தீபிகா - ரன்வீர் திருமணம்; ராஜமௌலி படத்தில் கீர்த்தி சுரேஷ்..! #WoodBits

தீபிகா - ரன்வீர் திருமணம்; ராஜமௌலி படத்தில் கீர்த்தி சுரேஷ்..! #WoodBits

தீபிகா-ரன்வீர் திருமணம்:

தீபிகா - ரன்வீர்

ஷாருக்கான் நடித்து வெளிவந்த `ஓம் சாந்தி ஓம்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அதே காலகட்டத்தில் இந்திப் படங்களில் அறிமுகமானவர் ரன்வீர் சிங். இவர் 'ஃபைண்டிங் ஃபேனி', `கோலியோன் கே ராஸ்லீலா : ராம்லீலா’, `பாஜிராவ் மஸ்தானி', `பத்மாவத்’ ஆகிய படங்களில் தீபிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். தீபிகா, ரன்வீர் இருவருக்குமிடையே காதல் என்று பேசப்பட்டுவந்த நிலையில் இருவரின் வீட்டார்களும் திருமண ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்களாம். வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம். அதைத் தொடர்ந்து மும்பையில் சினிமா நண்பர்களுக்காக ஒரு வரவேற்பும் தீபிகா உறவினர்களுக்காகப் பெங்களூருவில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட்டுள்ளனர் எனப் பாலிவுட் மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

ராஜமௌலி படத்தில் கீர்த்தி சுரேஷ்:

கீர்த்தி சுரேஷ்

சென்ற வருடம் உலகளாவிய அளவில் வெற்றிபெற்ற ஒரு படமாக விஸ்வரூபம் எடுத்தது `பாகுபலி 2'. அந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து `ஆர்.ஆர்.ஆர்’ (RRR) என்ற படத்தை இயக்கவுள்ளார். `நடிகையர் திலகம்' படத்துக்குப் பிறகு, தெலுங்கில் எந்தப் படமும் ஒப்பந்தம் செய்யாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷை இப்படத்துக்குக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்போகிறார் ராஜமௌலி என்ற செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. 2020-ல் படம் ரிலீஸுக்குத் தயாராகும் என்ற செய்திகளும் வந்துள்ளன.

செஞ்சுரி அடித்த சஞ்சு:

சஞ்சு

ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ப்ரேஷ் ராவல், தியா மிர்சா நடிப்பில் சர்ச்சை நாயகன் சஞ்சய் தத்தின் பயோபிக்கான `சஞ்சு'  சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. மக்களிடம் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த இப்படம் வெளியான மூன்று நாள்களிலேயே இந்தியா முழுக்க 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலைக் குவித்துள்ளது. ரன்பீர் கபூர், ராஜ்குமார் ஹிரானி பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்கள். இதற்கு முன்னர், பெண் இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் அலியாபட் நடித்து வெளியான `ராஸி' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மே மாதம் வெளியான இந்தத் திரைப்படம் 50 நாள்களுக்கு மேலாக ஓடி 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த வருடத்தின் பாலிவுட்டின் சிறந்த படங்களில் ஒன்று என `ராஸி' பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

லீக்கான அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தின் டைட்டில்:

அவெஞ்சர்ஸ்

அண்மையில் வெளியாகி சர்வதேச அளவில் பலகோடி ரூபாய் வசூலை அள்ளிய படம் `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்'. அவெஞ்சர்ஸ் படத்தின் இறுதி அத்தியாயம் இரண்டு பாகங்களாக வெளிவரும் எனப்  படத்தின்  இயக்குநர்கள்  ஆண்டனி ரூசோ மற்றும் ஜோ ரூசோ   முன்னரே அறிவித்திருந்தனர். அதேபோல் `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' வெளியானது. இந்த அத்தியாயத்தின் இறுதி பாகம் 2019 கடைசியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்ற யூகங்கள் சமூக வலைதளங்களில் டிஸ்கஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ட்ரென்ட் ஒபோலாக் தனது வலைதளத்தில் தான் வேலை செய்யும் படங்கள் என்று `அவெஞ்சர்ஸ்:எண்டு கேம்' என அந்தப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு படக்குழு எந்த ஒரு மறுப்பும் தராதது ரசிகர்களை நம்ப வேண்டுமா? கூடாதா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

துல்கர் சல்மானின் இந்திப் பட டிரெய்லர்:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!