Published:Updated:

"பிக் பாஸ் போனா படத்துல இருந்து தூக்கிடுவேன்!" - `சார்பட்டா' சந்தோஷ் விலகியது ஏன்?

பிக் பாஸ் சீக்ரெட்ஸ் பகுதியில் இன்றைய சீக்ரெட் 'சார்பட்டா' சந்தோஷ் விலகல் ஏன் நிகழ்ந்தது என்பதைச் சொல்கிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி ஒரு வாரம் கடந்துள்ளது. அதிகளவில் முகம் தெரியாத போட்டியாளர்கள் இந்த சீசனில் இருக்கிறார்கள் என்கிற பேச்சு இருந்து வந்த நிலையில், முதல் வார எலிமினேஷனுக்கு முன்பாகவே போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்ட பிக் பாஸின் முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து திடீரென வெளியேறி இருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

சீக்ரெட் என்ன?

பிக் பாஸ் சீசன் 5-க்குப் போட்டியாளர்களைத் தேடியபோது சேனல் தரப்பிலிருந்து ஏகப்பட்ட செலிபிரிட்டிகளிடம் பேசினார்கள். அப்படிப் பேசியபோது உடனடியாக நிகழ்ச்சிக்கு வருவதற்குச் சம்மதம் சொன்ன ஒருவர் 'சார்பட்டா' படத்தில் ராமன் கேரக்டரில் நடித்த சந்தோஷ் பிரதாப்.

`சார்பட்டா' சந்தோஷ் பிரதாப்
`சார்பட்டா' சந்தோஷ் பிரதாப்
பிக் பாஸ் சீக்ரெட்ஸ் | "100 நாளுக்காக‌க் கட்சியை விட முடியாதண்ணே!"- இமான் அண்ணாச்சியின் கெத்து!

சேனல் தரப்பிலிருந்து விதிக்கப்பட்ட நிபந்தனைகள், சம்பளம் போன்ற விவரங்கள் கிட்டத்தட்ட ஃபைனல் செய்யப்பட்டு, ஷோவுக்குக் கிளம்ப ஆயத்தமாகிய சூழலில்தான் இயக்குநர் மிஷ்கினிடம், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் சந்தோஷ். மிஷ்கினின் 'பிசாசு-2' படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார் சந்தோஷ்.

"படம் ரிலீசாக இருக்கிற சூழல்ல யாரைக் கேட்டு நீங்க இந்த முடிவை எடுத்தீங்க. அந்த நிகழ்ச்சியில போன சிலர் என்ன ஆனாங்க தெரியாதா? அங்க போய் பெயரைக் கெடுத்துக்கிட்டா அது படத்தைப் பாதிச்சிடும். அதனால நீங்க அந்த ஷோவுக்குப் போய்த்தான் ஆகணும்னா, படத்துல உங்க போர்ஷனை ட்ரிம் பண்றதைத் தவிர எனக்கு வேற வழி தெரியாது" எனக் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாகவே மிஷ்கின் சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சிக்கு வரவில்லை எனச் சொன்னாராம் சந்தோஷ்.

உடனே, அவருக்குப் பதில் நிரூப்பைக் கமிட் செய்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு