Published:Updated:

``போட்ட பணத்தை `பிகில்' கொடுத்ததா.. லாபமா நஷ்டமா?!'' - திருப்பூர் சுப்பிரமணியம் பதில்

பிகில் vs கைதி
பிகில் vs கைதி

'பிகில்', 'கைதி' என 2019 தீபாவளிக்கு வந்த படங்களின் வர்த்தக நிலவரம்... திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் மனநிலை குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!

தீபாவளிக்கு வெளியான 'பிகில்', 'கைதி' என இரண்டு படங்களுக்கும் சினிமா ஆர்வலர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. 'விஜய் - அட்லி' ஹாட்ரிக் கூட்டணி என்பதால் விஜய் ரசிகர்களும், 'மாநகரம்' மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படம் என்பதால் 'கைதி'க்கு சினிமா ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

`` `பிகில்'ல வராத சீன், நயன்தாராவின் பரிசு, கண்ணை மூடி திட்டு வாங்கின விஜய்!" - `பிகில்' அம்ரிதா

படம் ரிலீஸான முதல் நாளின் இறுதியிலேயே 'கைதி'தான் விமர்சன ரீதியாக நிறைய அப்ளாஸ் வாங்கியது. 'பிகில்' படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், விஜய் ரசிகர்களால் அது வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 'கைதி' தயாரிப்பாளர் தரப்பு, எதிர்பார்த்தைவிடவும் அதிக வசூலைக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.

இரு படங்களும் ரிலீஸான முதல் நாளிலிருந்தே 'பிகில்' படத்துக்கான வசூல் விவரங்களை டிராக்கர்கள், டிரேட் அனலிஸ்ட்டுகள் ஆன்லைனில் பகிர்ந்துவந்தனர்.

Kaithi-Bigil
Kaithi-Bigil

'கைதி'க்கு வசூலுடன் சேர்த்து, தியேட்டர்கள், காட்சிகள் அதிகரிப்பு என்ற தகவல்களும் பகிரப்பட்டன. இதற்கிடையே, ஒருபக்கம் 'பிகில்' படம் நஷ்டம் எனவும், மறுபக்கம் 'பிகில்' 200, 250 கோடி வசூல் எனவும் ரசிக சண்டைகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடந்துவருகின்றன.

சமீபத்திய பேட்டியில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, '' 'பிகில்' எங்களுக்கு நல்ல லாபம்'' எனக் கூறியதையடுத்து இன்னும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது ஆன்லைன் ரசிகர்கள் சண்டை.

Archana Kalpathi
Archana Kalpathi
Archana Kalpathi
`` `விஜய் 64’ பத்தி கேட்குறவங்களுக்கு என் பதில் இதுதான்!’’ - `கைதி’ வில்லன் அர்ஜுன் தாஸ்

தீபாவளிக்கு வந்த படங்களின் வர்த்தக நிலவரம் குறித்து விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் பேசினோம். ''தீபாவளிக்கு ரிலீஸான படங்கள் இரண்டுமே நல்ல ஓட்டம்தான். 'படம் எங்களுக்கு லாபம்' என அர்ச்சனா கல்பாத்தியே சொல்லியிருக்காங்க. ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும்?" என்றவரிடம், ''தயாரிப்பாளர்கள் ஓகே, விநியோகஸ்தர்கள் ஹேப்பியா?'' என்று கேட்டோம். '' 'கைதி'யைப் பொறுத்தவரை எஸ்.ஆர்.பிரபு சொந்தமாக ரிலீஸ் செய்துள்ளார். நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் இருப்பதால் படம் லாபத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

'பிகில்' படத்தைப் பொறுத்தவரை படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு கையைக் கடிக்காமல் படம் பிரேக்-ஈவன் ஆகிவிட்டது. போட்ட பணம் அப்படியே வந்துவிட்டது. ஆனால், பெருந்தொகையை முதலீடுசெய்து, அது போட்ட அளவிலேயே பணம் திரும்பி வருவதற்கு ஏன் இந்தத் தொழில் செய்ய வேண்டும், லாபம் கிடைக்க வேண்டாமா? நல்ல லாபம் கிடைத்தால்தானே விநியோகஸ்தர்கள் தொடர்ந்து இந்தத் தொழிலில் இருப்பார்கள்.

திருப்பூர் சுப்பிரமணியம்
திருப்பூர் சுப்பிரமணியம்

ஒரு சில படங்கள் வெறும் ரசிகர்களுக்காகவே எடுக்கப்படுவதுதான் பிரச்னை. அந்த நிலைமை மாற வேண்டும். எல்லாத் தரப்பினருக்குமான படங்களை எடுத்தால்தான் தியேட்டருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வருவார்கள். தமிழ் சினிமா ஹீரோக்கள் இதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

விஜய் மாதிரி ஒரு பெரிய நடிகரின் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருக்கும்போதே இவ்வளவு மக்கள் பார்த்து ரசிக்கிறார்கள் என்றால், எல்லாத் தரப்புக்குமான படமாக இருந்தால், அதன் கலெக்‌ஷன் எங்கேயோ போய்விடும். கதாநாயகர்கள், தங்கள் புகழ்பாடும் படங்களில் நடிப்பதை விடுத்து நல்ல கதைகளில் நடிக்க வேண்டும்.

நம்ம வீட்டுப் பிள்ளை - அசுரன்
நம்ம வீட்டுப் பிள்ளை - அசுரன்
`` `இந்தியன் 2’ படத்துல நடிக்கப் போறேன்'' - `பிகில், `கைதி’யில் கலக்கிய ஜார்ஜ் மரியான்!

சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படம் ஒரு சிறந்த உதாரணம். படத்தின் கதை தமிழ் சினிமாவில் காலம்காலமாகப் பார்த்த கதைதான். ஆனால், சிவகார்த்திகேயன் தன் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு இருந்ததுதான் ஆடியன்ஸுக்கு ரசிக்கும்படியாக இருந்தது. 'மாரி-2' வைவிட 'அசுரன்' நல்ல ஓட்டம் எனும்போதே, மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்துவிடுகிறது. நல்ல கதைகளையும் எமோஷன்களையும் தேடித்தான் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருகிறார்கள். அதைக் கொடுக்கவேண்டியது நம் ஹீரோக்களின் கடமை" என்றார் திருப்பூர் சுப்பிரமணியம்.

அடுத்த கட்டுரைக்கு