிய ஷோவில் அதிரடி என்ட்ரியாக ஆங்கர் அர்ச்சனா உள்ளே வந்தார்.

"இந்த சீசன்ல விஜய் டிவி முகங்கள் நிறைய இருக்கே" எனக் கிளம்பிய பேச்சுக்களைச் சரிசெய்ய, போட்டி சேனலான ஜீ தமிழில் இருந்து இவரைக் கூட்டி வந்தார்கள். உள்ளே நுழைந்ததில் இருந்து அர்ச்சனாவும் தன் பங்குக்கு எதையாவது பேசி கவனம் ஈர்த்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 4
பிக்பாஸ் சீசன் 4

தவிர, ஷோவில் பஞ்சாயத்துகளுக்கு பஞ்சமே இல்லை. சுரேஷ் சக்ரவர்த்தி, ஷனம், ஷிவானி, பாலாஜி, வேல்முருகன் என ஆளாளுக்கு எதையாவது பேசுவதால் 'கன்டென்ட் கொடுத்தா மட்டுமே உள்ளே இருக்க முடியும்' என பிக்பாஸ் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருப்பார் என்றே தெரிகிறது.

`நாடா... இல்ல காடா?' - சண்டை சரிதான்... ஆனா, சுரேஷ் நீங்க இப்படிப் பண்ணலாமா? பிக்பாஸ் - நாள் 16

ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாம் போதாது என்கிறார்கள் சேனலில். ஐபிஎல் வழக்கமான பிக்பாஸ் டிஆர்பி-யை காலி செய்வதால் அடுத்த காரசார போட்டியாளரை இறக்குகிறார்கள். ஆமாம், பாடகி சுசித்ராவைக் பிக்பாஸ் வீட்டுக்குள் போக தயாராகிக்கொண்டிருகிறார்.

சுசித்ரா
சுசித்ரா
முதல் எவிக்ஷனில் ரேகா வெளியேறிய நிலையில் அடுத்த சில தினங்களில் (அநேகமாக 28 - 30வது நாளில்) பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார் சுசித்ரா. அவருக்கான க்வாரன்டீன் தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். சென்னை ராமாபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தற்போது அவர் தங்கியிருக்கிறார்.
அடுத்த கட்டுரைக்கு