"சோனம், கத்ரீனா, தீபிகா, அனுஷ்கா, அலியா... டாப் பாலிவுட் ஹீரோயின்களின் ஷார்ட் ரீகேப்!"

டாப் பாலிவுட் ஹீரோயின்களைப் பற்றிய ஷார்ட் ரீகேப்.

மீபகாலமாக கோலிவுட்டுக்கு இணையாகப் பாலிவுட் படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் நடிக்கும் பிரபல ஹீரோயின்களைப் பற்றிய குயிக் ரீவைண்ட் இது.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா #BollywoodHeroins

ஆர்மி குடும்பத்தைச் சேர்ந்த அனுஷ்கா ஷர்மா தனது பள்ளிப்பருவத்தில் மூன்று வருடங்கள் ஓட்டப் பந்தய வீராங்கனையாக இருந்தவர். இவர் அப்பா ஆர்மி கர்னல் மற்றும் அண்ணன் இந்தியக் கடற்படை வீரர். விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் இவர்தான் ஸ்கூல் டாப்பர். பெங்களூரு நகரத்திலுள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இவரைக் கண்ட ஃபேஷன் டிசைனர் வென்டெல் ரோட்ரிக்ஸ்தான் இவரை மாடலிங் துறைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். விலங்குகளின் காதலரான இவர், தனது வீட்டில் லேப்ரடார் நாயை வளர்க்கிறார். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்பு உணர்வு மக்களுக்கு அவசியம் என்பதால், இவர் பறவை மற்றும் விலங்குகளுக்குத் தனது வீட்டின் முன் புறத்தில் தண்ணீர் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அனுஷ்காவுக்கு பாகிஸ்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம் இருக்கிறதாம். தனது கல்லூரி படிப்பை முடிக்கும்போது பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்திருக்கிறது. 'தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்', `லைஃப் இஸ் பியூட்டிஃபுல்', `இன் தி மூட் ஃபார் லவ்', `ஃபிஷ் டாங்க்', `ஜப் வீ மெட்', 'சக் தே', `தில் சே' ஆகிய படங்கள் அனுஷ்காவின் ஆல்டைம் ஃபேவரைட்!. 

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப் #BollywoodHeroins

ஹாங்காங்கில் பிறந்து, ஹவாயில் வளர்ந்த கத்ரீனா, தன் குழந்தைப் பருவத்தைக் கிட்டத்தட்ட 18 நாடுகளில் கழித்திருக்கிறார். லாஸ் ஏஞ்சலஸ் கத்ரினாவின் ஃபேவரைட் ஹாலிடே ஸ்பாட். வருடத்துக்கு ஒருமுறையாவது இங்கு சென்று வருவது வழக்கம். கல்லூரி தினங்களில் தன் நண்பர்களுக்கு பிரேக்அப் அட்வைஸ் சொல்வதில் பக்கா கில்லாடியாக இருந்தவர், 'ரன்பீர் கபூருடன் நடந்த கசப்பான சம்பவத்திலிருந்து மீள்வதற்காகவே திரைப்படங்கள் அதிகமாகப் பார்க்கிறேன்' என்கிறார். தனது படங்களில் வரும் சண்டைக் காட்சிகளில் தானே நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில், அதற்காகப் பல மாதங்கள் ஆனாலும், பயிற்சியை கைவிடாது செய்பவர் கத்ரீனா. தற்போது, சினிமாவுக்கு பிரேக் கொடுத்துவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இதுதொடர்பாக லண்டனில் பல்வேறு பிசினஸ் மீட்டிங்களில் விசிட் அடிக்கிறார்.   

அலியா பட்

அலியா பட்

அலியாவின் அம்மா ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர், அப்பா குஜராத்தைச் சேர்ந்தவர். சார்க்கோல் பெயின்டிங் (Charcoal Painting) மற்றும் ப்ரோ ஹேண்ட்பால் (Pro handball) ஆகிய இரண்டும்தான் அலியாவின் ரிலாக்ஸ் டாஸ்க்ஸ். பிரபல நடிகர் இம்ரான் ஹாஷ்மி இவருக்கு நெருங்கிய சொந்தம். இரவு முழுவதும் பார்ட்டி, பகல் முழுவதும் தூக்கம்... என சிம்பு ஸ்டைலைப் பின்பற்றுபவர். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதே நடிக்க வந்துவிட்டதால், பிறகு படிப்பைத் தொடர முடியவில்லை. எனினும் பொது அறிவுப் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம். கூடிய விரைவில் கல்லூரிக்குச் சென்று தனது முழுநேர படிப்பைத் தொடர வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறதாம். பீட்டாவுக்கு ஆதரவு அளித்துவரும் அலியா, `வீகன்' டயட்டை ஃபாலோ செய்பவர். அதாவது, முட்டை, இறைச்சி, பால், வெண்ணை, நெய் போன்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதில்லை! 

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

கல்லூரி தினங்களில் மாநில அளவிலான பேட்மின்டன் பிளேயராக இருந்தவர் தீபிகா படுகோன். தந்தை பிரகாஷ் படுகோன் 1980-ம் ஆண்டு இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றவர். தீபிகாவின் தங்கை அனிஷா படுகோன் கோல்ஃப் வீராங்கனை ஆவதற்கான முயற்சிகளில் இருக்கிறார். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் 10 நடிகைகளில் தீபிகா படுகோன் ஒருவர். தற்போது, ஹாலிவுட்டிலும் தடம்பதிக்கவிருக்கிறார். 'ஜுஜுட்சு' (Jujutsu) எனும் ஜப்பானிய தற்காப்புக் கலை, வாள் சண்டை மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தவர். இவருக்கான பிரத்யேக உடைகளை 'சாரா' எனும் நிறுவனம் தயாரித்துக் கொடுக்கிறது. தனக்கென சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார்.  

சோனம் கபூர்

சோனம் கபூர் #BollywoodHeroins

அனில் கபூரின் மகளாக இருந்தாலும், சினிமாவில் தன்னிச்சையாகத் தெரிய வேண்டும் என்பது சோனம் கபூரின் ஆசை. இவர் பணத்துக்குக் கஷ்டப்பட்ட தருணங்களில் ஹோட்டல் பணியாளராக வேலை செய்தவர். தனது பேட்டிகளில் அரசியல் குறித்த பார்வையையும் நாட்டு நடப்பையும் பேசுவார். 'நடிகைக்கு சமூகப் பொறுப்பு முக்கியம்' என்பது சோனம் கபூரின் கொள்கை. ஃபேஷன் டிசைனராக வேண்டும் என்பதே இவரது ஆசை. அனில் கபூரைக் காண இவரது வீட்டுக்கு வந்த இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, சோனம் கபூரைத் தனது படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால், சோனம் கபூர் மறுத்துவிட்டார். ஒன்றரை வருடங்கள் போராடி, 'ப்ளாக்' மற்றும் 'சாவரியா' ஆகிய படங்களில் நடிக்க வைத்தார் பன்சாலி. இந்தப் படங்களுக்காக சோனம் அச்சமயத்தில் 30 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டியிருந்தது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!