Published:Updated:

`நான் நடித்த படங்களிலேயே என் மகளுக்குப் பிடிக்காத படம்..!' - காரணம் சொல்லும் நடிகை கஜோல்

``படத்தின் இறுதிக்காட்சியின்போது அவள் அலறியபடி வெளியே ஓடிவிட்டாள்.''

கஜோல்
கஜோல் ( www.instagram.com/kajol/?hl=en )

பொதுவாக நடிகர், நடிகைகளுக்குத் தாங்கள் நடித்த படங்களில் ஒரு சில படங்கள் அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கும். நல்ல கதையம்சம், முக்கியமான கேரக்டர், ரசிகர்கள் தன்னைக் கொண்டாடியது, விருது கிடைத்தது என்று அதற்குப் பல காரணங்கள் இருக்கும்.

அதேபோல, சில படங்கள் அவற்றில் நடித்த நடிகர், நடிகைகளுக்குப் பிடித்தும், மற்றவர்களுக்குப் பிடிக்காமலும் போய்விடலாம். குறிப்பாக அவருடைய குடும்பத்தினருக்கு. பாலிவுட் நடிகை கஜோலுக்கும் இப்படியொரு நிகழ்வு நடந்திருக்கிறது. ரேடியோ ஷோ ஒன்றில் அவரே இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

கஜோல்
கஜோல்
www.instagram.com/kajol/?hl=en

கரீனா கபூர் கானின் `வாட் விமன் வான்ட்' ரேடியோ ஷோவில், `நீங்கள் நடித்த படங்களில் உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்காத படம் எது?' என்ற கேள்விக்கு, ``விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட `வீ ஆர் ஃபேமிலி' படம், என் மகள் நைஸாவுக்குப் பிடிக்காத படம். அந்தப் படத்தில் நான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, படத்தின் இறுதியில் இறந்துவிடுவேன். மிகவும் உருக்கமான படம் அது.

இந்தப் படம் ரிலீஸானபோது, என் மகன் சின்ன குழந்தை. நைஸாவுக்கு விவரம் தெரிகிற வயது. படத்தின் இறுதியில் நான் மரணமடைகிற காட்சியின்போது அவள் அலறியபடி வெளியே ஓடிவிட்டாள். தவிர, `என்னை ஏன் இந்தப் படத்துக்கு அழைத்து வந்தீர்கள்' என கோபப்படவும் செய்தாள்'' என்று நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் கஜோல்.

Kajol - Ajay devgan
Kajol - Ajay devgan
www.instagram.com/kajol/?hl=en

`சரி, அப்பா அஜய்தேவ்கன் நடித்ததில் உங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்காத படம் எது?' என்ற கேள்விக்கு, ``அஜய் நடித்த படங்களை இருவருமே விரும்பிப் பார்ப்பார்கள். எனக்குத் தெரிந்து அஜய்யின் எந்தப் படத்தையும் அவர்கள் வெறுக்கவில்லை'' என்று சிரித்திருக்கிறார் கஜோல் அஜய் தேவ்கன்.