Election bannerElection banner
Published:Updated:

பிக்பாஸ் அப்டேட் : ஷிவானியைக் காப்பாற்ற அஸீம் தடுக்கப்படுகிறாரா... பின்னணி என்ன?

அஸீம்
அஸீம்

"அஸீம் இந்நேரம் உள்ளே போயிருக்கவேண்டும். ஆனால், பிக்பாஸ் வேறு ஏதோ பிளான் வைத்திருப்பதுபோல் தெரிகிறது" என்கிறார்கள் அஸீமின் நண்பர்கள்.

நூறு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 60 நாட்களைக் கடந்துவிட்டது. ஆரம்பத்தில் ஷோ கொஞ்சம் டல்லடிக்க, வழக்கமான 16 போட்டியாளர்களுடன் புதிதாக ஆங்கர் அர்ச்சனாவை அந்த வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்கள். அடுத்த சில நாட்களில் சுசித்ரா என்ட்ரி ஆனார்.

அதேபோல் எவிக்‌ஷன் ப்ராசஸ் தொடங்கி ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, கடைசியாக கடந்த வாரம் சம்யுக்தா ஆகியோர் ஷோவிலிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், அர்ச்சனா, சுச்சியைத் தொடர்ந்து மூன்றாவதாக நடிகர் அஸீமும் ஷோவுக்குள் செல்ல இருப்பதாகத் தெரிய வந்தது. ஷிவானிக்கு ஜோடியாக சீரியல்களில் நடித்தவர் அஸீம். விகடன் தளத்தில் ஏற்கெனவே இதுகுறித்துச் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஷோவுக்குள் செல்வதற்காக அஸீம் க்வாரண்டீனில் இருந்தார். இடையில் அவரது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் க்வாரண்டீனுக்கு வந்துவிட்டார்.

பிக் பாஸ்... க்வாரன்டீனிலிருந்து  வெளியேறிய அஸீம்... காரணம் என்ன?

ஆனால் தற்போது வரை அஸீம் ஷோவுக்குள் செல்லவில்லை.

அஸீமின் என்ட்ரி தாமதமாவதன் காரணம் குறித்து விசாரித்தோம்.

அஸீம்
அஸீம்

"கடந்த வாரமே அஸீம் ஷோவுக்குள் போயிருக்க வேண்டியது. பிக் பாஸ் வீட்டுக்குள் வெள்ளம் வந்ததால் அப்ப போகலைனு சொன்னாங்க. வெள்ள நிலைமை சரியாகி ஒரு வாரத்துக்கும் மேல ஆகிவிட்ட சூழல்ல, எந்த நேரமும் அவர் ஷோவுக்குள் போகலாம்னுதான் எதிர்பார்த்துட்டிருக்கோம். ஆனா, உள்ள பிக்பாஸ் வேற ஏதோ ப்ளான் பண்ற மாதிரி தெரியுது. அதனாலதான் இப்ப வரை அவர் உள்ளே போகலைன்னு நினைக்கிறோம்'’ என்கிறார்கள் அஸீமின் நண்பர்கள்.

"அஸீம் உள்ளே சென்றால் ஷிவானிக்குப் பிரச்னை வரலாம். அதனால் ஷிவானி எவிக்‌ஷனில் வெளியேற்றப்படும் சூழல்கூட உருவாகலாம். இப்படிப்பட்ட சூழல் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக ஷிவானி தரப்பில் சிலர் வேலை செய்கிறார்கள்" என்கிறது இன்னொரு தரப்பு.

வெளியில் புயல்கள் வங்காள விரிகுடாவையும் அரபிக்கடலையும் மையம் கொள்ள பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவானியை மையம் கொண்டே புயல் வீசுவது போல் தெரிகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு