Election bannerElection banner
Published:Updated:

மீண்டும் பிக்பாஸ் ஜூலி டு `ஆங்ரி பேர்ட்' பாலா... என்ன நிகழ்ச்சி, நடுவர்கள் யார்? #VikatanExclusive

பிக்பாஸ் கேபி, சோம், ஷிவானி
பிக்பாஸ் கேபி, சோம், ஷிவானி

ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி நம்பர் 1' போன்றதுதான் இது என்றாலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கடந்த நான்கு பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்டவர்கள் என்பதுதான் ஹைலைட்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டடித்தாலும் அடித்தது, விஜய் டிவியும் அதை விட்டபாடில்லை. தமிழ் பிக்பாஸ் ஐந்தாவது சீசனுக்கான‌ ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். பிக்பாஸ் 5 வரும் ஜூன் அல்லது ஜூலையில் ஒளிபரப்பாகலாம். அது வரும்போது வரட்டும், ஆனால் அதற்குள் பிக்பாஸை வைத்து இன்னொரு மெகா ரியாலிட்டி ஷோவை இறக்கத் தயாராகி விட்டார்கள். நிகழ்ச்சியின் பெயர் 'பிக்பாஸ் ஜோடி'.

பிக்பாஸ் கேபி, ஷிவானி
பிக்பாஸ் கேபி, ஷிவானி
ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி நம்பர் 1' போன்றதுதான் இது என்றாலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கடந்த நான்கு பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்டவர்கள் என்பதுதான் ஹைலைட்.

'பிக்பாஸ் ஜோடி' நிகழ்ச்சி குறித்து சிலரிடம் பேசினேன்.

ஜூலி
ஜூலி

"சோம், கேபி, ஆஜித், ஷிவானி, பாலா, ஜூலி, சென்றாயன், மகத், யாஷிகா ஆனந்த், ஷாரிக், பாத்திமா பாபு, மும்தாஜ் இவங்கெல்லாம் இப்போதைக்கு உறுதிபடுத்தப்பட்டிருக்காங்க. மேலும் சிலர் அடுத்தடுத்து நிகழ்ச்சிக்குள் வரப்போறாங்க‌. போட்டியாளர்களை அவங்க கலந்துகிட்ட சீசன்வாரியாப் பிரிச்சுடுவாங்க. யார் யார் கூட ஜோடி சேரப் போறாங்கன்னு அடுத்த சில நாட்கள்ல முடிவாகிடும். அது முடிவானதும் ப்ரமோ ஷூட் நடந்து நிகழ்ச்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்" என்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகர் ஜீவாவும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒப்பந்தமாகியிருக்கிறார்களாம். விரைவில் இந்த ஷோ ஒளிபரப்பாகயிருக்கிறது!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு