Election bannerElection banner
Published:Updated:

`ராஜா வீட்டு கன்னுக்குட்டி' ரமேஷ் இன்றே வெளியேறுகிறார்... நாளை யார் தெரியுமா? #BiggBossEviction

பிக்பாஸ் - ரமேஷ்
பிக்பாஸ் - ரமேஷ்

60 நாட்களைத் தாண்டிவிட்டதாலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் ஃபைனலில் குழப்பம் ஏற்படுமென்பதால் இந்த வாரம் இரண்டு பேரை எவிக்ட் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 4-ல் இந்த வார எவிக்‌ஷனில் இரண்டு பேர் வெளியேற இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் தற்போது நடந்து வருகிறது.

முன்னதாக சீசன் தொடங்கிய போது 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அடுத்த சில தினங்களிலேயே அர்ச்சனா, பாடகி மிர்ச்சி சுச்சி ஆகியோர் ஷோவுக்குள் வந்தனர்.

இன்னொரு புறம் இரண்டாவது வாரத்திலிருந்து எவிக்‌ஷன் புராசஸ் தொடங்கி ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன், சுச்சி, சம்யுக்தா, கடைசியாக சனம் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவும் செய்து விட்டனர்.

இருந்தாலும் ஷோ தொடங்கி 60 நாட்களைத் தாண்டி விட்டதாலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் இப்படியே சென்றால் ஃபைனலில் டாப் 4 போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கிற போது குழப்பம் ஏற்படுமென்பதால் இந்த வாரம் இரண்டு பேரை எவிக்ட் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

அடுத்தடுத்த வாரங்களிலும் இந்த டபுள் எவிக்‌ஷன் இருக்கலாமென்றே தெரிகிறது.

இந்த வார டபுள் எவிக்‌ஷனில் இன்று இரவு (12/12/20) ‘ஜித்தன்’ ரமேஷ் வெளியேறுகிறார். நாளை எபிசோடில் ’அறந்தாங்கி’ நிஷா வெளியேற இருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு