''போராளி நடிகை, பாலிவுட் குயினின் புதுப்படம், அனிமேஷன் ஆகும் 'மேரியோ', பாவனாவின் ஸ்பெஷல் அறிவிப்பு!" #WoodBits

அனிமேஷன் படமாக உருவாகிறது 'மேரியோ'

மேரியோ

90-களின் மிக ஃபேமஸான வீடியோ கேம்களில் ஒன்று 'மேரியோ'. மேரியோ, லியுகி என்ற இரு பிளம்பர்களை வைத்து 'மேரியோ பிரொஸ்' என்ற  பெயரில் ஷிகேரு மியாமாட்டொ', யோசி கொடாபே ஆகியோர் கேமாக டிசைன் செய்தார்கள். சர்வதேச அளவில் இந்த கேமை நின்டான்டோ  நிறுவனம் பிரபலப்படுத்தியது. சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த கேமிற்கு அடிமையானார்கள். தற்போது இல்லுமினாட்டி நிறுவனமும், நின்டான்டோ  நிறுவனமும் இணைந்து 'மேரியோ' என்ற அனிமேஷன் படத்தைத் தயாரிக்க உள்ளனர். 1993-ம் ஆண்டில் வெளிவந்த முழுநீளத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாததைத் தொடர்ந்து இப்படம் அனிமேஷன் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.   

கல்யாணத்திற்குப் பிறகு நடிப்பேன்- பாவனா

பாவனா

அசல், ஜெயம்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. அண்மையில் தனது காதலன் நவீனை மணமுடித்துக்கொண்டார். கல்யாணத்திற்குப் பிறகு பிரபல மலையாள பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ள பாவனா " நல்ல கதைகள் வந்தால் நடிக்கத் தயாராக இருக்கிறேன். நவீனும், நான் வீட்டில் வெட்டியாக இருப்பதை விரும்ப மாட்டார். வீட்டில் இருக்கும்போது என்னை 'புஜ்ஜு' என்றுதான் செல்லமாக அழைக்கிறார். ஒருவருக்கொருவர் நன்கு அறிந்திருப்பதால் நடிப்பை கன்டினியூ பண்ணப்போறேன் .

பாலிவுட் குயின் ஆலியா பட்டின் 'ராஸி"

ராஸி

இந்திப் படங்களில் தனது எளிமையான நடிப்பின் மூலம் பல இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டவர் ஆலியா பட். 'உட்தா பஞ்சாப்', 'பத்ரிநாத் கி துல்ஹனியா', 'டியர் ஸிந்தகி'  என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆலியா பட், இப்படத்தில் ஒரு காஷ்மீரிப் பெண்ணாக வரவுள்ளார்.  ரமன் ராகவ், மசான் உள்ளிட்ட படங்களில் நடித்த விக்கி கௌஷல் இவருக்கு ஜோடியாகப் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலிவுட்டின் பிரபலத் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரன் ஜோஹர் இப்படத்தைத் தயாரிக்க மேக்னா குல்ஸார் இயக்குகிறார். எழுத்தாளர் ஹரிந்தர் சிக்கா எழுதிய 'காலிங் ஷெமட்' என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்படுகிறது.   

இரானியப் படத்தில் நடிக்கும் 'ஆரண்ய காண்டம்' வில்லன்

ஜாக்கி

ஆரண்ய காண்டம், மாயவன் ஆகிய தமிழ்ப் படங்களின் மூலம் நமக்கு அறிமுகமானவர் இந்தியின் முன்னணி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப். இந்தியில் வில்லன், ஹீரோ, குணசித்திரம் எனப் பல பரிமாணங்களில் நடித்திருக்கும்  ஜாக்கி ஷ்ராஃப் இதுவரை பத்து மொழிகளில் 200 படங்களுக்கு மேல்  நடித்துள்ளார்.  இரானிய இயக்குநர் கோப்ரான் மொஹம்மத்போர் இயக்கத்தில் உருவாகும் 'தி டெவில்ஸ் டாட்டர்' திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்திய- இரானியக் கூட்டமைப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.  கோப்ரான் 2016-ல் 'ஹெலோ மும்பை ' என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது    

போராளியாக  நடிக்கும்   கோல்ஷிஃப்தே ஃபர்ஹானி

கோல்ஷிஃப்தே ஃபர்ஹானி

`பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' ஐந்தாம் பாகம், `பாடி ஆஃப் லைசஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் கோல்ஷிஃப்தே ஃபர்ஹானி. பிரெஞ்சு இயக்குநர் ஈவா ஹசன் இயக்கும் ' தி கேல்ஸ் ஆஃப் தி சன்' திரைப்படத்தில் சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பகுதிகளை மீட்கும் பெண் போராளி பஹார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  தங்கள் பாதுகாப்பிற்காக குர்திஷ் பெண்கள் இணைந்து மகளிர் போர்ப்படை ஒன்றைத் திரட்டினர். இந்த  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.  தெஹ்ரான் நாட்டை சேர்ந்த ஃபர்ஹானி இஸ்லாமிய கோட்பாடுகளை எதிர்த்து பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்து வருகிறார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!