ராம் கோபால் வர்மாவின் ஸ்பெஷல், பிரசாந்த் - சினேகாவின் புதிய படம், 'வொண்டர் வுமன்' ரிட்டர்ன்... #WoodBits | Ram gopal varma's new film, vivegam actor's telugu film, gal gaddot's -wonder woman 2 WoodBits

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (03/03/2018)

கடைசி தொடர்பு:13:31 (03/03/2018)

ராம் கோபால் வர்மாவின் ஸ்பெஷல், பிரசாந்த் - சினேகாவின் புதிய படம், 'வொண்டர் வுமன்' ரிட்டர்ன்... #WoodBits

அக்‌ஷய் குமார் ஜோடியாகும் ப்ரணிதி சோப்ரா

பரினீத்தி சோப்ரா | அக்‌ஷய் குமார் WoodBits

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகிவரும்  திரைப்படம்  'கேசரி'. 1897-ம் ஆண்டு சீக்கியர்களுக்கும், பிரிட்டிஷ்காரர்களுக்கும் நடந்த சரகார்ஹி யுத்தத்தை அடிப்படையாகக்கொண்ட இந்தப் படத்தை அனுராக் சிங் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ப்ரணிதி சோப்ரா கமிட்டாகி உள்ளார். தொடர்ந்து உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்ட கதைகளில் நடித்துவரும் அக்‌ஷய் குமாரின் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு எக்கசக்கமாக எகிறியுள்ளது.      

ராம் கோபால் வர்மா - நாகார்ஜுனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆஃபிசர்

இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் இயக்கிய 'காட், செக்ஸ் அண்ட் ட்ரூத்' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். டோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நாகார்ஜுனா இப்படத்தில் நடிக்கிறார். 1988-ல் நாகர்ஜுனா நடித்து தெலுங்கில் வெளியான 'சிவா' என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ராம் கோபால் வர்மா. போலீஸ் த்ரில்லர் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

குவெண்டின் டொரண்டினோ படத்தில் டாப் ஸ்டார்ஸ் 

பிராட் பிட் | குவெண்டின் டாரண்டினோ | லியானார்டோ டி காப்ரியோ

'பல்ப் ஃபிக்‌ஷன்', 'ரிசர்வாயர் டாக்ஸ்', 'ஜாங்கோ அன்செயிண்டு' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர், குவெண்டின் டொரண்டினோ. 54 வயதான இவர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'ஒன்ஸ் அப் ஆன் எ டைம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஹாலிவுட்டின் டாப் ஸ்டார்கள் பிராட் பிட் மற்றும் லியானார்டோ டி காப்ரியோ ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.  இப்படத்தின் கதை 1969-களில் ஹாலிவுட்டில் சாதிக்கத் துடிக்கும் லாஸ் ஏஞ்சலஸ் நகர் இளைஞர்கள் ரிக் டால்டன் மற்றும் ஷாரன் டேட் ஆகியோரின் கதை என இயக்குநர் டொரண்டினோ தெரிவித்துள்ளார்.

பிரமாண்டமாகத் தயாராகும் 'வொண்டர் உமன் 2'

வொண்டர் உமன்

ஹாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளிவந்து உலகெங்கும் பல ரசிகர்களை மகிழ்வித்த படம், 'வொண்டர் உமன்'. கல் கடோத் நடித்த இத்திரைப்படத்தை ஜென்கின்ஸ் இயக்கினார். டி சி காமிக்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் வசூல் ரீதியில் மாபெரும் சாதனை செய்தது. இதைத் தொடர்ந்து, 'வொண்டர் உமன்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் வேலைகள் தற்போது சூடுபிடித்துள்ளன. முதல் பாகத்தை இயக்கிய பேட்டி ஜென்கின்ஸே இப்பாகத்தையும் இயக்குவார் எனவும்,  2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்ன செய்கிறார் விவேக் ஓபராய்? 

விவேக் ஒப்ராய்

அஜித்குமார், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் 'விவேகம்'. இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் விவேக் ஓபராய். தமிழைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ராம் சரணுக்கு வில்லனாக நடித்து வருகிறார். பிரபல டோலிவுட் இயக்குநர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கி வருகிறார். சினேகா, பிரஷாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close