Published:Updated:

சூப்பர் சிங்கருக்கு ஷிவாங்கி, ஸ்டார்ட் மியூசிக்குக்கு மாகாபா... அப்ப பிரியங்கா `பிக்பாஸ்' என்ட்ரியா?

பிரியங்கா
News
பிரியங்கா

பிக்பாஸ் சீசன் 5-ல் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராகக் களம் இறங்கவிருக்கிறாராம்.

பிக்பாஸ் சீசன் 5 வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கொரோனா காரணமாக இப்போதே க்வாரன்டீன் நாள்கள் தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சர்வைவர்' ஷோவிற்கு இப்பொழுதே ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டதால் போட்டி கடுமையாக இருக்க வேண்டும் என பிக்பாஸில் அதற்கேற்றவாறு போட்டியாளர்களைத் தேர்வு செய்யவிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

பிரியங்கா
பிரியங்கா

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராகக் களம் இறங்கவிருக்கிறாராம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரியங்காவின் சரவெடி பேச்சுக்கும், அவருடைய எதார்த்தமான சிரிப்பிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள்! காமெடி ராஜா கலக்கல் ராணி, சூப்பர் சிங்கர் போன்ற விஜய் டிவியில் பல முன்னணி நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார்.

'குக் வித் கோமாளி' புகழ் ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல், 'ஸ்டார்ட் மியூசிக்' நிகழ்ச்சியை இரண்டு சீசனாக தொகுத்து வழங்கிய பிரியங்கா மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கவில்லை. பிரியங்காவிற்கு பதில் மா கா பா ஆனந்த் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம். இதன் மூலம் பிக்பாஸ் போட்டியாளராக பிரியங்கா களம் இறங்குகிறார் என்பது உறுதியாகியிருப்பதாகத் தெரிகிறது.

பிரியங்கா
பிரியங்கா

பிரியங்காவை கலகலப்பான தொகுப்பாளினியாக பார்த்திருக்கிறோம். அவர் உண்மையில் பிக்பாஸ் போட்டியாளராகக் கலந்து கொண்டால் எந்த அளவிற்கு போட்டி போடுவார் என்பதைத் திரையில் பார்க்க பலரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.