Election bannerElection banner
Published:Updated:

சுரேஷ் சக்ரவர்த்தி அவுட்டா... இந்த வார எவிக்ஷனில் நடந்தது என்ன?

சுரேஷ் சக்ரவர்த்தி
சுரேஷ் சக்ரவர்த்தி

பிக் பாஸ் சீசன் 4-ன் ஐந்தாவது வாரத்தில் எவிக்‌ஷன் ஆனவர் சுரேஷ் சக்ரவர்த்தியா?

பிக் பாஸ் சீசன் 4-ல் மூன்றாவது ஆளாக எவிக்ட் ஆகி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி.

சீசன் தொடங்கிய முதல் வாரம் எவிக்‌ஷன் இல்லை. அடுத்த வாரம் நடிகை ரேகா வெளியேறினார். அதன் மறு வாரத்தில் பாடகர் ஆஜித் வெளியேற வேண்டியது. ஆனால் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் கையிலிருந்ததால் அதை வைத்துத் தப்பித்தார் அவர்.

கடந்த வாரம் கடைசி இரண்டு ஆட்களாக ஆஜித்தும் இன்னொரு பாடகரான வேல்முருகனும் வெளியேற வேண்டிய இடத்தில் இருந்தார்கள். அதில் வேல்முருகன் எவிக்ட் ஆனார்.

தற்போது இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் தற்போது நடந்து வருகிற நிலையில் ஷோவிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

முன்னதாக இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷனில் ஆரி, பாலா, சனம், அனிதா, சோம், அர்ச்சனா, சுரேஷ் ஆகியோர் இருந்தனர். இவர்களில் அதிகமாக ஓட்டுகள் வாங்கியவர்கள் வரிசையில் முதலிடத்தில் ஆரியும் இரண்டாவது இடத்தில் பாலாவும் உள்ளனர். பிக் பாஸ் விதிப்படி குறைந்த ஓட்டுகள் வாங்கியவர் வெளியேற வேண்டும்.

அதன்படி பார்த்தால் இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தியே மிகவும் குறைவான ஓட்டுகள் வாங்கியுள்ளார். எனவே அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவுள்ளார். நாளை (நவம்பர்) 8, 2020) எபிசோடில் இவரது எவிக்‌ஷன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம்.

சுரேஷ் சக்ரவர்த்தி
சுரேஷ் சக்ரவர்த்தி

சுரேஷைப் பொறுத்தவரை ஷோவுக்குள் நுழைந்த முதல் சில வாரங்கள் கன்டென்ட் தருபவராக வலம் வந்தார். சக போட்டியாளர்கள் ’தாத்தா’ என் அழைத்த போதும் கண்டுகொள்ளாமல் வலம் வந்தார். சனத்தைப் பார்த்து ‘வகுந்துடுவேன்’ என அவர் பேசியதைப்பார்த்து ‘பார்ரா’ என வாய் பிளந்தது சோஷியல் மீடியா.

ஆனால், ஒருகட்டத்தில் பாலா, அர்ச்சனா, நிஷா என சக போட்டியாளர்கள் இவரைக் காமெடி பீஸாக்கிக் கலாய்க்கத் தொடங்கினர். கடைசியாக இந்த வார ஷோவிலிருந்தும் வெளியேறவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் சுரேஷ்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு