Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"லக்ஷ்மி மஞ்சுவின் ஹாலிவுட் என்ட்ரி, ஹாக்கி ஆடும் அக்‌ஷய், பாலையாவுக்கு ஆபரேஷன், மீண்டும் டைனோசர்கள்!" #WoodBits

அக்‌ஷய் குமார் நடிப்பில் 'கோல்டு'  

கோல்டு

பாலிவுட்டில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் உருவாகி வருகின்றன. அந்தவகையில் அக்‌ஷய் குமார், மௌனி ராய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம், 'கோல்டு. ஆமிர் கானின் 'தலாஷ்' திரைப்படத்தை இயக்கிய ரீமா காக்டீ இப்படத்தை எழுதி இயக்குகிறார். 1948- ம் ஆண்டு லண்டனில் நடந்த ஹாக்கி போட்டியில் சுதந்திரம் பெற்றபிறகு இந்திய அணி முதல் முறையாக தங்கம் வென்ற சம்பவத்தைப் பின்புலமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ஹாக்கி அணி கேப்டன் கிஷன் லாலாக நடிக்கிறார் அக்‌ஷய் குமார். இந்தியநாடு பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் இருந்தபோது தொடர்ந்து மூன்று முறை ஹாக்கிப் போட்டியில் ஒலிம்பிக் தங்கத்தை வென்றுள்ளது இந்தியா. சுதந்திரம் பெற்றபின் கிஷன் லால் தலைமையில் முதல்முறையாகத் தங்கப்பதக்கம் வென்றது. ரித்தேஷ் சித்வானி, ஃபர்ஹான் அக்தர் தயாரிக்கும் இப்படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. அக்‌ஷய் குமாரின் நடிப்பு, படத்தின் பிரம்மாண்டம் என அனைவரையும் 'கோல்டு' டீஸர் போல்டாக்கியது. ஆகஸ்டு 15- ம் தேதி சுதந்திர தினத்திற்கு இப்படம் வெளியாகும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் ஹாக்கியைத் தவிர இதுவரை துப்பாக்கிச் சுடுதலில் மட்டுமே இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்‌ஷய் குமார் 2.0 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். 

 

ஹாலிவுட்டில் தெலுங்கு நடிகை

லக்‌ஷ்மி மன்சு

தெலுங்குப் பட உலகில் பல படங்களில் கதாநாயகி மற்றும் குணச்சித்திரக் கேரக்டர்களில் நடித்து வருபவர் லக்ஷ்மி மஞ்சு. பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் இவர். ஹாலிவுட் நாயகி ப்ரயி லார்சன், இந்தியாவின் உத்கர்ஷ் அம்பட்கர் நடிக்கும் 'பாஸ்மதி ப்ளூஸ்' படத்தில் மரபணு மாற்று நெல்லுக்கு எதிராகப் போராடும் இந்திய விவசாயிகளில் ஒருவராக வருகிறார், லக்ஷ்மி மஞ்சு. இந்தப் பிரச்னைகளிலிருந்து வெளிவருவதற்கு நாயகனுக்கு உதவி செய்யும் அயல்நாட்டு விஞ்ஞானியாக லார்சன் நடிக்கிறார். வரும் 9- ம் தேதி இப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தை ஒரு மியூசிக்கல் ரொமான்டிக் படமாக இயக்கியுள்ளர் டான் பேரான். இப்படத்தின் வெளியீட்டிற்காக, அமெரிக்கா செல்வதாக அறிவித்திருக்கிறார் லக்ஷ்மி மஞ்சு. 

பாலகிருஷ்ணாவிற்கு ஆபரேஷன் 

பாலகிருஷ்ணா

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா, நயன்தாரா  நடித்து பொங்கல் அன்று வெளிவந்த  திரைப்படம் 'ஜெய் சிம்ஹா'. இப்படம் ஆந்திராவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்திற்கு முன்பு இவர் நடித்திருந்த 'கெளதமிபுத்ர சதகர்னி' படத்தின் ஸ்டன்ட் காட்சிகளின்போது, பாலகிருஷ்ணாவிற்கு தோள்பட்டை பகுதியில் அடிபட்டது. மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில், இதற்கான சிகிச்சையைத் தள்ளிவைத்த பாலகிருஷ்ணா, சமீபத்தில் அந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டார். பாலகிருஷ்ணாவிற்கு ஹைதராபாத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் தோள்பட்டை அறுவை சிகிச்சை நடந்தது. உடல்நிலை தேறியநிலையில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாலகிருஷ்ணா தற்போது, அவரது தந்தை என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரித்து நடிக்க இருக்கிறார். 

கன்னடத்தில் ரெடியாகும் 'பிச்சைக்காரன்' 

விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் வெளிவந்த 'பிச்சைக்காரன்' சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் கன்னட ரீமேக் உரிமையைப் பெற்ற கன்னடத்தின் முன்னணி தயாரிப்பாளரான யோகிஷ் துவாரக்கெஷ், இப்போது இப்படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். சிரஞ்சீவி சர்ஜா ஹீரோவாக நடிக்கிறார். நிவிஷ்கா நாயுடு ஹீரோயினாக நடிக்கிறார். கே.எம்.சைதன்யா இயக்கிவரும் இப்படத்திற்கு 'அம்மா ஐ லவ் யூ' என டைட்டில்  வைக்கப்பட்டுள்ளது. 'புது வசந்தம்', 'படையப்பா' படங்களில் நடித்த நடிகை சித்தாரா இப்படத்தில் முக்கியமான அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.    

'ஜுராஸிக் வேல்டு - ஃபாலன் கிங்டம்'  பட டிரெய்லர் வெளியீடு

1993- ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஜுராசிச் பார்க்'. இப்படத்தினை தொடர்ந்து 'ஜராசிக் பார்க் 2' மற்றும் 'ஜுராசிக் பார்க் 3' ஆகிய  திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. மீண்டும் டைனோசர்களை மையப்படுத்தி 2015-ல் 'ஜுராசிக் வேர்ல்டு' என்ற பெயரில் உருவானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. ஜூன் 22- ம் தேதி வெளியாகவுள்ள 'ஜுராஸிக் வேல்டு - ஃபாலன் கிங்டம்' படத்தின் டீஸர் டிசம்பர் மாதம் வெளியானது. தற்போது அமெரிக்காவில் நடந்த 'சூப்பர் பவுல்' பிரம்மாண்ட விளையாட்டு நிகழ்வில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்