Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"அலியாவின் 'சூப்பர் ஹீரோ' கதை, 'விண்வெளி வீரன்' ஷாரூக் கான், சில்வர்ஸ்டரின் கலாய், ப்ரிதிவிராஜின் ஸ்பெஷல்..." #WoodBits

விண்வெளி வீரராக ஷாரூக் கான் 

ஷாருக் கான் 

ஹாலிவுட்டைப்போல இந்தியாவிலும் விண்வெளிப் படங்கள் மெல்ல வரத் தொடங்கியுள்ளன. தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 'டிக் டிக் டிக்' என்ற ஒரு விண்வெளிப் படமும், இந்தியில் மாதவன், 'தோனி' புகழ் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் 'சந்தா மாமா தூர் கே' எனும்  விண்வெளிப் படமும் தயாராகி வருகின்றன. ரஷ்ய விண்வெளி ஆய்வின் மூலம் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்ற புகழை எட்டியவர், ராகேஷ் ஷர்மா. இவரது வாழ்க்கையை வரலாறாக உருவாகும் இப்படத்தில், ராகேஷ் ஷர்மாவாக நடிக்கிறார், பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஷாரூக் கான். 'சல்யூட்' எனப் பெயர் இடப்பட்டுள்ளது. செப்டம்பரில் இருந்து இதற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகவுள்ளன. ஷாரூக் கான் தற்போது,  கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகவுள்ள 'ஜீரோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனுஷின் 'அம்பிகாபதி' படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய்  இயக்கி வருகிறார். 

நலமுடனும், பலமுடனும் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் 

Stallone

'ராக்கி', 'எக்ஸ்பேண்டபில்ஸ்' உள்ளிட்ட பல படங்களின் மூலம் 40 அண்டுகளாக ஹாலிவுட்டைக் கலக்கி வருபவர், சில்வர்ஸ்டர் ஸ்டாலோன். தற்போது 'எஸ்கேப் பிளான்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் புற்றுநோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இந்தக் காரணத்தால் அவர் இறந்துவிட்டதாகவும் பல செய்திகள் வலம் வந்தன. இதனையடுத்து, 'வதந்திகளை நம்பாதீர்கள். நான் உயிருடன் இருக்கிறேன். நலமுடனும், பலமுடனும் 'பன்சிங்' மேற்கொண்டு வருகிறேன்' என இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். ஸ்டாலோனுக்கு இதொன்றும் புதிதல்ல. ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு ப்ரிட்டிஷ் இணையதளம் ஒன்று இப்படியான ஒரு வதந்தியை செய்தியாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

அலியா, ரன்பீர் நடிக்கும் சூப்பர் ஹீரோ படம்!

ரன்பீர் கபூர்

'வேக் அப் சிட்', 'ஹே ஜவானி ஹே திவானி' ஆகிய படங்களைத் தொடர்ந்து அயன் முகர்ஜி இயக்கவுள்ள திரைப்படம், 'பிரம்மாஸ்த்ரா'. சூப்பர் ஹீரோ ப்ளஸ் சயின்ஸ்ஃபிக்‌ஷன் ஜானரில் தயாராகவுள்ள இப்படத்தில், ரன்பீர் கபூர், அலியா பட், மௌனி ராய் ஆகியோர் நடிக்கவுள்ளனர். படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் முன்னேற்பாடுகள் மற்றும் சிறப்புப் பயிற்சிகளுக்காக ரன்பீர் கபூர், அலியா பட், மௌனி  மற்றும் படக்குழு பல்கேரியா நாட்டிற்குச் சென்றுள்ளது   

அனிருத் இல்லை தமன்.

NTR28

ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் 28-வது படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார். 'NTR 28' என்ற ஹேஷ்டேக் போட்டு டோலிவுட் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். காரணம், ஹிட் ஹீரோ - இயக்குநர் காம்போ. திரிவிக்ரமின் முந்தைய படமான 'அக்னியாத்தவாசி' படத்தில் இசையமைத்திருந்த அனிருத்  இப்படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது. இசை ஆல்பம் ஹிட்டாக இருந்தும் 'அக்னியாத்தவாசி' படம் எதிர்மறை விமர்சனங்களுக்குள்ளானது. தற்போது அந்தக் கூட்டணியை மாற்றி திரிவிக்ரம் இசையமைப்பாளர் தமனிடம் இந்தப் படத்தின் இசையமைப்பு வேலைகளை ஒப்படைக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார். 

ப்ருதிவிராஜ் நடிக்கும் 'ரணம்'

ப்ரித்திவி ராஜ்

தமிழில்  'கனா கண்டேன்', 'மொழி', 'நினைத்தாலே இனிக்கும்' ஆகிய படங்களில் நடித்தவர், ப்ருதிவிராஜ். மலையாளத்தில் டாப் ஸ்டாராக இருக்கிறார். நிர்மல் சஹாதேவ் இயக்கத்தில் இஷா தல்வாருடன் ப்ருதிவிராஜ் நடித்துவரும் திரைப்படம், 'ரணம்'. அமெரிக்க - கனடா எல்லையைச் சட்டவிரோதமாகக் கடப்பவர்களைப் பற்றிய கதையைக் கொண்ட படம் என்பதால், முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 2-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.      

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?