Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"ஆக்‌ஷனில் அடிபட்ட அலியா, பாலிவுட்டின் புது வாரிசு, பேக்அப் செய்த 'சாமி 2' டீம், பாகுபலி சீனாவில் ரெடி..." #WoodBits

ரன்வீர் சிங் படத்தில் அறிமுகமாகும் வாரிசு நடிகை

 

சாரா அலி கான் / ரன்வீர் சிங்
 

பாலிவுட் திரையுலகில் வாரிசு கலைஞர்களின் ஆதிக்கம் அதிகம். முந்தைய தலைமுறை நடிகர்களில் ஷாரூக்கான் மற்றும் ஒருசில நடிகர்களைத் தவிர அனைவருமே வாரிசு நடிகர்களே. தற்போதுள்ள இளம் கதாநாயக, நாயகிகளில் 90 சதவிகிதம் வாரிசுகளே!. ஆம், அர்ஜுன் கபூர், சோனம் கபூர், இம்ரான் கான், அலியா பட் என நீண்டுகொண்டே போகும் அந்தப் பட்டியலில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான  சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் இணைகிறார். கரண் ஜோஹர் தயாரிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கும் 'சிம்பா' என்ற திரைப்படத்தில்  ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார், சாரா.  

படப்பிடிப்பை பேக்அப் செய்த 'சாமி 2' படக்குழு.


சாமி 2

2003-ல் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்து வெளிவந்த திரைப்படம், 'சாமி'. பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஹரி - விக்ரம் கூட்டணி  படமாக்கி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தின் தென்பகுதிகளில் ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு, கடைசியாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மார் பகுதியில் நடைபெற்று வந்தது. இதனிடையே சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த ஸ்டிரைக் காரணத்தால், முன்கூட்டியே படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறது, 'சாமி 2' படக்குழு.     

சீனாவில் வெளியாகும் 'பாகுபலி 2'.

பாகுபலி 2

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் எனப் பல நட்சத்திரங்கள் நடித்து, சர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பிய படம், 'பாகுபலி 2'. எல்லா மொழிகளிலும் வெளிவந்து சூப்பர் ஸ்டார்களின் ரெக்கார்டுகளைத் தகர்த்து எறிந்த திரைப்படமாக இது அமைந்தது. இதுவரை 1,600 கோடிகளை வசூலித்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் சீனாவில் மொழி மாற்றம் செய்து வெளியாகத் தயாராகவுள்ளது. போர்ப் படங்கள் என்றாலே சீன ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் 6,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். 

ஆக்‌ஷன் காட்சியில் அலியா பட் காயம்!

ஆலியா பட்

'வேக் அப் சிட்', 'ஹே ஜவானி ஹே திவானி' படங்களைத் தொடர்ந்து அயன் முகர்ஜி இயக்கிவரும் திரைப்படம், 'பிரம்மாஸ்த்ரா'. சூப்பர் ஹீரோ ப்ளஸ் சயின்ஸ்ஃபிக்‌ஷன் ஜானரில் தயாராகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்துவருகிறது. கடுமையான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டுள்ள இப்படத்தின் ஸ்டன்ட் காட்சி ஒன்றில் ரன்பீர் கபூர், அலியா பட் பங்கேற்று நடித்துள்ளனர். அப்போது தவறுதலாகக் கீழே விழுந்த அலியாவிற்கு தோள் பட்டை, முழங்கை பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. சில நாள்கள் அலியா ஆக்‌ஷன் காட்சிகளில் பங்கேற்கக் கூடாது என மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். மூன்று அத்தியாயங்களாக உருவாகவிருக்கிறது, இப்படம். 

குரல் தேடி அலையும் 'டெட்பூல் 2'.

ரன்வீர் சிங்

ரியான் ரெனால்ட்ஸ் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளிவந்த வெற்றித் திரைப்படம், 'டெட் பூல்'. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான 'டெட் பூல்-2' போஸ்டர், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்டுவதாக இருந்தது. 'டெட் பூல் 2' மே 18-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். மரணகலாய், மாஸ் சண்டைக்காட்சிகள் என கெத்தாகத் திரியும் குணாதிசயங்களைக் கொண்ட வித்தியாசமான சூப்பர் ஹீரோவான டெட்பூலுக்கு இந்தியில் அதேபோல் உள்ள ஒரு நட்சத்திரத்தை டப்பிங் பேச வைக்கலாம் என முடிவு செய்து, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அணுகியிருக்கிறது, படக்குழு. தற்போது 'கல்லி பாய்' படத்தில் நடித்து வரும் ரன்வீர்,  ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், இந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.  

 

    
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement