"அனுஷ்கா சர்மாவின் `பரி', அமிதாப் - ரிஷி ரிட்டர்ன்ஸ், சீனாவில் கல்லாகட்டிய அமீர்கான்..." #WoodBits

27 வருடங்களுக்குப் பிறகு இணையும் அமிதாப், ரிஷி கபூர்

உமேஷ் சுக்லா இயக்கத்தில் அமிதாப், ரிஷி கபூர் நடிக்கும் '102 நாட்' அவுட் படத்தின் டிரெய்லர் கடந்த வெள்ளியன்று வெளியானது. உலகின் அதிக வயதுடன் வாழும் மனிதன் என்ற சாதனையைச் செய்ய முயற்சிகொள்ளும் 102 வயது தந்தை மற்றும் அவருக்கு உதவி செய்யும் 75 வயது மகன் ஆகிய வேடங்களில் அமிதாப், ரிஷி கபூர் நடித்துள்ளனர். குஜராத்தி எழுத்தாளர் சௌமியா ஜோஷி எழுதிய நாடகத்தை அடிப்படையாகக்கொண்டு இப்படம் தயாராகியிருக்கிறது. இதன் மூலம் 27 வருடங்களுக்குப் பிறகு  அமிதாப் பச்சன், ரிஷி கபூர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு முன்பு இவர்கள் 'அமர்-அக்பர்-ஆண்டனி', 'நசீப்' ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

சீனாவில் கல்லாகட்டும் அமீர்கான் 

அமீர்கான்

அமீர்கான் தயாரிப்பில் 'தங்கல்' பட புகழ் சாயிரா வசிம் நடித்து வெளிவந்த படம் 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்'. அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தை 15 கோடி செலவில் தயாரித்தார், அமீர்கான். இந்தியாவில் ஏறத்தாழ 150 கோடி ரூபாயை வசூலித்த இப்படம் சீனாவில் ஜனவரி 19-ம் தேதி வெளியானது. முதல்நாளே அமோக வரவேற்பைப் பெற்ற 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ்' திரைப்படம், நான்காவது வார கலெக்‌ஷனில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 585 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. 'தங்கல்' படத்திற்குப் பிறகு இந்தச் சாதனையை 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ்' படம் செய்துள்ளது. இந்தியாவில் வசூலான தொகையையும் சேர்த்தால், இதுவரை 700 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்திருக்கிறது. 

அனுஷ்கா ஷர்மா தயாரிக்கும் 'பரி'

பரி

திருமணத்துக்குப் பிறகு அனுஷ்கா ஷர்மா மீண்டும் நடிப்பில் களமிறங்கிவிட்டார். ஷாருக்கானுடன் 'ஜீரோ' படத்தில் நடித்துவரும் அனுஷ்கா ஷர்மா, தனது சொந்த நிறுவனமான 'க்ளீன் ஸ்லேட்' என்டர் டெயின்மென்ட்ஸ்' தயாரிப்பில் ப்ரோசித் ராய் இயக்கத்தில் 'பரி' என்ற திகில் படத்தை மார்ச் 2-ம் தேதி வெளியிடத் தயாராக உள்ளார். நேற்று இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டவர், டிரெய்லர் வரும் 15-ம் தேதி வெளிவரும் எனவும் அறிவித்துள்ளார். அனுஷ்கா ஏற்கெனவே 'என்.ஹெச்-10', 'ஃபில்லௌரி' ஆகிய படங்களை நடித்து தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .    

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!