Published:Updated:

அஸீம் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குள் போகவில்லை... காரணம் யார்?

அஸீம்

எப்போது ஷோவுக்குள் வருவார் என அஸீமை பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் திடீரென நடிகை சித்ரா இறந்த அன்று அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களின் கூட்டத்தில் அஸீமையும் பார்க்க முடிந்தது.

அஸீம் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குள் போகவில்லை... காரணம் யார்?

எப்போது ஷோவுக்குள் வருவார் என அஸீமை பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் திடீரென நடிகை சித்ரா இறந்த அன்று அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களின் கூட்டத்தில் அஸீமையும் பார்க்க முடிந்தது.

Published:Updated:
அஸீம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் ஒரு சீரியல் ஜோடி அதுவும் விஜய் டிவிக்குப் பரிச்சயமான ஜோடி கலந்து கொள்ள இருப்பதாக விகடன்தான் முதன் முதலாகச் செய்தி வெளியிட்டது. அந்த ஜோடி ‘பகல் நிலவு’, ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர்களில் நடித்த ஷிவானி - அஸீம் என்றும் தெரிவித்தோம்.

ஆனால், ஷோ தொடங்கிய போது 16 போட்டியாளர்களில் ஒருவராக ஷிவானி மட்டும் ஷோவுக்குள் சென்றார். தனிப்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அப்போது அஸீம் உள்ளே செல்லவில்லை எனக் கூறப்பட்டது.

சீரியல் உலகில் அவர்களுக்குள் காதல் இருப்பதாகப் பேசப்பட்ட காரணத்தாலேயே, இவர்கள் சென்றால், நல்ல கன்டென்ட் கிடைக்கும் என நினைத்து சேனல் இவர்களை அனுப்பத் திட்டமிட்டது.

அஸீம்
அஸீம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் நாள் செல்ல முடியாததால் வைல்ட் கார்டு என்ட்ரியாக அஸீம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அஸீம் பிக்பாஸ் செல்லத் தயாராகி அதற்கான க்வாரன்டீனும் சென்றார். சென்னை கிண்டி பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அஸீம் தங்க வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இடையில் திடீரென தன் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் ஒருமுறை க்வாரன்டீனிலிருந்து மருத்துவமனை திரும்பிய அஸீம் மறுபடியும் க்வாரன்டீனைத் தொடர்ந்தார்.

எப்போது ஷோவுக்குள் வருவார் என அஸீமை பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் திடீரென நடிகை சித்ரா இறந்த அன்று அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களின் கூட்டத்தில் அஸீமையும் பார்க்க முடிந்தது.

அப்படியானால் க்வாரன்டீன்? பிக்பாஸ்? என எழும்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் அவரே இன்ஸ்டாவில் பதிவிட்டு விட்டார்.

ஷிவானி - அஸீம்
ஷிவானி - அஸீம்

‘’ஆமாங்க சில அழுத்தங்கள் மற்றும் பிரச்னைகள் காரணமாக நான் பிக்பாஸ் வீட்டுக்குள் போகலை. இப்போதைக்கு இதை மட்டும்தான் என்னால சொல்ல முடியும்'’ எனச் சொல்லி விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

சந்தித்த பிரச்னைகள், தரப்பட்ட அழுத்தங்கள் குறித்து அஸீம் பேச மறுத்துவிட்ட சூழலில் அவரது நண்பர்கள் சிலரிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘’அஸீம் – ஷிவானி ஜோடி உள்ளே போனா கன்டென்ட் கிடைக்கும்னு விஜய் டிவி நினைச்சது நிஜம். ஆனா அந்த வீட்டுக்குள் போன ஷிவானி ஆரம்பத்துல கொஞ்ச நாள் சும்மாவேதான் இருந்தாங்க. பிறகு பாலாவுடன் பேசத் தொடங்க பாலா-ஷிவானி ஜோடிக்கிடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் மாதிரியான ஒரு தோற்றம் உருவாகி வலுப்பெற அதுவே கன்டென்ட் ஆகிடுச்சு.

அஸீம் - ஷிவானி
அஸீம் - ஷிவானி

இந்தச் சூழல்ல அக்ரிமென்ட் போட்டபடி அஸீம் உள்ளே போனா ஷிவானி அஸீம்கிட்டப் பேசுவாரா அல்லது பாலாகிட்ட பேச்சைத் தொடர்வாரானு தெரியாத குழப்பம். ஒருவேளை அஸீம்கிட்டப் பேசினாலும் பேசாவிட்டாலுமே மக்கள் மத்தியில ஷிவானி பேர் டேமேஜ் ஆகி ஷோவுல இருந்து வெளியேற வேண்டிய நிலை வந்துட்டா என்ன செய்யறதுன்னு நினைச்சே சேனல் அஸீம் என்ட்ரியைத் தாமதப்படுத்தியிருக்கு.

இன்னொருபுறம் அஸீம் உள்ளே போறதை விரும்பாத ஷிவானி அம்மாவுமே சில காய் நகர்த்தலைச் செய்ததாகவும் சொல்றாங்க.

இந்த விஷயங்கள் காதுக்கு வந்ததாலேயே அஸீம், ‘போங்கடா நீங்களும் உங்க ஷோவும்’னு கிளம்பி வந்துட்டார்" என்கிறார்கள் அஸீமின் நண்பர்கள்.

அக்ரீமென்ட் போட்டது முதல் க்வாரன்டீலிருந்தது வரை அத்தனை சம்பவங்களையும் விவரித்து அஸீம் வீடியோ வெளியிட்டாலும் வெளியிடலாம் எனத் தெரிகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism