Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ஹாலிவுட்டில் ப்ரித்விராஜ், 'டிரெண்டிங்' சமந்தா, படமாகும் 'டோரா', ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..." - #WoodBits

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?!
 

சிவகார்த்திகேயன்

பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார், சிவகார்த்திகேயன். செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் சூடு பிடித்துள்ளது. இதனிடையே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா  சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைப்பார் என சென்றவருடமே எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருந்தனர். தற்போது இருவரும் இணைவதாக கோலிவுட் பரவலாகப் பேசி வருகிறது. விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களை இயக்கிய ராஜேஷ்தான் இப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வருகிறது.  

'கிராமத்து மயில்' சமந்தா!

 

 

டோலிவுட்டில் தனக்கென தனியிடத்தைப் பிடித்திருப்பவர், நடிகை சமந்தா. திருமணத்திற்குப் பிறகு அதிக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ள 'ரங்கஸ்தலம்' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார், சமந்தா. கதாநாயகன் ராம் சரண் செவித்திறன் குறைபாடு உடையவராக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. கடந்த 24 மணி நேரமாய் யூ-டியூப் டிரெண்டிங்கில் உள்ளது. 1985-களில் நடப்பதாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஆதி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மார்ச் 30-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


திரைப்படமாகும் 'டோரா'!

டோரா

தமிழ் கார்ட்டூன் சேனல்களின் வருகை நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சில கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பரவலாய்ப் பேசப்படும். அந்தவகையில், கடந்த சில ஆண்டுகளாய் குழந்தைகளின் ஆல்டைம் ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருப்பது, 'டோராவின் பயணங்கள்'. உலகளாவிய ரசிகர்களைப் பெற்றுள்ள 'டோரா' தற்போது முழுநீள லைவ் ஆக்ஷன் படமாகத் தயாராகப்போகிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இதற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டீனேஜ் டோரா, டியாகோவுடன் இணைந்து உலகைச் சுற்றுவதே படத்தின் கதை. இப்படத்தை 'தி மப்பட்ஸ்', 'ஆலிஸ்- லுக்கிங் த்ரூ தி கிளாஸ்' திரைப்படங்களை இயக்கிய ஜேம்ஸ் பாபின் இயக்கவுள்ளார்.

ஹாலிவுட்டில் இணையும் ப்ரித்திவிராஜ்.

ப்ரித்திவிராஜ்

மலையாளம், தமிழ் என இரண்டு திரையுலக ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர், நடிகர் ப்ரித்திவிராஜ். 'மொழி', 'நினைத்தாலே இனிக்கும்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்த ப்ரித்திவிராஜ், மலையாளத்தில் தற்போது டாப் ஸ்டார். முழுக்க வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்ட 'ரணம்', காதலை மையமாகக் கொண்ட 'மை ஸ்டோரி' ஆகிய படங்களின் ரிலீஸுக்குக் காத்திருக்கும் ப்ரித்திவிராஜ், '2012', 'ஜுமாஞ்சி', 'ஸ்பைடர்மேன்' ஆகிய படங்களைத் தயாரித்திருக்கும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தினுடன் இணைந்து தனது முதல் தயாரிப்பை மேற்கொள்ளவிருக்கிறார். தென்னிந்திய திரையுலகில் கால் பதித்திருக்கும் சோனி நிறுவனம் இதற்கு முன் இந்தியில் வெளியான 'பேட்மேன்' திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது, குறிப்பிடத்தக்கது. 

தனது ஹீரோவுக்காகக் காத்திருக்கும் இயக்குநர்.

இர்ஃபான்

இந்தி திரையுலகின் பிரசித்தி பெற்ற நடிகர் இர்ஃபான் கான். சமீபத்தில் தான் நியூரோஎண்டாக்ரின் ட்யூமர் என வியாதியால் அவதிப்படுவதாகக் கூறி, பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். நியுரோ என்டொகிரைன் டியூமர் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இர்ஃபான், தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே தீபிகா படுகோனுடன் இணைந்து விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த படம் தொடங்குவதற்கு முன், இர்ஃபான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுவிட்டார். சற்றும் தளராத இயக்குநர் விஷால், 'எதற்கும் துணியும் போராளி இர்பான், நோயை வென்று வரும்வரை படக்குழு காத்திருக்கும்' என ட்வீட் தட்டியிருக்கிறார். இதற்கு தீபிகாவும் சம்மதித்து தனது கால்ஷீட்டுகளை மாற்றியுள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்